வனபர்த்தி மாவட்டம்
Appearance
வனபர்த்தி மாவட்டம் (Wanaparthy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் வனபர்த்தி மாவட்டம நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வனபர்த்தி நகரம் ஆகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]4,816.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனபர்த்தி மாவட்டத்தின்[2] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 12,38,660 ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–32 ஆகும்.[3]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]வனபர்த்தி மாவட்டம் வனபர்த்தி எனும் ஒரு வருவாய் கோட்டத்தையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4] புதிதாக நிறுவப்பட்ட வனபர்த்தி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் சுவேதா மெகந்தி ஆவார்.[5]
வனபர்த்தி மாவட்டத்தின் 14 மண்டல்கள் விவரம்:[1]
வ எண். | வனபர்த்தி வருவாய் கோட்டம் |
---|---|
1 | அமரசிந்தா |
2 | ஆத்மகூர் |
3 | சின்னம்பவி |
4 | கான்பூர் |
5 | கோபால்பேட்டை |
6 | கொத்தகொட்டா |
7 | மதனப்பூர் |
8 | பனகல் |
9 | பெப்பெயர் |
10 | பெத்தமந்தடி |
11 | ரெவள்ளி |
12 | ஸ்ரீரங்கப்பூர் |
13 | வேப்பனகந்த்லா |
14 | வனபர்த்தி |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Wanaparthy district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "Official website of Wanaparthydistrict". http://wanaparthy.telangana.gov.in/district-profile/. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.