யோங் பெலார் மலை
யோங் பெலார் மலை | |
---|---|
Mount Yong Belar Gunung Yong Belar | |
யோங் பெலார் மலைச் சிகரம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,181 m (7,156 அடி)[1] |
புடைப்பு | 615 m (2,018 அடி)[1] |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 4°39′00″N 101°21′42″E / 4.65000°N 101.36167°E |
புவியியல் | |
அமைவிடம் | லோஜிங், கிளாந்தான் கிந்தா மாவட்டம், பேராக் மலேசியா |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் தெனாசிரிம் மலைத்தொடர் |
ஏறுதல் | |
எளிய வழி | கேமரன் மலை, லோஜிங், கெபுன் சாயோர் கிராமம் |
யோங் பெலார் மலை (மலாய் மொழி: Gunung Yong Belar; ஆங்கிலம்: Mount Yong Belar) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றாகும். மூன்றாவது நிலையில் உள்ளது. யோங் பெலார் மலையின் உயரம் 2,181 மீட்டர், (7,156 அடி). இந்த மலை கிளாந்தான் - பேராக் மாநிலங்களின் எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ளது.[2]
கிளாந்தான் மாநிலத்தில் மிக உயர்ந்த மலையான யோங் பெலார் மலை, கொர்பு மலைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும் ஈப்போவில் இருந்து கேமரன் மலைக்குச் செல்லும் சாலையின் வழியாக, புளூ வெளி தேயிலை பள்ளத்தாக்கின் மலைப் பாதை வழியாகச் சென்று அடையலாம்.[3]
பொது
[தொகு]தித்திவாங்சா மலைத்தொடர் என்பது தெனாசிரிம் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். தெனாசிரிம் மலைத்தொடர் என்பது தென்கிழக்காசியாவில் 1,700 கி.மீ. நீளத்திற்கு பர்மா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா நாடுகளில் படர்ந்து இருக்கும் ஒரு மலைத்தொடராகும்.[4]
480 கிமீ நீளமுள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் யோங் பெலார் மலை உள்ளது. தீபகற்ப மலேசியாவின் G7 எனும் (G என்பது Gunung எனும் மலாய்ச் சொல்: மலை என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.
மலை உச்சி பாதை
[தொகு]யோங் பெலார் மலையின் அடித்தளம் லோஜிங், கேமரன் மலை, கெபுன் சயூர் (Kebun Sayur Village) எனும் கிராமத்தில் உள்ளது. அங்கிருந்து மலை உச்சிக்கு ஒரு பாதை செல்கிறது. மலை உச்சியை அடைவதற்கு ஒரு பகல் பயணமாகவோ அல்லது 2 நாள் 1 இரவு பயணமாகவோ மேற்கொள்ளலாம்.
மலை உச்சிக்குச் செல்லும் பாதையில், இரண்டு முக்கிய முகாம் இடங்கள் உள்ளன. முதலாவது தூடோங் பெரியோக் முகாம் (CampTudung Periuk); மற்றொன்று காசுட் முகாம் (Camp Kasut).[5]
மலையில் ஏறுவதற்கு முன்னர், பேராக் மாநில வனத்துறையின் அனுமதி தேவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வழிகாட்டிகள் கட்டாயமில்லை. இருப்பினும் பாதுகாப்பான அனுபவத்திற்காக ஒருவரைப் பணியில் அமர்த்த பரிந்துரைக்கப்படுகிறது.
தூடோங் பெரியோக் முகாம்
[தொகு]யோங் பெலார் உச்சிக்குச் செல்வது சவாலானது. தூடோங் பெரியோக் முகாமை அடையும் முன் தொடக்கத்தில் பல சிகரங்கள் உள்ளன. சிகரம் வரை செல்லும் பாதையில் அழகான பாசி காடுகளுடன் சேறும் சகதியுமாக இருக்கும். அதிக உயரத்தில் இருப்பதால், வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும்.[5]
மேலே இருந்து பார்த்தால், சுற்றியுள்ள மலைகளையும், பரந்து விரிந்த காடுகளையும் காணலாம். யோங் பெலார் மலையின் கூம்பு வடிவம்; தித்திவாங்சா மலைத்தொடரில் ஒரு பிரும்மாண்டமான பிரமிடு தோற்றத்தை உருவாக்குகிறது.[5]
ஏழு மலைகள்
[தொகு]தீபகற்ப மலேசியாவின் G7 எனும் (G என்பது Gunung எனும் மலாய்ச் சொல்: மலை என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.
மலேசிய தீபகற்பத்தில் உள்ள ஏழு உயரமான மலைகள் ஜி7 என அழைக்கப்படுகின்றன.[6]
- G1 தகான் மலை – 2187மீ
- G2 கொர்பு மலை – 2183மீ
- G3 யோங் பெலார் மலை – 2181மீ
- G4 காயோங் மலை – 2173மீ
- G5 சாமா மலை – 2171மீ
- G6 யோங் யாப் மலை – 2168மீ
- G7 உலு செப்பாட் மலை – 2161மீ
கினபாலு மலை (4095 மீ) போன்ற நன்கு அறியப்பட்ட மலைகளுடன் ஒப்பிடும்போது, மேற்காணும் ஜி7 மலைகளின் உயரம் மிகவும் குறைவாக இருக்கலாம். ஆனாலும் இந்த மலைகளின் உயரத்தைக் கொண்டு அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. இவை ஒவ்வொன்றும் 4000 மீட்டர் கொண்ட மலைகளை விட கடினமான கரடுமுரடான மலைகளாகும். இவற்றை மலைகளின் விலங்குகள் என அழைப்பதும் உண்டு.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ "From the summit there is a fantastic view in good weather. You can see Gunung Korbu and its neighbouring top Gunung Gayong around 8 kilometres away to the northwest". Gunung Bagging. 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
- ↑ Nizam, Fathimath (27 September 2020). "Gunung Yong Belar is located at Blue Valley Dam, Cameron Highlands,on Titiwangsa Range between Perak – Kelantan border,". Trace a Trail (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
- ↑ Tenasserim Hills or Tenasserim Range is the geographical name of a roughly 1,700 km long mountain chain, part of the Indo-Malayan mountain system in Southeast Asia.
- ↑ 5.0 5.1 5.2 "The hike to Gunung Yong Belar can be challenging. there are many peaks in the beginning before reaching Kem Tudung Periuk". AllTrails.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 April 2024.
- ↑ "G7 or the seven mountains above 7,000 feet are Tahan (7,186 feet), Korbu (7,162 feet), Yong Belar (7,156 feet), Gayong (7,129 feet), Chamah (7,210 feet), Yong Yap (7,110 feet) and Ulu Sepat (7,089 feet)". Medium (in ஆங்கிலம்). 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 April 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- John Briggs, 'Mountains of Malaysia - a Practical Guide and Manual ' , Longman Malaysia Sdn Bhd , 1985.
- "Gunung Tahan, Malaysia" on Peakbagger