உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sivakumar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1|2



2009 த.வி வேலைத்திட்டம்

[தொகு]

வணக்கம் சிவக்குமார்:

உங்களையும் உங்கள் நண்பர்களையும் இந்த ஆண்டு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

பாராட்டுக்கள்

[தொகு]

சிவா, நீங்கள் அருமையாக வலைவாசல்:விலங்குகள் பகுதியைத் தொடங்கியுள்ளீர்கள். செய்யவேண்டிய ஒன்று. தேர்ந்து செயலாற்றத் தொடங்கியமைக்கு பாராட்டுகள்! இதே போல ஏற்கனவே உள்ள கணிதம் பற்றியதை விரிவாக்க வேண்டும், இன்னும் அறிவியல் போன்று பல தலைப்புகளுக்கு வலைவாயில்கள் அமைக்க வேண்டும். வலைவாயில் என்றோ, வாயில் என்றோ சீராக பெயர் சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 19:25, 31 டிசம்பர் 2008 (UTC)

நன்றி செல்வா. இந்த ஆண்டு விலங்கியல் பகுதியை மேம்படுத்த வேண்டும். --சிவக்குமார் \பேச்சு 16:04, 1 ஜனவரி 2009 (UTC)


நல்வரவு சிவகுமார். உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி. --Natkeeran 00:00, 5 மார்ச் 2009 (UTC)
வாங்க, வாங்க, சிவா. இரு நாட்களுக்கு முன்னர்தான் என்ன ஆளைக் காணோம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். :-) -- சுந்தர் \பேச்சு 14:52, 5 மார்ச் 2009 (UTC)
வாருங்கள் சிவா! நானும் தான்சானியாவில் இருந்து திரும்பி வந்த பொழுது பார்த்தேன். நீங்களும் ஒரு மாதமாக காணவில்லை என்று. உங்களை மீண்டும் பார்ப்ப்பதில் மகிழ்ச்சி.--செல்வா 15:59, 5 மார்ச் 2009 (UTC)

நன்றி நற்கீரன், சுந்தர், செல்வா. விரைவில் நானும் உங்களைப் போல் பங்களிக்க முயல்வேன். செல்வா, தாங்கள் தான்சானியா சென்றது குறித்து மகிழ்ச்சி. தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 17:48, 5 மார்ச் 2009 (UTC)

கிளிமஞ்சாரோ மலை ஏறினோம் (நானும் என் மனைவியும் மகளும்). ஆப்பிரிக்காவின் கூரை என்று புகழப்படும் உச்சியாகிய உஃகுரு (Uhuru) முகட்டை எட்டினோம். உயரம் 5895 மீ. எங்கு எப்படி எழுதுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் தமிழ் விக்கியில் குறைந்தது ஒரு 20-30 கட்டுரைகளாவது இதன் அடிப்படையில் எழுத எண்ணியுள்ளேன். குங்குரு, கொலோபசுக் குரங்கு, மூக்குக் கொம்பன் முதலியன இப்படி உந்தப்பட்டு எழுதியதுதான்.--செல்வா 17:56, 5 மார்ச் 2009 (UTC)

welcome

[தொகு]

Thank you for your welcome but i cant understand Tamil. so please make an alternate English welcome -Lee2008 02:32, 10 மார்ச் 2009 (UTC)

Tamil Eelam

[தொகு]

Please can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help.

Our Email is sachein2000@hotmail.co.uk

Sachein 11:21, 10 ஏப்ரல் 2009 (UTC)

வாழ்த்துக்கள்

[தொகு]

சிவா, நீங்கள் 10,000 தொகுப்புக்களைத் தாண்டியதையிட்டு மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 00:58, 7 மே 2009 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் சிவா. நல்லதொரு படிமத்தை உங்கள் 10,000-மாவது தொகுப்பில் சேர்த்துள்ளீர்கள். -- சுந்தர் \பேச்சு 03:38, 7 மே 2009 (UTC)[பதிலளி]
நன்றி மயூரநாதன், சுந்தர். பத்தாயிரத்தை நெருங்கியதைச் சுட்டிக்காட்டிய செல்வாவுக்கும் நன்றிகள். :)--சிவக்குமார் \பேச்சு 18:53, 7 மே 2009 (UTC)[பதிலளி]

10,000 தொகுப்புகள் செய்து ஆக்கம் அளித்த உங்களுக்கு வாழ்த்துகள், சிவக்குமார். விரைவில் 1000 கட்டுரைகளைத் தாண்டி ஆயிரவர் நிலையை எய்த வாழ்த்துகள். 1000 ஐ எட்ட இன்னும் 299 கட்டுரைகள் எழுத வேண்டும் தேவயானி உங்கள் 700 ஆவது யயாதி 701 ஆவது. உங்களைப் பின் தொடர்ந்து நானும் வந்து கொண்டிருக்கின்றேன் :) --செல்வா 23:24, 7 மே 2009 (UTC)[பதிலளி]

புதிய திட்டம்

[தொகு]

சிவா. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

வரவேற்புக்கு நன்றி!

[தொகு]

வரவேற்புக்கு மிக்க நன்றி! :) --Vegpuff 13:56, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

கீழ்பவானி திட்டம்

[தொகு]

சிவா கீழ்பவானி திட்டம் (கால்வாய்) பற்றி ஏதாவது செய்தி தெரியுமா?. என்னிடம் படம் உள்ளது (பெருந்துறை அருகே எடுத்தது) ஆனால் 5 வரி அளவு கூட தகவல் இல்லை. --குறும்பன் 00:45, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

2010 த.வி வேலைத்திட்டம்

[தொகு]

2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:07, 26 டிசம்பர் 2009 (UTC)

நன்றிகள்

[தொகு]

சிவக்குமார், உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நீண்ட காலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். உடன் பங்களிப்பாளர்கள் அனைவரதும் ஆதரவுடன் இது நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 18:40, 11 ஜனவரி 2010 (UTC)

வணக்கம்

[தொகு]

நடுவில் உள்ள சிவப்பு நிற சட்டைதான் நான் சிவகுமார் ஐயா--Msudhakardce 08:50, 5 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்கள் சேர்ந்தெடுப்பு

[தொகு]

சிவா உங்கள் ஒப்புதலுக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரைச் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) பட்டியலில் (பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்) சேர்த்துள்ளேன். மயூரநாதன் உங்கள் பெயரைச் சேர்க்கப் பரிந்துரைத்தார். நானும் சேர்க்க நினைத்திருந்தும் ஏனோ விடுபட்டுப்போனது. மன்னிக்கவும்.--செல்வா 23:27, 18 பெப்ரவரி 2010 (UTC)

முதற்பக்கம்

[தொகு]

ஐயா, முதற்பக்கம் உள்ள உங்களுக்கு தெரியுமா பகுதியில் நம் கருத்துகளை இடம் பெறச்செய்வது எப்படி?--Msudhakardce 11:16, 8 மார்ச் 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

[தொகு]

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.

[தொகு]

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

வணக்கம் சிவா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவா பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:55, 25 மே 2010 (UTC)[பதிலளி]

பறவைகள் பற்றிய நூல் குறிப்பு

[தொகு]

நீங்கள் என் உரையாடல் பக்கத்தில் ரத்னம் அவர்களின் பறவைகளைப் பற்றிய நூலை தமிழம் வலைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தததைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார். மிகவும் பயனுடைய நூல்.--செல்வா 03:24, 26 மே 2010 (UTC)[பதிலளி]

சிவா, நீங்கள் இணைப்புக் கொடுத்திருந்த பறவைப் பெயர்கள் பற்றிய நூல் மிகவும் பயனுள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலை சென்னையில் ஒரு புத்தக நிலையத்தில் கண்டு ஒரு பிரதி வாங்கினேன். தவியில் பறவைகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியபோது பயன்பட்டது. மயூரநாதன் 20:02, 26 மே 2010 (UTC)[பதிலளி]
ஆமாம், மயூரநாதன் சில உரையாடல் பக்கங்களில் குறிப்பிட்டும் எழுதியிருந்தார். --செல்வா 20:12, 26 மே 2010 (UTC)[பதிலளி]

அடையாள அட்டைக்கான தகவல்கள்

[தொகு]

சிவக்குமார்,

  • நீங்கள் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்கள் அல்லவா? உங்களுக்கு அடையாள அட்டை உள்ளதா? இல்லையென்றால், மிகவும் வேகமாகச் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள URL-ஐ ஒற்றி இன்னொரு புதிய URL-இல் அதை ஒட்டவும். பிறகு Enter செய்யவும். இப்போது ஒரு Member Details படிவம் வரும். அதில் சில புலங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டும் சில காலியாகவும் இருக்கும். காலியானவற்றை உடன் நிரப்பி (உங்கள் குருதி வகையும், புகைப்படமும் அவசியம்) Update செய்யுங்கள்.
  • URL - [ http://www.wctc2010.org/idcards/updatedetails.php?a=bWVtYmVyIHVwZGF0ZSBpbmZvMTI3Njg0ODY0NA%3D%3D&z=Mjc0MV8xMjc2ODQ4NjQ0 ]
  • இன்று மாலைக்குள் செய்ய வேண்டிய வேலை இது.
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். Don't bother.

நன்றி. --பரிதிமதி 08:32, 19 ஜூன் 2010 (UTC)

நலமா?

[தொகு]

உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன், சிவக்குமார். எப்படி இருக்கின்றீர்கள்? பணியழுத்தம் அதிகமா? அவ்வளவாகக் காண முடிவதில்லையே? இம்முறை கோவை வந்தபொழுது உங்களைக் காண முடியவில்லை.--செல்வா 18:13, 21 ஜூலை 2010 (UTC)

நன்றி

[தொகு]

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கி மாரத்தான்

[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பாராட்டு

[தொகு]

விக்கிப்பீடியாவுக்கு உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். வியப்பும் மகிழ்ச்சியும். பாராட்டுக்கள். என் இணையப் பயிற்சி சமீபகாலத்தில் தான். சில விஷயங்களை விக்கிப்பீடியாவுக்குச் செய்ய நினைக்கிறேன். பார்க்கலாம். --Perumalmurugan 05:58, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி

[தொகு]

சிவக்குமார், உங்களை மீண்டும் விக்கியில் பார்ர்ப்பது பெரு மகிழ்ச்சியாய் உள்ளது. பணிச்சுமைகளால் அதிகம் பங்களிக்க முடியாமல் இருந்தீர்கள் என அறிந்தேன், எனவேதான் தொந்தரவு தரவில்லை :) கலிபோர்னியாவில் ஒற்றை உவரேரியைப் பற்றிய குறுங்கட்டுரை எழுதும் பொழுதும், பறவை, நீர்நிலைகள் பற்றிய கட்டுரைகள் எழுதும்பொழுதும் உங்கள் நினைவு தவறாமல் வந்து நீங்கள் ஆற்றிய நற்பணிகள் நினைந்து உள்ளம் இனிக்கும் :) இயன்றபொழுது மீண்டும் வந்து உதவுங்கள் சிவக்குமார். விரைவில் நாம் 50,000 கட்டுரைகளை எட்ட வேண்டும் :)--செல்வா 21:59, 7 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி, செல்வா. வரும் கிழமைகளில் விக்கிக்கு பங்களிப்பை அதிகரிக்க எண்ணியுள்ளேன். தங்களின் அன்பு எனக்கு இன்னும் அதிகமாக ஊக்கத்தைத் தருகிறது. --சிவக்குமார் \பேச்சு 17:00, 10 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்று! நன்று!! சிவக்குமார்! இரட்டிப்பு மகிழ்ச்சி. --செல்வா 20:12, 10 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
சிவா, வாங்க வாங்க. :) -- சுந்தர் \பேச்சு 12:42, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர் அறிமுகம்

[தொகு]
  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:34, 2 ஏப்ரல் 2011 (UTC)

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

[தொகு]

வணக்கம் சிவா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:18, 2 மே 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் ரவி. நலமே. விக்கி நன்கு வளர்ந்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. வரும் நாட்களில் பங்களிப்பேன். நானும் நண்பர்களிடம் வலை விரித்துத்தான் பார்க்கிறேன். மீன்கள் தான் சிக்க மாட்டேன் என்கின்றன :)--சிவக்குமார் \பேச்சு 14:48, 5 மே 2011 (UTC)[பதிலளி]

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

[தொகு]

வணக்கம். மறுபடியும் வணக்கம் சொல்லலாமா. உங்களை முன் பின் பார்ததது இல்லை. இருந்தாலும் பாருங்கள். தமிழ் மொழி உங்களையும் என்னையும் இணைத்து வைக்கிறது. அதுதான் ஓர் அற்புதமான நிகழ்ச்சி. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியாது. நம்முடைய நல்ல நினைவுகள் நிறைந்து வாழும். மலேசியாவில் இருந்து அடுத்த ஒரு கட்டுரை வருகிறது. நன்றி.--ksmuthukrishnan 16:29, 5 மே 2011 (UTC)

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

முதற்பக்கத்தில் “பங்களிப்பாளர் அறிமுகம்” பகுதியில் இடம் பெறுவதற்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பைப் பின் வரும் இணைப்பில் இட வேண்டுமிறேன்.

சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

--சோடாபாட்டில்உரையாடுக 14:17, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

இன்னும் ஓரிரு நாட்களில் செய்கிறேன், சோடாபாட்டில். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 14:27, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]
மீண்டும் நச்சரிக்கிறேன் :-) --சோடாபாட்டில்உரையாடுக 14:50, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]
ஆச்சு :)--சிவக்குமார் \பேச்சு 15:11, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி. நாளை இரவு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:13, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி.--சிவக்குமார் \பேச்சு 15:15, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

[தொகு]
சிவகுமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:24, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி, கனகரே! :)--சிவக்குமார் \பேச்சு 08:37, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]
இப்போதுதான் உங்கள் அறிமுகத்தை தமுல் பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன், சிவா. :) -- சுந்தர் \பேச்சு 09:45, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி, சிவா. மூத்த விக்கிப்பீடியராக முயலாமல் ;) தொடர்ந்தும் மீண்டும் பங்களிக்க வேண்டுகிறேன் :) --இரவி 14:58, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சிவா--P.M.Puniyameen 16:14, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

சிவக்குமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்! நல்வாழ்த்துகள்  :) --செல்வா 16:22, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி இரவி, புன்னியாமீன், செல்வா, சுந்தர். --சிவக்குமார் \பேச்சு 07:01, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:47, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா

[தொகு]

























முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

[தொகு]

























ஒரு கேள்வி

[தொகு]

உங்கள் முதற்பக்க அறிமுகத்தில் "பதிகணினியல்" என்று உள்ளது, அது பதிகணினியியல் அல்லது பதிகணியியல் என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வேறு ஏதேனும் காரணம் பற்றி பதிகணினியல் என்று எழுதியுளீர்களா என்று தெரியாததால், மாற்றவில்லை. --செல்வா 16:29, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி செல்வா. அது ஒரு எழுத்துப்பிழையே. திருத்தி விட்டேன்.--சிவக்குமார் \பேச்சு 07:00, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Sivakumar,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Sivakumar,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


நன்றி

[தொகு]
ஓ! தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார்! உங்கள் மறுமொழி உவகை ஊட்டுகின்றது. நீர்நிலைகள், விலங்குகள், என்று நீங்கள் பங்களித்தக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவு வரும்! :) −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பதக்கம்

[தொகு]
உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் 05:26, 15 பெப்ரவரி 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மீண்டும் காண மகிழ்ச்சி

[தொகு]

சிவா, உங்களை மீண்டும் காண மகிழ்ச்சி. :) -- சுந்தர் \பேச்சு 10:18, 24 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி, சுந்தர். --சிவக்குமார் \பேச்சு 13:54, 27 பெப்ரவரி 2012 (UTC)

சிறுநவ்வி

[தொகு]
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Sivakumar. உங்களுக்கான புதிய தகவல்கள் மதனாஹரன் இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
--மதனாகரன் (பேச்சு) 12:51, 17 மே 2012 (UTC)[பதிலளி]

குதிரை

[தொகு]

பல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:07, 21 மே 2012 (UTC)[பதிலளி]

கட்டாயம் செய்கிறேன், இரவி :)--சிவக்குமார் \பேச்சு 16:11, 21 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:09, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:48, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:11, 30 மே 2012 (UTC)[பதிலளி]

கூகுள் கட்டுரை துப்புரவு உதவி தேவை

[தொகு]

சிவா, சில மாதங்களாகவே முதற்பக்கத்தில் உயிரினங்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது :( எனவே, விலங்குகள் - தாவரங்கள் - சுற்றுச்சூழல் குறித்த கூகுள் கட்டுரைகளைத் துப்புரவு செய்ய உங்கள் தேவை. பல நல்ல தலைப்புகள் மூன்று ஆண்டுகளாகத் தேங்கி உள்ளன. துப்புரவு செய்வதன் மூலம் முதற்பக்கக் கட்டுரை ஆக்கலாம். --இரவி (பேச்சு) 13:12, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்துத் தொன்மவியல்

[தொகு]

இந்து தொன்மவியல் என்பதில் ஒற்று மிகுந்து இந்துத் தொன்மவியல் என்று வருமா? நண்பரே. தங்களுடைய பகுப்பு:இந்துத் தொன்மவியல் பகுப்பினை காண நேர்ந்தது. எனவே தங்களிடம் வினவுகிறேன். ஒற்று வரும் என்றால் என்னுடைய இந்து தொன்மவியல் கட்டுரையில் மாற்றம் செய்யவும். அலுவக விசயமாக வெளியூர் செல்வதால், மூன்று நாட்களுக்கு விக்கிக்கு வர இயலாது என்பதால் இந்த உதவியை தங்களிடம் கேட்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 11 ஏப்ரல் 2013 (UTC)

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Sivakumar!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை மேம்படுத்த தாங்கள் உதவி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தங்களுடைய பங்களிப்பினையும், வழிகாட்டுதல்களையும் விக்கித்திட்டம் சைவத்திற்கு தர வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:44, 5 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:03, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி

[தொகு]

ஏன் மகிழ்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் :)--இரவி (பேச்சு) 13:31, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஓ, அப்படியா? ;) -- சுந்தர் \பேச்சு 14:16, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

[தொகு]

வணக்கம், Sivakumar!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:28, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்

[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 17:09, 18 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)

உதவி தேவை...

[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…

  • தமிழ் விக்கியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களித்த / பங்களித்துவரும் பயனர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதல்' வழங்கிட நாம் முடிவு செய்ததை தாங்கள் அறிவீர்கள். இதற்கான தெரிவு செய்தலில் உங்களின் உதவியினை நாடுகிறோம்.
  • 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்' எனும் காப்பகத்திலிருந்து பயனர்களின் பெயர்களை எடுத்து முதற்கட்ட பட்டியல், இங்கு இடப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையடைந்த பட்டியலன்று… இந்தப் பட்டியலை நிறைவு செய்திட தங்களின் உதவி தேவைப்படுகிறது!
  • சிலர் 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில்' இடம்பெறவில்லை; சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை தாங்கள் முழுமை செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொள்ளலாம்.
  • வேறு ஏதேனும் காரணிகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால்... அதனையும் கருத்தில்கொண்டு தெரிவினை செய்யலாம்.
  • மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:21, 26 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:18, 27 செப்டம்பர் 2013 (UTC)

விலங்குகள் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கை

[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:விலங்குகள் என்பதை உருவாக்கி மேம்படுத்தியிருப்பதைக் கண்டேன். வடிவமைப்பில் சிறந்தாக உள்ள வலைவாசலில் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் சிறப்புப் படங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை கூடுதல் செய்யவும், இணைக்கப்பட்டிருக்கும் தலைப்புகளில் இருக்கும் சில ஆங்கில தலைப்புகளை நீக்கி உரிய தமிழ் தலைப்பினை இட்டு வளம் செய்யவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:39, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Wikimedians Speak

[தொகு]
      

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Sivakumar,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:40, 9 ஏப்ரல் 2014 (UTC)

நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை

[தொகு]

வணக்கம் சிவா, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மேற்கு. எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:18, 12 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

[தொகு]
அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Sivakumar!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:52, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
மீண்டும் பங்களிப்பதில் மகிழ்ச்சி, எங்கள் திட்டப்பக்கம் வந்துதவினால் மகிழ்வோம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:42, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:52, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தேரி

[தொகு]

சிவா, நெடுநாள் கழித்து உங்கள் செய்தியைக்கண்டு மகிழ்ந்தேன். தேரி கட்டுரையைத்தொடங்கியிருக்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 02:39, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Your administrator status on the Tamil Wiktionary

[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.   You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.   If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.   If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.   If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 04:58, 11 பெப்ரவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:35, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:55, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:49, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

[தொகு]

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:30, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]


தலைப்பை மாற்றவும்

[தொகு]
  1. வெட்டி (Chrysopogon zizanioides) என்று உள்ளது. [1] இந்த பக்கத்தின் படி பார்த்தால் விலாமிச்சை வேர் என்று பெயரை மாற்றுங்கள். அல்லது சரிபார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 10:46, 29 சனவரி 2016 (UTC)[பதிலளி]

SivakumarPP

[தொகு]

சிவக்குமார், SivakumarPP என்பது உங்கள் கணக்கா? அல்லது உங்கள் பெயரை யாரேனும் தவறாகப் பயன்படுத்த முனைகின்றார்களா? --மதனாகரன் (பேச்சு) 12:40, 12 மே 2016 (UTC)[பதிலளி]

என்னுடையதே :). நான் எனது பழைய கணக்கின் கடவுச்சொல்லை மறந்து விட்டேன். மின்னஞ்சலும் பழையது முடக்கப்பட்டுவிட்டது. எனவே புதிய கணக்கினைத் தொடங்கியுள்ளேன்.--சிவக்குமார் (பேச்சு) 10:30, 13 மே 2016 (UTC)[பதிலளி]
@Shanmugamp7 and SivakumarPP: ஒரு நிருவாகிக்குரிய இப்பயனர் கணக்கு பயன்பாட்டில் இல்லை. இது போன்ற கணக்குகளுக்கு நிருவாக அணுக்கத்தை நீக்குவதற்கும் மீண்டும் பயனருடன் புதிய கணக்கிற்கு நிருவாக அணுக்கத்தை அளிப்பதற்கும் உலகளாவிய நடைமுறை என்ன? --இரவி (பேச்சு) 14:37, 15 மே 2017 (UTC)[பதிலளி]
இரு கணக்கும் ஒருவருடையது என்பதை உங்களால் வேறு ஒரு வழியாக உறுதிபடுத்த இயலுமானால் (ex.: Facebook, தொலைபேசி), புதிய கணக்கிற்கு நிர்வாகி அணுக்கத்தை மாற்றிவிட்டு பழைய கணக்கின் அணுக்கத்தை நீக்க மேல் விக்கியில் கோரிக்கை வைக்கலாம். கடவுச் சொல் மற்றும் மின்னஞ்சல் மறந்த கணக்குகளை மீட்க Phabricator ல் வழு பதியலாம், ஆனால் நீங்கள் தான் அந்த கணக்கின் உரிமையாளர் என்பதனை உறுதி செய்ய வேண்டும், வழு பதிய ஏதேனும் உதவி தேவையெனில் கூறவும்--சண்முகம்ப7 (பேச்சு) 14:51, 15 மே 2017 (UTC)[பதிலளி]
{ping|Shanmugamp7|SivakumarPP}} நன்றி, சண்முகம். சிவக்குமார், தொடர்ந்து தேவைப்படும் நடவடிக்கை பற்றி குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:58, 23 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:26, 16 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:17, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

நிருவாக அணுக்கம் நீக்கலாமா?

[தொகு]

@SivakumarPP: வணக்கம். கடவுச் சொல் சிக்கலால் கடந்த இரு ஆண்டுகளாக எந்தப் பங்களிப்பும் இல்லாமல் இருக்கும் முடங்கி உள இந்தப் பயனர் கணக்குக்கான நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? ஒரு வார காலத்துக்குப் பிறகும் இந்தக் கணக்கில் இருந்து பதில் வரவில்லை எனில் நிருவாக அணுக்கம் நீக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். இதே பயனர் கணக்கை முன்பு இயக்கிய சிவக்குமார் கவனிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 18:36, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.