தியு யெ மொன் துவா
Appearance
தியொ யெ மோன் த்ருவா (Dieu et mon droit, பிரெஞ்சு உச்சரிப்பு: [djø e mɔ̃ dʁwa]) என்பது இங்கிலாந்தில் பிரித்தானிய மன்னரின் குறிக்கோளுரை ஆகும்.[1] இது பிரித்தானிய அரச மரபுச்சின்னத்தில் கேடயத்தின் கீழுள்ள சுருள்பட்டியில் எழுதப்பட்டுள்ளது.[2] இக்குறிகோளுரை ஆளுவதற்கான பேரரசரின் தெய்வீக உரிமையை குறிக்கிறது.[3] இதனை முதன்முதலாக இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்டு சண்டைகளின்போது பயன்படுத்தி வந்ததாகவும் பின்னர் இதையே இங்கிலாந்து அரசாட்சியின் அலுவல்முறை அரச மரபுச்சின்னத்தில் குறிக்கோளுரையாக 15வது நூற்றாண்டில் ஐந்தாம் ஹென்றி ஏற்றுக்கொண்டதாகவும் கருதப்படுகிறது.[3]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ British Royal Coat of Arms and Motto பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம் Accessed 23 December 2008
- ↑ "Coats of arms". royal.gov.uk. பார்க்கப்பட்ட நாள் 25 April 2009.
- ↑ 3.0 3.1 Dieu Et Mon Droit on British Coins Accessed 23 December 2008