உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாண்டர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிளாண்டர்சு
விளாந்திரன்
பெல்ஜியப் பகுதி
Flag of Flanders
கொடி
பிளாண்டர்சின் மேலங்கிச் சின்னம்
சின்னம்
பண்: தெ விலாம்ச லிய்யு
("ஃபிளம்மியர்களின் சிங்கம்")
பெல்ஜியத்திலும் ஐரோப்பாவிலும் பிளாண்டர்சின் அமைவிடம்
தற்கால பெல்ஜியத்தில் பிளாண்டர்சு (அடர் பச்சை) பெல்ஜியத்தினுள்ளும் ஐரோப்பாவிலும் காட்டப்பட்டுள்ளது. பிரசெல்சு சிலநேரங்களில் பிளாண்டர்சின் அங்கமாகவும் சில நேரங்களில் தனித்தும் கருதப்படுகின்றது.
நாடுபெல்ஜியம்
பிளாண்டர்சு கவுன்ட்டி862–1795
பெல்ஜியத்தில் ஃபிளம்மியர் மாவட்டம்1970
பெல்ஜியத்தின் ஃபிளம்மியர் மண்டலம்1980
தொகுதிபிரசெல்சு
பரப்பளவு
 • நிலம்13,522 km2 (5,221 sq mi)
மக்கள்தொகை
 (1 சனவரி 2015)
 • மொத்தம்64,44,127
 • அடர்த்தி477/km2 (1,240/sq mi)
 • அலுவல்முறை மொழி
இடச்சு
இனங்கள்ஃபிளம்மியர் (உரிச்சொல்), ஃபிளெமிங் (நபர்)
விலாம்சு (உரிச்சொல்), விலாமிங் (நபர்)
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
ஐஎசுஓ 3166 குறியீடுBE-VLG
இணையதளம்www.vlaanderen.be
பரப்பளவும் மக்கள்தொகையும் பிளாண்டர்சு மண்டலத்திற்கானது.

பிளாண்டர்சு (Flanders, டச்சு: Vlaanderen [ˈvlaːndərə(n)] (கேட்க), பிரெஞ்சு மொழி: Flandre [flɑ̃dʁ], இடாய்ச்சு மொழி: Flandern [ˈflandɐn]) இடச்சு மொழி-பேசும் பெல்ஜியத்தின் வடபகுதியாகும். பண்பாடு, மொழி, அரசியல், வரலாற்றினபடி பல்வேறு வரையறைகள் உள்ளன. இது பெல்ஜியத்தின் மூன்று (பிளம்மிய,பிரான்சிய,இடாய்ச்சு) சமூகங்களில் ஒன்றாகும். இப்பகுதி நபர்கள் பிளெமிங் எனப்படுகின்றனர்; இப்பகுதியைக் குறிக்கும் உருச்சொல் ஃபிளம்மியர் ஆகும். பிளாண்டர்சின் அலுவல்முறைத் தலைநகரம் பிரசெல்சு ஆகும்;[1] இருப்பினும் பிரசெல்சுக்குத் தனியான மண்டல அரசு உள்ளது. பிளாண்டர்சின் அரசு பிளம்மியர் வாழ்க்கை குறித்த, பண்பாடு, கல்வி போன்ற, விவகாரங்களை மட்டுமே பிரசெல்சில் மேற்பார்வையிடுகிறது.

பரப்பளவைப் பொருத்து இது பெல்ஜியத்தின் மிகப்பெரும் பகுதியில்லாவிடினும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக, பெல்ஜியத்தின் 11,491,346 பேரில் 7,876,873 பேர் (68.5%) (பிரசெல்சு நகரின் இடச்சு பேசும் பிளெமியப் பகுதிகளை உள்ளிட) இங்கு வசிக்கின்றனர்.

இடைக்காலத்தில் "ஃபிளாண்டர்சு கவுன்ட்டி" என்பது கிபி 900இல் டோவர் நீரிணையிலிருந்து செல்ட் ஆறு கயவாய் வரை இருந்த பகுதியாகும்; இது மேலும் விரிவாக்கப்பட்டது. இந்த கவுண்ட்டி தற்போதைய பெல்ஜியத்தில் உள்ள கிழக்கு பிளாண்டர்சையும் மேற்கு பிளாண்டர்சையும் ஒன்றுசேர்த்தப் பகுதியுடன் அடுத்துள்ள பிரான்சு, நெதர்லாந்து பகுதிகளும் இணைந்தது. பழைய நிலப்பகுதி வரையறை இன்னமும் பொருந்தும் என்றாலும் பிளாண்டர்சு என்ற சொல் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் இடச்சு பேசும் மியூசே ஆறு வரையான அனைத்துப் பகுதிகளையுமே குறிக்கப் பயன்படுத்தப்படலாயிற்று. தவிரவும் பிளெமிசக் கலை என்பது இடச்சு பேசும் மக்களின் கலை என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தற்கப்பால் பெல்ஜிய நாட்டினுள் உள்ள பிளாண்டர்சு பகுதி இரண்டு அரசியல் அமைப்புகளாக வரையறுக்கப்பட்டன.: "பிளெமிச சமூகம்" (டச்சு: Vlaamse Gemeenschap), "பிளெமிச மண்டலம்" (டச்சு: Vlaams Gewest). இவை இரண்டும் இணைக்கப்பட்டன, இருப்பினும் புவியியல்படி பிளெமிச சமூகம் பிரசெல்சை உள்ளடக்கும், பிளெமிச மண்டலம் உள்ளடக்காது.

எந்த வரையறையானாலும், பிளாண்டர்சு ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையாக இருந்துள்ளது. நடுக்காலத்தின் பிற்பகுதியில் கென்ட், புர்ஜெசு, ஆண்ட்வெர்ப், பிரசெல்சு போன்ற நகரங்கள் ஐரோப்பாவின் மிகவும் செல்வச்செழிப்புள்ள நகரியமாக்கப்பட்டவையாக விளங்கின. அடுத்துள்ள பகுதிகளிலிருந்த கம்பளியை நெய்து துணித் தயாரித்தன; உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமன்றி ஏற்றுமதியும் செய்தன. இதனால் மிகவும் உயர்தர பண்பாடு உருவானது; கலை, கட்டிடக்கலை ஆகியவற்றில் இத்தாலிக்கு இணையான மேம்பாட்டை எட்டியிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி மையங்களில் ஒன்றாக பெல்ஜியம் விளங்கியது. இதற்கு முன்பே பிளாண்டர்சை பிரான்சியம் பேசிய வல்லோனியா கைப்பற்றியது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிளாண்டர்சின் பொருளியல் விரைவாக வளர்ந்தது. இன்றைய நாளில் பிளாண்டர்சு குறிப்பிடத்தகளவில் தெற்கத்தியப் பகுதிகளை விட செல்வச் செழிப்புடன் உள்ளது. பொதுவாகவும் ஐரோப்பா மற்றும் உலகின் செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றது.[2]

புவியியல்படி, பிளாண்டர்சு பொதுவாக சமவெளியாகும். வடக்கு கடலை ஒட்டி சிறியக் கடலோரம் உள்ளது. பிளாண்டர்சின் பெரும்பகுதி பயிரிட்டு வேளாண்மை செய்யத் தகுந்தது. அடர்ந்த மக்கள்தொகை உடைய இதன் மக்களடர்த்தி சதுர கி.மீக்கு 500 பேராக (சதுர மைலுக்கு 1200 பேர்) உள்ளது. மேற்கில் பிரான்சுடனும் வடக்கிலும் கிழக்கிலும் நெதர்லாந்துடனும் தெற்கில் வல்லோனியாவுடனும் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. அலுவல்முறையாக இருமொழியுடைய பிரசெல்சு பிளாண்டர்சு பகுதிக்குள் அடைபட்டுள்ளது. கிழக்கில் வல்லோனியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையே அடைபட்டுள்ள வோரேனும் வடக்கே உள்ள பார்லே-எர்டோகும் (இதன் 22 பகுதிகளை நெதர்லாந்து சூழ்ந்துள்ளது) இதன் வெளிப்புறப் பகுதிகளாகும்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Discover Flanders". Flanders.be. Archived from the original on 2017-10-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
  2. "Belgium". U.S. Department of State. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.