உள்ளடக்கத்துக்குச் செல்

பொ. வே. சோமசுந்தரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொ. வே. சோமசுந்தரனார் (P. V. Somasundranaar, 5 செப்டம்பர், 1909 - 3 சனவரி, 1972) தற்கால உரையாசிரியர்; நாடகாசிரியர். வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். மேலப்பெருமழை என்னும் ஊரில் பிறந்ததால் பெருமழைப் புலவர் என அழைக்கப்பட்டார்.[1]

பிறப்பு

[தொகு]

பொ. வே. சோமசுந்தரனார் 1909 செப்டம்பர் 5 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார். இவரின் தந்தை வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர்.[1]

கல்வி

[தொகு]

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விபுலாநந்த அடிகள், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். அதனால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றார்.

தொழில்

[தொகு]

பொ. வே. சோமசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றிருப்பினும் தான் பிறந்த சிற்றூரிலேயே வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டார்.

குடும்பம்

[தொகு]

சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி மற்றும் மாரிமுத்து ஆவர். இவர்கள் இருவரும் தத்தம் குடும்பத்தினருடன் மேலப்பெருமழை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

எழுத்துப்பணி

[தொகு]

பொ. வே. மோ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை, நாடகம், வாழ்க்கை வரலாறு என 24 நூல்களைப் படைத்துள்ளார். அவை வருமாறு:[2]

வ.எண் ஆண்டு நூல் வகை
01 நற்றிணை உரை
02 குறுந்தொகை உரை
03 அகநானூறு உரை
04 ஐங்குறுநூறு உரை
05 கலித்தொகை உரை
06 பரிபாடல் உரை
07 பத்துப்பாட்டு உரை
08 ஐந்திணை எழுபது உரை
09 ஐந்திணை ஐம்பது உரை
10 சிலப்பதிகாரம் உரை
11 மணிமேகலை உரை
12 சீவக சிந்தாமணி உரை
13 வளையாபதி உரை
14 குண்டலகேசி உரை
15 உதயணகுமார காவியம் உரை
16 நீலகேசி உரை
17 பெருங்கதை உரை
18 புறப்பொருள் வெண்பா மாலை உரை
19 கல்லாடம் உரை
20 திருக்கோவையார் உரை
21 பட்டினத்தார் பாடல்கள் உரை
22 செங்கோல் நாடகம்
23 மானநீகை நாடகம்
24 பண்டிதமணி வாழ்க்கை வரலாறு

மறைவு

[தொகு]

சோமசுந்தரனார் 1972 சனவரி 3 ஆம் நாள் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார், எழில்.இளங்கோவன், கீற்று, மார்ச் 1, 2017
  2. வைத்தியநாதன் கே., தினமணி செம்மொழிக்கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.295

வெளியிணைப்புகள்

[தொகு]