உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:சைவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சைவ வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.

சைவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

திருநீறு
திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.இது கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம்ரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், விபூதி என் பல வகைகளை கொண்டுள்ளது.



சைவ அடியார்கள்

கிருபானந்த வாரியார்
கிருபானந்த வாரியார் என்பவர் சைவ சமய சொற்பொழிவாளராவார். இவர் செங்குந்த வீர சைவ மரபில் காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி என்பதாகும். பன்னிரு வயது முதல் சொற்பொழிவு, பத்திரிக்கை, நூல், திரைப்படம் என பல ஊடகங்களில் சைவத்தின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். இயற்தமிழில் மட்டுமல்லாது, இசைத்தமிழிலும் வல்லவர் என்பதால், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாடல்களை இசையோடு பாடி சொற்பொழிவு செய்வார். பெரியபுராணம், சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை என்று பல நூல்களை எழுதியுள்ளார். திருமுருக கிருபானந்த வாரியார் என்றும், அறுபத்துநான்காம் நாயன்மார் என்றும் சைவர்களால் அழைக்கப்பெற்றார்.


சிறப்புப் படம்

{{{texttitle}}}

அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது வெளிபட்ட ஆலகாலம் அவர்களைத் துரத்தியது. தங்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் வசிக்கும் கையிலைக்கு சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்.

படம்: User:
தொகுப்பு


பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

மீனாட்சியம்மன் கோவில்,மதுரை
மீனாட்சியம்மன் கோவில்,மதுரை
  • கட்வங்கம் என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.
  • ஆதிலட்சுமிக்கும், குபேனனுக்கும் செல்வங்களை வழங்கிய சிவபெருமானின் வடிவம் சுவர்ண ஆகர்ஷன பைரவர் என்று வழங்கப்படுகிறது. சுவர்ண ஆகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தரும் பைரவர் என்று பொருளாகும்.
  • மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் மட்டுமே பாண்டிய நாடு முழுவதும் சமண இருள் சூழந்திருந்த போதும், சைவ மதத்தில் இருந்தார்கள்.
  • பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
  • மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதி வெள்ளியம்பலம் என அறியப்பெறுகிறது.


தொடர்பானவை

தொகு  

சைவம் பற்றி சான்றோர் கூறியமை


மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பவை மறைவாக வைத்திருந்த நமக்கு வெளிப்படுத்தும் புது வெளிப்பாடுகள் பலவற்றுள் முதன்மை யாக குறிப்பிடத்தக்கது. யாதெனில், சிவ நெறியின் வரலாற்றுத் தொன்மை நெறிகளில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும் - அறிஞர் சர் ஜான் மார்ஷல்


தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
வைணவம்வைணவம்
வைணவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்