உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியத் தகடு மற்றும் ஒளியுமிழ் இருமுணைய விளக்குடன் மிதவை

மிதவை (Buoy)[1][2] என்பது பல்வேறு நோக்கங்களைக் கொண்ட ஒரு மிதக்கும் கருவியாகும். நிலையாக ஓரிடத்தில் இது நங்கூரமிடப்படலாம் அல்லது கடல் நீரோட்டங்களுடன் செல்ல அனுமதிக்கப்படலாம். கடல், ஆறு முதலியவற்றில் கப்பலிலோ, படகிலோ செல்லும்போது விபத்துகளைத் தவிர்க்க ஆபத்தான இடங்கள், பாறைகள், மற்றும் ஆழம் குறைந்த பகுதிகளைக் காட்டுவதற்கு மிதவை கருவி பயன்படும்.

வரலாறு

[தொகு]

மிதவைகளின் தோற்றம் குறித்த தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 1295 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு மாலுமியின் கையேடு எசுப்பானியாவிலுள்ள குவாடல்கிவிர் ஆற்றில் உள்ள வழிசெலுத்தல் கையேட்டில் மிதவைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[3] இதற்கு வடக்கே மாசு நதியில் மிதக்கப்பட்டது பற்றிய ஆரம்ப இடைக்கால குறிப்புகள் உள்ளன.[4] ஆரம்பகால மிதவைகள் மரக்கட்டைகள் அல்லது படகுகளாக இருந்திருக்கலாம். ஆனால் 1358 ஆம் ஆண்டில் பீப்பாய் மிதவை பயன்படுத்தப்பட்டதற்கான பதிவு உள்ளது.{{sfn|Naish|1985|p=51}

எளிய பீப்பாயை கடற்பரப்பில் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எனவே குறுகிய முனையில் ஒரு திடமான செருகியுடன் கூடிய கூம்பு வடிவ மிதவைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் ஒரு நங்கூரத்திலுள்ள வளையத்தை இணைத்துக் கொள்ள முடியும்.[5]

பின்னர் இரு கூர்குவி மிதவைகள் உருவாக்கப்பட்டன. இவை நடுவில் உருண்டையாகவும் இருபுறமும் கூர்ங்குவிவாகவும் இருந்தன.[6]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரும்பு மிதவைகள் கிடைத்தன. அவை நீர் புகாத பெரிய முகப்புடன் மணிகள் (1860) அல்லது சீழ்க்கைகள் (1880) ஆகியவற்றைக் கொண்டிருந்தன.[7] இவற்றில் மணியோசை தொடர்ந்து கேட்கும் மிதவைகளும், ஊதல் ஒலி உண்டாக்கும் மிதவைகளும் உண்டு. பனி மூடியுள்ள பகுதிகளில் விளக்கு ஒளி சரியாகத் தெரிவதில்லை. அத்தகைய இடங்களில் மணியோசையாலோ, ஊதல் ஒலியாலோ எச்சரிக்கை செய்கின்றன.

1879 ஆம் ஆண்டில் இயூலியசு பிஞ்சு சுருக்கப்பட்ட வாயுவைப் பயன்படுத்தி மிதவைகளின் வெளிச்சத்திற்கான காப்புரிமையைப் பெற்றார்.[8] இது 1912 ஆம் ஆண்டு முதல் குசுடாஃப் டேலனின் அசிட்டிலீன் விளக்கு மூலம் மாற்றப்பட்டது. இரவு நேரங்களில் இவ்விளக்குகள் பயன்படுகின்றன. மிதவையினுள்ளேயே அழுத்தநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வாயு இந்த விளக்குக்கு எரிபொருளாகப் பயன்படுகின்றது. மின்கலத்தின் மூலம் எரியும் மின்சார விளக்குகளும் சில மிதவைகளில் உண்டு. விளக்கு ஒளியின் நிறமும் அதன் அளவும் இடத்திற்கு ஏற்றவகையில் மாறுபடும். இவ்வாறு மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இத்தகைய மிதவைகளை ஒருவகை கலங்கரை விளக்கம் என்றே சொல்லலாம். பிற்கால வளர்ச்சியாக சூரிய மூடிதழ்கள் அறிமுகப்படுத்தன. இவை பகல் நேரத்தில் வாயுவை அடைத்துவிடும்.

மிதவைகளின் நிறம்

[தொகு]

பாறைகள் இருக்குமிடம், ஆழம் குறைந்த இடம், மிக ஆபத்தான இடம், செல்ல வேண்டிய திசை போன்ற பலவற்றைக் குறிக்க மிதவைகளில் வெவ்வேறு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். குறுக்காகவோ நெடுக்காகவோ பட்டை தீட்டுவதும் உண்டு. எண்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

படக்காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "buoy". Dictionary.com Unabridged. Random House.
  2. "buoy". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014.
  3. Naish, John (1985). Seamarks, their history and development. London: Stanford Maritime. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-540-07309-1.
  4. Naish 1985, ப. 51.
  5. Naish 1985, ப. 52.
  6. Naish 1985, illustrations pp 53, 57.
  7. Naish 1985, ப. 59.
  8. Naish 1985, ப. 59–60.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிதவைகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவை&oldid=4071960" இலிருந்து மீள்விக்கப்பட்டது