நடத்தை
நடத்தை (behavior, அல்லது behaviour) என்பது தனிநபர்கள், உயிரினங்கள், அவை சார்ந்திருக்கும் தொகுதிகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் ஆகியவற்றின் அவற்றையும், அவை இருக்கும் சுற்றுச்சூழலையும் சார்ந்த செயல்கள் அல்லது பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பு ஆகும். சுற்றுச்சூழலானது ஏனைய உயிரினங்கள், வேறு தொகுதிகள், மற்றும் இயற்பியல் சூழல் காரணிகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றது. சூழலில் இருந்து கிடைக்கும் பல்வேறுபட்ட உள்ளீடுகள் அல்லது தூண்டல்களுக்கேற்ப ஏற்படும் உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ, உணர்வுபூர்வமானதாகவோ அல்லது ஆழ்மனதில் தோன்றுவதாகவோ, மறைவானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ, தன்னிச்சையாகவோ அல்லது தன்னிச்சையின்றியோ எதிவினைகள் எனலாம்.[1] அதாவது ஒரு செயல் அல்லது எதிர்ச் செயலைக் குறிக்கும் என எளிமையாகக் கூறலாம்.
நடத்தை சுற்றுச்சூழல்
[தொகு]ஒரு உயிரியல் சூழலில் நடத்தை எவ்வாறு துல்லியமாக வரையறுக்க வேண்டும் என்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், விஞ்ஞான இலக்கியத்தின் பகுப்பாய்வு அடிப்படையில், "நடத்தை என்பது முழுமையான உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புற தூண்டுதலுக்கான செயல்கள் அல்லது செயலற்ற தன்மையாகும்" என்று ஒரு பொதுவான விளக்கம் வைக்கப்படுகிறது[2] தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரு பரந்த விளக்கமானது கொடுக்கப்படுகையில், ஒரு தனியனின் வாழ்நாளின் போது, சூழலுக்கேற்ற இசைவாக்கமாக ஏற்படும் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றங்களாகக் நடத்தையைக் கொள்ளலாம். அதனால் வேறு உயிர்வேதியியல், உடற்றொழிலியல் மற்றும் விருத்தி தொடர்பான மாற்றங்களிலிருந்து நடத்தை என்பது வேறுபடுகின்றது. அவற்றில் விருத்தி தவிர ஏனைய உயிர்வேதியியல், உடற்றொழிலியல் மாற்றங்கள் மிகவும் வேகமாக நிகழ்பவையாகும்.[3][4] நடத்தை உடன்பிறந்ததாகவோ, அல்லது கற்ருக்கொண்டதாகவோ இருக்கலாம்.
நடத்தை என்பது சூழலுடனான தொடர்புகளை மாற்றக்கூடிய ஒரு உயிரினத்தின் எந்த நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. நடத்தை உயிரினத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியீடுகளை வழங்குகிறது.[5]
உயிரியல் விளக்கம்
[தொகு]விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும் நரம்புத் தொகுதியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல் தன்மை அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் தங்கியுள்ளது. பொதுவாக, சிக்கலான நரம்புத் தொகுதிகளுடன் கூடிய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக் கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி கொண்டவையாக இருக்கின்றன.
நடத்தை வகைகள்
[தொகு]நடத்தல், பேசுதல், உடை அணிதல் ஆகியவை வெளிப்படையாக அடையாளப்படுத்தக்கூடிய நடத்தைகள். சிந்தித்தல், பயமடைத்தல் போன்றவை இலகுவாக அவதானிக்க முடியாத தனிமை நடத்தைகள் ஆகும் பொதுவாக ஒரு செயல் சூழல் தொடர்பிலேயே ஏற்படுகிறது. நடத்தை, உணர்வு நிலையிலோ, உணர்வற்ற நிலையிலோ நடைபெறலாம். அத்துடன் இது வெளிப்படையாக அல்லது மறைவாக, விரும்பி அல்லது கட்டாயப்படுத்தப்பட்டும் கூட நடைபெறக்கூடும்.
மனித நடத்தை
[தொகு]மனித நடத்தை, நாளமில்லா அமைப்பு மற்றும் நரம்பு மண்டலத்தால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையில் சிக்கலானது அதன் நரம்பு மண்டலத்தின் சிக்கலான தன்மையுடன் தொடர்புடையது என்று பொதுவாக கூறப்படுகிறது . பொதுவாக, மிகவும் சிக்கலான நரம்பு மண்டலங்களுடன் கூடிய உயிரினங்கள் புதிய மறுமொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான அதிக திறன் கொண்டவை, இதனால் அவர்கள் நடத்தையை சரிசெய்யலாம்.[6]
விலங்கு நடத்தை
[தொகு]விலங்கு நடத்தை பற்றிய ஆய்வு,( ethology) மனிதப் பண்பியல் எனப்படும்,இது ஒரு பரந்த புலமாகும், இது இயல்பான மற்றும் கற்றல் நடத்தைகள் மற்றும் அசாதாரண நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கியது.மனிதர்கள் உட்பட அனைத்து விலங்குகளும், சில மிகவும் வித்தியாசமான மற்றும் வேடிக்கையான நடத்தைகளை கொண்டுள்ளது . விலங்குகளை படிப்பதில், அவற்றின் நடத்தைகளின் அடிப்படையில், அவற்றின் உடற்கூறுகளை விடவும் அதிகமானோ அல்லது அதற்கும் அதிகமானவற்றையோ அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகளை வரையறுக்கிறோம். இது குறிப்பாக நடத்தைகளை பாதிக்கும் இயற்கை சூழலை வலியுறுத்துகிறது.
ஒரு உள்நாட்டு நாய் மற்றும் ஒரு ஓநாய் இடையே நடத்தை வேறுபாடுகளை ஆராய்ந்தால் அவை மிகவும் நெருக்கமாக இருந்தாலும், அவைகளின் பொதுவான நடத்தைகள் மனித செல்வாக்கால் பிரிக்கப்படுகின்றன. பரிணாம உயிரியல், விவசாயம் மற்றும் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சூழலியல், மற்றும் உளவியலின் துறைகளில் கால்நடை நடத்தையின் இயக்கவியல் புரிந்துகொள்ளுதலாக உள்ளது.
நுகர்வோர் நடத்தை
[தொகு]நுகர்வோர் நடத்தை என்பது, நுகர்வோர் நடந்துகொள்கிற செயல்முறைகளையும், உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அவர்களது எதிர்வினைகளையும் குறிக்கிறது.[7] அவர்கள் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதிலும், நுகர்வதிலும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது தொடர்பானதாக இந்த நுகர்வோர் நடத்தை அமையும்.[8] அவர்களது தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, அவற்றை நிறைவு செய்துகொள்ளும் முகமாக அவர்களது நடத்தை அமையும். நுகர்வோர் நடத்தை என்பது அவர்கள் வாடிக்கையாளர்களாக நடந்துகொள்ளும் செயல்முறையாகும். இது வாங்கப்பட்ட பொருட்களின் வகைகள், செலவு செய்யப்படும் தொகை, கொள்முதல் அதிர்வெண் மற்றும் கொள்முதலைச் செய்வதா இல்லையா என்ற முடிவை எடுப்பதில் என்ன விடயங்கள் தாக்கம் செய்கின்றன என்பதில் தங்கியிருக்கும். உள்புற மற்றும் வெளிப்புற காரணிகள் பலவும் இவ்வாறான நுகர்வோர் நடத்தையில் செல்வாக்குச் செலுத்துகிறது.[8] உட்புறக் காரணிகளாக மனோபாவங்கள், தேவைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் மற்றும் புலனுணர்வு செயல்முறைகள் ஆகியவையும், வெளிப்புறக் காரணிகளாக சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள், சமூக மற்றும் பொருளாதார காரணிகள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்றவையும் அமையும்.[8] கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பேர்னர், உடல்சார்ந்த காரணிகளும் நுகர்வோர் நடத்தையைப் பாதிக்கும் என்கின்றார். எடுத்துக்காட்டாக ஒரு நுகர்வோர் பசியோடு இருந்தால், அந்த பசி உணர்வு உணவை வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும்.[9]
நிறுவன மேலாண்மை நடத்தைகள்
[தொகு]இவ்வகையான நடத்தைகள் விருப்பு, வெறுப்பு போன்றவற்றுடன் தொடர்புள்ளதாக இருக்கும். மேலாளர்கள் பொதுவாக விரும்பத்தக்க விளைவுகளையே கவனிக்கிறார்கள். ஆனாலும் நடத்தை வடிவங்கள் இதனை மாற்றலாம். இந்த நடத்தைகளைக் கொண்டே, விரும்பிய விளைவுகள் எவ்வளவு தரம், அல்லது எவ்வளவு விரைவாக மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என அறியலாம். ஒரு நடத்தை நிகழ்வதற்கு முன்னர், அந்த நடத்தையைத் தூண்டக்கூடிய முன் நிகழ்ச்சிகள் கவனிக்கப்படும். நடத்தை நிகழ்ந்த பின்னர், அதற்கான பின்விளைவுகள் ஏற்படும். விரும்பிய நடத்தை உண்மையில் ஏற்படும் பொழுது விரும்பிய விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் பாராட்டுகள் கிடைக்கிறது. விரும்பாத நடத்தை நிகழ்வு ஏற்படும் பொழுது அதன் விளைவாக தண்டனைகள் கிடைக்கிறது. இவை அனைத்தும் உள்ளடக்கியது நிறுவன மேலாண்மை நடத்தைகள் ஆகும்.
சமூக நடத்தைகள்
[தொகு]ஒரே இனத்தில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனியன்களுக்கிடையிலான நடத்தை சமூக நடத்தை (Social behavior) ஆகும். இவ்வகையான சமூக நடத்தை சில வகை பாக்டீரியாக்கள், பூச்சிகள், மனிதன் உட்பட பல்வேறு வகையான உயிரினங்களுக்கு இடையிலும் காணப்படுகின்றது.[10]
சமூக நடத்தை என்பது ஒரு நபர் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்தும் தொந்தரவு, அச்சத்தை ஏற்படுத்துதல், துன்பம்விளைவித்தல் போன்றவைகளையும் உள்ளடக்கியுள்ளது. பல வெளிப்படையான குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள், முரண்படுதல், தாக்குதல், அச்சுறுத்தும் பிற நடத்தைகள் போன்றவையும் சமூக நடத்தைகளில் அடங்குபவையே.
இங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நடத்தைகள் மற்றும் செயல்கள் சமூகத்தின் நடத்தை என வகைப்படுத்தப்படுகின்றன, குற்றம் செய்பவர்களுக்கும் தீவிரமாக செயல்படுபவர்களுக்கும் இடையிலான தீவிரத்தன்மை. பொதுவாக, தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகளை சமுதாய நடத்தைகள்என்று கருதப்படுகிறது. தனிநபர் அல்லது குழுவினருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள், சொத்து சேதம் , அல்லது பொதுமக்கள் தொல்லை. இந்த நடவடிக்கைகள் வீட்டில் அல்லது சுற்றுப்புறத்தில், பணியிடத்தில், ஒரு பள்ளியில் அல்லது மற்ற பொது மன்றங்களில் உள்ள பல்வேறு வகையான அமைப்புகளில் ஏற்படலாம். சட்ட விரோதமான செயல்கள், மற்றவர்களைத் தொந்தரவு செய்வது, அக்கம் பக்கத்தின் அல்லது சமூகத்தின் சூழலை சீர்குலைத்தல் போன்ற பல்வேறு வகையான சமூக விரோத நடவடிக்கைகளில் அடங்கும். எந்தவொரு சரியான வரையறை அல்லது பட்டியலையும் பட்டியலிடவில்லை ஆனால், அனைத்து செயல்களும் எதிர்வாத சமூகமாக கருதப்பபட்டு பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன; மிரட்டல், அச்சுறுத்தல்கள், வாய்மொழி துஷ்பிரயோகம், மிரட்டுதல் மற்றும் விபத்து, தாக்குதல், இரைச்சல் மீறல்கள், பொது நச்சுத்தன்மையும், தொந்தரவும், எரிமலை, இனப்படுகொலை, கடைப்பிடித்தல், துரோகம் செய்தல், பொருட்களை ஆபத்தில் தள்ளி, விபச்சாரம் செய்தல். பெரும்பாலும் இந்த நடவடிக்கைகள் மற்றும் நடத்தைகள் ஒரு குறிப்பிட்ட நபரின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த சமூக அம்சங்களைக் குறைக்கும்.
சுகாதார நடத்தைகள்
[தொகு]உடல் நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றிய ஒரு நபரின் நம்பிக்கைகளையும் செயல்களையும் குறிப்பது சுகாதார நடத்தைகள் ஆகும். ஆரோக்கியமாக வாழும் முறையைப் பராமரிப்பதில் சுகாதார நடத்தைகள் நேரடிக் காரணிகளாக அமைகின்றன. உடல்நல நடத்தைகள் நாம் வாழும் மற்றும் வேலை செய்யும் சமூக, கலாச்சார மற்றும் உடல் சூழல்களால் பாதிக்கப்படுகின்றன. அவை தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் வெளிப்புற கட்டுப்பாடுகளால் வடிவமைக்கப்படுகின்றன. நேர்மறையான நடத்தைகள் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன, அதே நேரத்தில் எதிர்மறையான நடத்தைகள் ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியன.[11] சுகாதார நடத்தைகள் மக்கள் தொகையின் ஆரோக்கியத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கின்றன. சில நடத்தைகள் நிகழ்வதற்கும், நோய் வளர்ச்சிக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி காரணமாக, இந்த குறிகாட்டிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் சுகாதார ஊக்குவிப்பு நடத்தைகளின் நன்மைகள் ஆகியவற்றை மறைத்துவிடலாம். சுகாதார நடத்தைகள் தனித்து நிகழாது, சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளால் தாக்கத்திற்குட்பட்டு அல்லது தடுக்கப்பட்டு நிகழ்கின்றன.
பலவிதமான ஆய்வுகள், சுகாதார நடத்தைகள் மற்றும் உடல்நல விளைவுகளுக்கு இடையிலான உறவை ஆராய்ந்து, நோயுறும் வீதம் மற்றும் இறப்பு வீதம் ஆகியவற்றில் சுகாதார நடத்தைகளின் பங்கை நிரூபித்துள்ளன.[12] இப்படியான ஆய்வுகள் நோயுறும் வீதத்தைக் குறைக்கவும், அதன் மூலம் நீண்ட காலம் வாழவும் ஏழு வாழும் முறைகளை கண்டறிந்தது.[13]
- ஏழு மணித்தியாலங்களுக்குக் குறையாமல் ஒன்பது மணித்தியாலங்களுக்கு அதிகரிக்காமல் தினமும் நித்திரை கொள்வது.
- நாள் தவறாது காலை உணவை உட்கொள்வது.
- இரு முதன்மையான உணவுகளுக்கிடையில், வேறு தின்பண்டங்களை உண்பதைக் குறைத்தல் அல்லது முற்றாகத் தவிர்த்தல்.
- விரும்பத்தக்க உடல் எடையை பராமரித்தல் (ஆண்களில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட 5% ஐ விடக் குறையாமலும், 19.99% ஐ விட அதிகரிக்காமலும், பெண்களில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட 5% ஐ விடக் குறையாமலும், 9.99% ஐ விட அதிகரிக்காமலும் உடல் எடையைப் பேணல்).
- தொடர்ந்து, ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல்.
- மது உட்கொள்வதைத் தவிர்த்தல், அல்லது மிதமாக உட்கொள்ளல்
- புகைபிடித்தலை முற்றாகத் தவிர்த்தல்
சுகாதார நடத்தைகள் தனிநபரின் வாழ்க்கை தரத்தில் செயல்விளைவை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம் தீவிரமான நோய்கள் வருவது தாமதப்படுத்தப்பட்டு, நீண்ட கால வாழ்க்கைக்காலம் கிடைக்கிறது. புகைபிடித்தல், மது அருந்துதல், சரியான உணவுப் பழக்கவழக்கமின்மை, முதன்மை பராமரிப்பு சேவைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளிகள் போன்றவை சுகாதாரத்தின் குறைபாட்டையே கொண்டிருக்கும். மேலும், இத்தகைய நடத்தைகளை மாற்றுவது மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக, அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் நிறுவனம், உடல்நலம் முன்னேற்றமடைவதற்கும் நோய்த் தடுப்பிற்கும், புகையிலை, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமை, அதிகரிக்கும் உடற்பயிற்சி, தரமான உணவு, என்பன முக்கிய காரணங்கள் எனக் கூறுகிறது.
சமூக அறிவியல் நோக்கில் நடத்தை
[தொகு]மனிதர் தொடர்பிலும், ஏனைய உயிரினங்கள், பொருள்கள் தொடர்பிலும், நடத்தைகளை வழமையானவை, வழமைக்கு மாறானவை, ஏற்றுக்கொள்ளத் தக்கவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை எனப் பிரித்துக் காண முடியும். மனிதர், நடத்தைகளின் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை சமூக நெறிமுறைகளின் அடிப்படையில் தீர்மானிப்பதோடு, அந் நடத்தைகளைச் சமூகக் கட்டுப்பாடுகளினால் நெறிப்படுத்துகின்றனர். சமூகவியலில், நடத்தை மனிதனின் முக்கிய அடிப்படைச் செயலாகக் கருதப்படுகிறது. விலங்கின நடத்தைகளை, ஒப்பீட்டு உளவியல், நடத்தையியல், நடத்தைச் சூழலியல், சமூக உயிரியல் ஆகிய துறைகள் ஆய்வு செய்கின்றன.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elizabeth A. Minton, Lynn R. Khale (2014). Belief Systems, Religion, and Behavioral Economics. New York: Business Expert Press LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60649-704-3.
- ↑ Levitis, Daniel; William Z. Lidicker, Jr; Glenn Freund (June 2009). "Behavioural biologists do not agree on what constitutes behaviour". Animal Behaviour 78: 103–10. doi:10.1016/j.anbehav.2009.03.018. http://academic.reed.edu/biology/courses/bio342/2010_syllabus/2010_readings/levitis_etal_2009.pdf.
- ↑ Karban, R. (2008). Plant behaviour and communication. Ecology Letters 11 (7): 727–739, [1] பரணிடப்பட்டது 2015-10-04 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Karban, R. (2015). Plant Behavior and Communication. In: Plant Sensing and Communication. Chicago and London: The University of Chicago Press, pp. 1-8, [2].
- ↑ Dusenbery, David B. (2009). Living at Micro Scale, p. 124. Harvard University Press, Cambridge, Mass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03116-6.
- ↑ Gregory, Alan (2015). Book of Alan: A Universal Order. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5144-2053-9.
- ↑ Dowhan, David (June 1, 2013). [Retrieved from http://web.b.ebscohost.com/ehost/pdfviewer/pdfviewer?sid=f98b06cd-8924-4f6d-89f8-245bde9615f8%40sessionmgr198&vid=2&hid=124 "Hitting Your Target"]. Marketing Insights. Retrieved from http://web.b.ebscohost.com/ehost/pdfviewer/pdfviewer?sid=f98b06cd-8924-4f6d-89f8-245bde9615f8%40sessionmgr198&vid=2&hid=124. பார்த்த நாள்: 2016-03-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 8.0 8.1 8.2 Szwacka-Mokrzycka, Joanna (2015). "TRENDS IN CONSUMER BEHAVIOUR CHANGES. OVERVIEW OF CONCEPTS.". Acta Scientiarum Polonorum. Oeconomia. http://web.a.ebscohost.com/ehost/detail/detail?sid=83b2b7c5-d287-4702-8baf-b8b9d6665410%40sessionmgr4004&vid=0&hid=4112&bdata=JnNpdGU9ZWhvc3QtbGl2ZSZzY29wZT1zaXRl&preview=false#AN=112782281&db=bth. பார்த்த நாள்: 2016-03-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Perner, Lars (2008). "Consumer Behaviour". Consumer Psychologist. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.
- ↑ "Social Behavior - Biology Encyclopedia - body, examples, animal, different, life, structure, make, first". www.biologyreference.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
- ↑ "Health behaviours". statcan.gc.ca. 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
- ↑ Mildred Blaxter (1990). Health and Lifestyles.
- ↑ Gary D. Strunk. "Seven simple suggestions". பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]• What is behavior? Baby don’t ask me, don’t ask me, no more at Earthling Nature. • www.behaviorinformatics.org • Links to review articles by Eric Turkheimer and co-authors on behavior research