பவளப் படிப்பாறை
Appearance
பவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை ஒளிபுகக் கூடிய, வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன. இப் பகுதிகள், படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும், போதிய அளவு உணவும், ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு, ஊட்டம் குறைந்த, தெளிந்த, மிதவெப்பம் கொண்ட, ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள் (coral polyps) இருக்கும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reading: Shorelines | Geology". courses.lumenlearning.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-20.
- ↑ Wood, Rachel (2001-12-15). "Are reefs and mud mounds really so different?". Sedimentary Geology. Carbonate Mounds: sedimentation, organismal response, and diagenesis 145 (3): 161–171. doi:10.1016/S0037-0738(01)00146-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-0738. https://www.sciencedirect.com/science/article/pii/S0037073801001464.
- ↑ crossref. "Chooser". chooser.crossref.org (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3514838. பார்க்கப்பட்ட நாள் 2024-04-20.