விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 14
ஆர் தி ரானா கட்டுரை தொடர்பானது
[தொகு]ஆர் தி ரானா கட்டுரையை குறிப்பிடதக்க தன்மையோடு தொகுத்துள்ளேன். மேற்படி கட்டுரையை நீக்குவதற்கு முன்பு ஏனைய பயனுனர்களுடைய கருத்தொற்றுமை பெறப்பட்டு நீக்கலாம் என முடிவு எட்டப்பட்ட பின்பு நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Uthayai (பேச்சு) 14:37, 31 மார்ச் 2017 (UTC)
- Uthayai, தங்கள் கட்டுரை நீக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, நீக்கப்படவும் மாட்டாது. சிறந்த கட்டுரை. இதுபோல் பல கட்டுரைகளை உருவாக்குங்கள். மறவாது விக்கித்தரவில்கும் இணையுங்கள். வாழ்த்துக்கள். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:04, 31 மார்ச் 2017 (UTC)
- Shriheeran நன்றி ஸ்ரீஹீரன்-- Uthayai (பேச்சு) 15:14, 31 மார்ச் 2017 (UTC)
- Shriheeran விக்கித்தரவில்கும் இணைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்--Uthayai (பேச்சு) 15:17, 31 மார்ச் 2017 (UTC)
- @Uthayai and Shriheeran:, நடுநிலையான மேற்கோள்கள் தந்து குறிப்பிடத்தக்கமையை நிறுவி கட்டுரை எழுதுங்கள். ஏற்றுக் கொள்ளப்படும்.--Kanags \உரையாடுக 23:08, 31 மார்ச் 2017 (UTC)
- Kanags, நிச்சயமாக தாங்கல் கூறுவது சரி. அப்போது ஆர் தி ரானா கட்டுரையில் உதயையினால் கொடுக்கப்பட்டிருந்த உசாத்துணைகளையும், வெளி இணைப்புகளையும் அலசி ஆராய்ந்து குறிப்பிடத்தக்கதா என நிறுவுவதற்கு எனது இணைய இணைப்புகைகொடுக்கவில்லை. அது மிகவும் slow. ஆகையினாலேயே உதயையிற்கு உற்சாகமூட்டும் பதில்கள் வழங்கினேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:26, 1 ஏப்ரல் 2017 (UTC)
- அறிவிப்பாளர் என்ற ஒரே காரணம் குறிப்பிடத்தக்கமைக்குப் போதவில்லை. மேலும் முக்கியத்துவமில்லாதபட்சத்தில் இக்கட்டுரை நீக்கப்படுவது முறையே-நீச்சல்காரன் (பேச்சு) 01:46, 1 ஏப்ரல் 2017 (UTC)
பயனர் கணக்கிலும் சில ஐ.பி. முகவரிகளினாலும் குறிப்பிட்ட நபர் பற்றிய கட்டுரை, பெயர் மாற்றங்களுடன் பல உருவாக்கப்பட்டன. நான் உட்பட 3 பயனர்களால் நீக்கப்பட்டன. தகுந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. எவ்வித முன்னேற்றமும் இல்லாது கட்டுரை உருவாக்குவதுதான் பயனரின் இலக்காக உள்ளது. @Uthayai: ஏற்கெனவே நீக்கப்பட்ட கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ப உருவாக்கப்படாவிடடால் உடனடியாக நீக்கப்படும். இதற்கு பயனர்களின் ஒருமித்த முடிவு தேவையில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். --AntanO 10:39, 1 ஏப்ரல் 2017 (UTC)
கடலை
[தொகு]கடலை என்பது நிலக்கடலைக்கு வழிமாற்றாகவுள்ளது. நவதானியங்களில் கடலையும் ஒன்று. அது கொண்டைக் கடலை என்பதற்கு அல்லவா பொருந்தும்? இலங்கையில் கொண்டைக் கடலை கடலை எனவே அறியப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களுடன் தொடர்புபடுவதிலும் கொண்டைக் கடலை அல்லவா காணப்படுகிறர். நிலக்கடலைக்கான வழிமாற்று சரியற்றது எனக் கருதுகிறேன். @Sundar: --AntanO 11:00, 5 ஏப்ரல் 2017 (UTC)
- ஆம், அன்ரன் அவர்களே. ஆங்கில விக்கிக்கட்டுரையில் கொண்டைகடலைக்காகக் கொடுக்கப்பட்டுள்ள அத்தனை படங்களும் கடலையே தான். கடலை என்பதை கொண்டைக் கடலை கட்டுரைக்கு வழிமாற்றாக மாற்றிவிட விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:37, 5 ஏப்ரல் 2017 (UTC)
- தமிழ் நாட்டில் கடலை எனும்போது நிலக்கடலையையும் குறிப்பிட்டிருக்கிறோம். சிலநேரம் வேறுபாடுகாட்ட நிலக்கடலை என்றோ வேர்க்கடலை என்றோ குறிப்பிடுவார்கள். கொண்டைக்கடலையிலிருந்துபெறும் பருப்பு கடலைப்பருப்பு எனப்படுவதால் கட்டாயம் கொண்டைக்கடலையும் கடலை என்று அறியப்பட்டிருக்கிறது. கடலை என்பதை {{பக்கவழி நெறிப்படுத்தல்}} பக்கமாக ஆக்கலாமா? -- சுந்தர் \பேச்சு 04:23, 27 ஏப்ரல் 2017 (UTC)
கடலை என்ற வார்த்தை இருவர் பேசுவதையும் குறிக்கும்.பயனர்: Samuvel Raj
தட்டச்சு
[தொகு]உடனிலைமெய்மயக்கமான சொற்களினைத் தட்டச்சு செய்யும் போது அவற்றினிடையே Curser குறியான | இக்குறி செல்வதில்லையா? காரணம் ஏன்? @AntanO:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:41, 5 ஏப்ரல் 2017 (UTC)
- இது உலாவிசார் சிக்கல். குரோமில் இவ்வாறான தமிழ் எழுத்துருசார் சில சிக்கல்கள்கள் உள்ளன. ஆனால் பயர்பொக்சில் இல்லை. நான் பயன்படுத்தும் இ-கலப்பை 3.0 இற்கும் குரோமிற்கும் மேலும் பல சிக்கல்கள் உள்ளன. --AntanO 02:11, 6 ஏப்ரல் 2017 (UTC)
முதல் கட்டுரை தொடர்பாக.......
[தொகு]நான் இன்று பதிப்பித்த "கோபங்கொள்ளும் கோபம்" கட்டுரை பங்களிப்பு பட்டியலில் உள்ளதா அல்லது நீக்கப்ட்டுள்ளதா... பொதுப்பார்வைக்கு எப்போது வரும். நோக்கல் முறை விவரங்களை தெரிவிக்கவும்−முன்நிற்கும் கருத்து யேசுராஜ் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- வணக்கம், நண்பரே, தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்குவதற்கு நன்றி! எனினும் தாங்கள் உருவாக்கிய "கோபங்கொள்ளும் கோபம்" எனும் கட்டுரை கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருப்பதற்குத் தகாதது ஆகும். ஆகையால் அதனை நீக்கியுள்ளோம். அத்தோடு, நீங்கள் எழுதும் எந்த ஒரு விடயத்தையும் விக்கிப்பீடியாவில் பதிப்பிட்டால் எவரும் உடனேயே பார்வையிடலாம். அவ்வாறு பார்வையிடப்பட்டே அக்கட்டுரை நீக்கப்பட்டது. மேலும் இவ்வாறான கட்டுரைகளை உருவாக்காது நல்ல பல கலைகளஞ்சியக் கட்டுரைகளை உருவாக்குவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:05, 10 ஏப்ரல் 2017 (UTC)
கருவிப்பட்டை
[தொகு]@Kanags:,@Shriheeran: எனக்கு கட்டுரைகளின் தொகு-பக்கத்தின் மேற்புறத்தில் நீலநிறக் கருவிப்பட்டை தோன்றவில்லை. இதனை எவ்வாறு சரிசெய்வது எனத் தெரியவில்லை. தயவுசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. பூங்கோதை. (Booradleyp1)-இதனால் என்னால் இங்கு கையொப்பமும் இட இயலவில்லை.
தொகுத்தல் உதவிக் கருவிகள் ??
[தொகு](உதவி தேவைப்படுவதால் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) பக்கத்திலிருந்து உரையாடலை, ஒத்தாசைப் பக்கத்திற்கு நகர்த்தி உரையாடலை ஒழுங்குபடுத்தியுள்ளேன்.--கலை
பிரச்சனை
[தொகு]கலை
[தொகு]- எனது தொகுப்புப் பெட்டியில் கருவிப் பட்டையைக் காணவில்லை. விருப்பத் தேர்வுகளில், தொகுப்பில் பார்க்கும்போது, கருவிப்பட்டை கேட்கப்பட்டுள்ளது. கட்டுரைகளின் முடிவில் இருக்கும் பகுப்புகளை HotCat பயன்படுத்தி சேர்க்க, அகற்ற, மாற்ற முடியவில்லை. +, - அடையாளங்களைக் காணவில்லை. --கலை (பேச்சு)
- மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் இன்னும் சில. தொகுப்புப் பெட்டியின் கீழே 'சுருக்கம்' என்பதற்கு மேலே, சுருக்கத்தில் கொடுக்கக்கூடிய சில சொற்றொடர்கள் இருக்குமே. அவற்றையும் காணவில்லை. எல்லாவற்றுக்கும் கீழே இருக்கும் விக்கி நிரல்களையும் பயன்படுத்த முடியவில்லை. யாராவது இது தொடர்பில் தயவுசெய்து உதவ முடியுமா?
- தேடல் பெட்டியில் சொற்களை உள்ளிடும்போது, தானாகவே சில சொற்களைத் தெரிவு செய்ய தந்துதவும் உதவியையும் காணவில்லை.
- கையொப்பம் இட முடியவில்லை.
- ProveIt மூலம் மேற்கோள்களை இணைக்கவும் முடியவில்லை.
- இப்படி பல உதவிகளைப் பெற முடியவில்லை. --கலை
அருளரசன்
[தொகு]எனக்கும்
- கருவிப்பட்டை தெரியவில்லை
- விரைவுப் பகுப்பியும் வேலை செய்யவில்லை
- தமிழில் கட்டுரையை எழுதிவிட்டு ஆங்கிலக் கட்டுரையுடன் தரவை இணைக்க சொடுக்கினால் விக்கித் தரவு பக்கத்துக்குச் செல்கிறது இதனால் தரவை இணைப்பதில் சிக்கல் நேர்கிறது. Arulghsr (பேச்சு) 03:34, 29 ஏப்ரல் 2017 (UTC)
நந்தகுமார்
[தொகு]- எனக்கு (சீனாவில்) கருவிப்பட்டை சில சமயம் தெரிகிறது, சில சமயம் தெரியவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 04:31, 29 ஏப்ரல் 2017 (UTC)
- தொகுத்தல் கருவிகள் தற்பொழுது சரியாகிவிட்டன.--நந்தகுமார் (பேச்சு) 12:30, 6 மே 2017 (UTC)
அஞ்சனன்
[தொகு]அதே சிக்கல். இருநாட்கள் விக்கிப்பீடியா பக்கம் வரமுடியவில்லை. இன்று கட்டுரைகளைத் தொகுக்க முயன்றால் கருவிப்பட்டையைக் காணவில்லை. ஆங்கில விக்கிப் பயனர் கணக்கில் கருவிப்பட்டை தெரிகின்றது. பயன்படுத்தவும் முடிகின்றது. தமிழ் விக்கியில் என்ன ஆயிற்று? --5anan27 (பேச்சு) 10:25, 1 மே 2017 (UTC)
இரா. பாலா
[தொகு]- சில நாட்களுக்கு முன்னர் எனக்கும் புரூவ் இட் சில வேளைகளில் தென்படாமலிருந்தது. கடந்த இருநாட்களாக எவ்வித சிக்கலும் இல்லை.--இரா. பாலா (பேச்சு) 15:33, 1 மே 2017 (UTC)
பூங்கோதை
[தொகு]எனக்கும் இதே சிக்கல் உள்ளதை நான் மேலுள்ள ‘கருவிப்பட்டை’ என்ற தலைப்பில் இட்டு உதவி கேட்டுள்ளேன்.--Booradleyp1 (பேச்சு) 04:06, 3 மே 2017 (UTC)
உதவிகள்
[தொகு]Kanags
[தொகு]எனக்கு இரண்டும் தெரிகிறதே? வேறு ஒரு உலவி கொண்டு சோதித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 23:16, 28 ஏப்ரல் 2017 (UTC) @Neechalkaran, Shanmugamp7, and AntanO:--Kanags \உரையாடுக 01:40, 1 மே 2017 (UTC)
- Mozilla Firefox, Google Chrome, Internet Explorer மூன்றிலும் பரிசோதித்தேன். ஆனால் எதிலும் கருவிப்பட்டையும் தெரியவில்லை.
- புகுபதிகை செய்யாமல் இருக்கும்போது, தொகுத்தல் பெட்டியில் கருவிப்பட்டை தெரிகிறது. ஆனால் HotCat, ProveIt பயன்படுத்த முடியவில்லை. ஆனால் புகுபதிகை செய்துள்ள நிலையில் கருவிப்பட்டை தெரியாமல் போவதுடன், HotCat, ProveIt ஐயும் பயன்படுத்த முடியவில்லை. எல்லா உலாவிகளிலும் cache/cookies அழித்துவிட்டு, மீண்டும் புகுபதிகை செய்தும் பார்த்துவிட்டேன். ஆனால் வேலை செய்யவில்லை. Google Chrome இல் மட்டும் ஒருதடவை புகுபதிகை செய்த நிலையிலும் கருவிப்பட்டை தெரிந்தது. ஆனால் மீண்டும் காணவில்லை.--கலை
- இன்னும் ஒரு கேள்வி கலை. வேறு ஒரு கணினியில் புகுபதிகை செய்து சோதித்தீர்களா?--Kanags \உரையாடுக 11:37, 1 மே 2017 (UTC)
அன்ரன்
[தொகு]பழைய உலாவிகள் பலவற்றில யாவாக்கிறிட்டு செயல்படாது. மேம்படுத்திப் பாருங்கள். எனக்கு வேலை செய்கிறது [Chrome Version 58]. --AntanO 05:48, 1 மே 2017 (UTC)
- Google Chrome 58 தான் எனதும், ஆனால் அதில் வேலை செய்யவில்லையே. நான் பொதுவாகப் பயன்படுத்துவது Mozilla Firefox. எனது Version 53. இது யாவாக்கிறிட்டில் தற்போது புதிதாகச் செய்யப்பட்ட மாற்றமா? ஏனெனில் இதில் நான் நீண்ட நாட்களாக பிரச்சனை எதுவுமின்றித் தொகுத்து வருகிறேன். இந்தக் கருவிகள் இல்லாமல் தொகுப்பது சிரமமாக உள்ளது. நீண்ட நேரம் எடுப்பதால் கடினமாக உள்ளது. நன்றி. --கலை
- ஆம், இது புதிய மாற்றம். யாவாக்கிறிட்டு உலாவியில் இயங்கு நிலையில் உள்ளதா? உதவிக்கு How to enable JavaScript in your browser --AntanO 07:13, 1 மே 2017 (UTC)
- இணைப்பிற்கு நன்றி அன்ரன்.
- Mozilla firefox (version 53) இல், about:config – javascript.enabled பார்த்தபோது, அது true என்றே காட்டியது. எனவே மாற்றமெதுவும் தேவைப்படவில்லை.
- Internet Explorer (version 11) இல், Internet options – Security – Security Settings – Internet Zone – Scripting – Active Scripting பார்த்தபோது, Enable என்றே காட்டியது. எனவே மாற்றமெதுவும் தேவைப்படவில்லை. அத்துடன் Scripting of java applets என்பதும் Enable என்பதையே காட்டுகிறது.
- Google Chrome (version 58) இல், Settings – Show advanced settings – Privacy - Content settings – JavaScript பார்த்தபோது, அது Allow all sites to run JavaScript (recommended) என்றே காட்டியது. எனவே மாற்றமெதுவும் தேவைப்படவில்லை.
- இணைப்பிற்கு நன்றி அன்ரன்.
- ஆம், இது புதிய மாற்றம். யாவாக்கிறிட்டு உலாவியில் இயங்கு நிலையில் உள்ளதா? உதவிக்கு How to enable JavaScript in your browser --AntanO 07:13, 1 மே 2017 (UTC)
- புகுபதிகை செய்யாத நிலையில் கருவிப்பட்டை வேலை செய்கிறது. தொகுப்புப் பெட்டியின் கீழே உள்ள நிரல்களை இணைக்க முடிகிறது. ஆனால் விரைவுப்பகுப்பி மற்றும் ProveIt, சுருக்கத்திற்கான சொற்றொடர்களை இணைத்தல் செய்ய முடியவில்லை.
- புகுபதிகை செய்த நிலையில் கருவிப்பட்டையோ அல்லது வேறு எந்த உதவிக்கருவிகளுமோ வேலை செய்யவில்லை.
- தற்போது இங்கே Judge button ஐக் காணமுடியாததால், போட்டியில் நடுவர்பணியையும் செய்ய முடியவில்லை. --கலை
- HotCat செயற்படுகிறதா? --AntanO 11:30, 1 மே 2017 (UTC)
- இல்லை. Hotcat தானே விரைவுப்பகுப்பி? அல்லது அது வேறா? பகுப்பு இணைக்கும் இடத்தில், +, - அடையாளங்களைக் காணவில்லை, எனவே விரைவுப்பகுப்பியும் செயற்படுத்த முடியவில்லை.--கலை
செந்தி
[தொகு]//புகுபதிகை செய்யாத நிலையில் கருவிப்பட்டை வேலை செய்கிறது// இப்படியும் செய்து பார்க்கலாம்:
- "விருப்பத்தேர்வுகள்" என்பதைச் சொடுக்கி --> விருப்பங்கள் --> சேமியுங்கள் (ஒன்றுமே மாற்றம் செய்யாமல்)
அல்லது
- விருப்பங்கள் --> தோற்றம் ---> முகப்புறை மாற்றுங்கள் ( Vector எனில் MonoBook) --> சேமியுங்கள் --> மீண்டும் உங்களுடைய பழைய முகப்புறைக்கு மாற்றுங்கள்.
அல்லது
- "விருப்பத்தேர்வுகள்" என்பதைச் சொடுக்கி
- விருப்பங்கள் --> பயனர் தரவு --> எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவரவும் (எச்சரிக்கை: உங்கள் தேர்வுகளை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள், கையொப்பம் மாறக்கூடும்..)
- விருப்பங்கள் --> தொகுத்தல் (உங்கள் விருப்பத்துக்கு மீளக் கொண்டு வாருங்கள்)
---☤சி.செந்தி☤ (உரையாடுக) 18:39, 1 மே 2017 (UTC)
- நன்றி செந்தி! நீங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் செய்து பார்த்தேன். அத்துடன் மீண்டும் cache/cookies எல்லாம் அகற்றி, விடுபதிகை செய்து, உட்பதிகை செய்தேன். ஆனாலும் பிரச்சனை தொடர்கிறது. எதிலும் மாற்றமில்லை. Java script இன் உதவியுடன் தொழிற்படும் netbanking போன்றன தற்போதும் வேலை செய்கிறது. ஆனால் த.வி. மட்டும் வேலை செய்யவில்லை. தொகுத்தல் செய்வது கடினமாக உள்ளது :( --கலை
- @Kalaiarasy:ஒரு சோதனை முயற்சி: பயனர்:Kalaiarasy/vector.js - இங்கு உள்ளதை முற்றிலும் வெறுமையாக்கி, பின்னர் பயனர்:Drsrisenthil/vector.js -இங்கு உள்ளதை உங்கள் யாவாகிறிட்டில் சேர்த்துப்பாருங்கள். மேலும், நீங்கள் vector முகப்புறைதான் உபயோகிப்பது எனில் Kalaiarasy/monobook.js தேவையில்லை.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 21:54, 1 மே 2017 (UTC)
- முயற்சித்தேன். ஆனால் பிரச்சனை தொடர்கிறது :(. இப்போதும் விடுபதிகை செய்த நிலையில், கருவிப்பட்டை தெரிகிறது. --கலை
- Kalaiarasy/monobook.js மற்றும் பயனர்:Kalaiarasy/common.js என்பதை நீக்கிப் பாருங்கள் (backup it first). ஏனெனில் Kalaiarasy/monobook.js உள்ள நிரல்வரி importScript('User:TheDJ/Gadget-HotCat.js'); தற்போது தேவையற்றது, மேலும் common.js சிலவேளைகளில் பிரச்சனை கொடுக்கலாம். பயனர்:KalaiBOTஐப் பயன்படுத்தி புகுபதிகை செய்து பார்க்க முடியுமாயின் அதிலும் இவ்வாறே தோன்றுகின்றதா என்றும் பார்க்கலாம். விடுபதிகை செய்த நிலையில், கருவிப்பட்டை தெரிகிறது எனில் உங்கள் பயனர் விருப்பதேர்வுகளில் அல்லது உங்களது யாவாகிறிட்டுகளில் பிரச்சனை என்று கருதக்கூடியதாக உள்ளது.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 19:26, 2 மே 2017 (UTC)
- இன்று "விருப்பங்கள் --> பயனர் தரவு --> எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவரவும்" செய்தபின்னர் கருவிப்பட்டை தெரிந்தது. நேற்று இதனைச் செய்தபோது வேலை செய்யவில்லை. ஆனால் இன்று மேலதிகமாக, நீங்கள் கூறியபடி பயனர்:Kalaiarasy/monobook.js மற்றும் பயனர்:Kalaiarasy/common.js என்பதை நீக்கி இருக்கிறேன்.
- ஆனால் எனது விருப்பத்தேர்வுகளை மீண்டும் தெரிவுசெய்ததும், மீண்டும் கருவிப்பட்டையைக் காணவில்லை. விருப்பத் தேர்வுகளில் விரைவுப்பகுப்பி, ProveIt செயற்படுத்தினேன். அவையும் தொகுத்தலுக்கு முக்கியம்தானே. என்ன செய்வதென்றே தெரியவில்லை. தற்போது மீண்டும் விருப்பத்தேர்வுகளை, எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றி வைத்திருக்கிறேன். விரைவுப்பகுப்பி, ProveIt இல் வேலை செய்ய முடியவில்லை. :(
- எனக்கு வரும் அறிவிப்புக்களையும், நேரடியாக அங்கே திறக்க முடியவில்லை. :(
- புகுபதிகை செய்யாத நிலையிலும், KalaiBOT இல் புகுபதிகை செய்த நிலையிலும் எந்த மாற்றங்களும் செய்யாமலேயே கருவிப்பட்டை தெரிகிறது.
- --கலை (பேச்சு) 21:00, 2 மே 2017 (UTC)
- @Kalaiarasy: செந்தில் வழங்கிய ஆலோசனைப்படி "விருப்பங்கள் --> பயனர் தரவு --> எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவரவும்" செய்தபின்னர் கருவிப்பட்டை தெரிகிறது. விரைவுப்பகுப்பியைத் தேர்ந்தெடுத்த பின்னரும் எனக்கு கருவிப்பட்டை தெரிகிறது. ஆனால், இங்கு தொகுக்கும்போதும் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களிலும் கருவிப்பட்டையில் கையெழுத்துக்கான குறி தெரிகிறது; கட்டுரைகளின் தொகு பக்கங்களில் இல்லை (எப்பொழுதும் இவ்வாறுதான் இருக்குமா என்பதும் எனக்கு நினைவிற்கு வரவில்லை).
இச்சிக்கல் தவிர நான் வேறோர் சிக்கலில் உள்ளேன். எனது பயர்பாக்சில் சொந்த விசைப்பலகை அல்லது எழுத்துப்பெயர்ப்பு இரண்டு மூலமும் என்னால் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை. எனது பயர்பாக்சு வெர்ஷன் 54.0b என இற்றையான பின்னரே இச்சிக்கல் என நினைக்கிறேன். இதனால் நான் குரோம் மூலமாக விக்கியில் பங்களிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். குரோமும் அதன் இடைமுகமும் புதிதாக இருப்பதாலும், கணினியைக் கையாளுவதில் எனக்குள்ள அறியாமைகளாலும் என்னால் விரைவாகப் பங்களிக்க இயலவில்லை. --Booradleyp1 (பேச்சு) 04:28, 3 மே 2017 (UTC)
தீர்வு
[தொகு]அஞ்சனன்
[தொகு](@Arulghsr, Nan, 5anan27, and Kalaiarasy:பிரச்சனை தீர்ந்தால் தயவுசெய்து இங்கே குறிப்பிடுங்கள்)
- நன்றி @Drsrisenthil:, சிக்கல் தீர்ந்தது. முதல் இரு வழிவகைகளும் கைகொடுக்கவில்லை. எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவந்த பின்னர் இப்போது அனைத்தும் பழையபடி இயங்குகின்றன. திடீரென்று ஒரேநேரத்தில், பல தமிழ் விக்கி பயனர்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும்? நன்றிகள் மீண்டும் --5anan27 (பேச்சு) 18:55, 1 மே 2017 (UTC)
- 5anan27, மீடியாவிக்கி, மென்பொருளில் இடம்பெற்ற Update ஆக இருக்கலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:36, 3 மே 2017 (UTC)
பூங்கோதை
[தொகு]- எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவந்த பின்னர் எனக்கும் கருவிப்பட்டைத் தோன்றுகிறது. தீர்வுகளைத் தந்துவுதவிய பயனர்:AntanO, பயனர்:drsrisenthil, பயனர்:Kanags -தங்களுக்கு எனது நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:39, 3 மே 2017 (UTC)
- எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பில், விரைவுப்பகுப்பி, ProveIt உண்டா? உங்களுக்கு, ProveIt தெரிகிறதா Booradleyp1?--கலை
- @Kalaiarasy: உங்கள் பயனர் விருப்பத்தேர்வுகளில் (தொகுப்புதவிக் கருவிகள்) இருந்து தேர்ந்தெடுங்கள்.--Kanags \உரையாடுக 10:41, 3 மே 2017 (UTC)
- எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பில், விரைவுப்பகுப்பி, ProveIt உண்டா? உங்களுக்கு, ProveIt தெரிகிறதா Booradleyp1?--கலை
- எல்லோருக்கும் பொதுவான வடிவமைப்பைத் திரும்பக்கொண்டுவந்த பின்னர் எனக்கும் கருவிப்பட்டைத் தோன்றுகிறது. தீர்வுகளைத் தந்துவுதவிய பயனர்:AntanO, பயனர்:drsrisenthil, பயனர்:Kanags -தங்களுக்கு எனது நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:39, 3 மே 2017 (UTC)
- @Kalaiarasy: நான் ProveIt பயன்படுத்துவதில்லை. அதனால் அது குறித்து எனக்குத் தெரியவில்லை கலை.--Booradleyp1 (பேச்சு) 14:02, 3 மே 2017 (UTC)
- நான் Proveit பயன்படுத்துகின்றேன், ஆனால் அதன்மூலம் இடப்படும் மேற்கோள் பிழையுள்ளதாகக் காட்டுகிறது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:22, 3 மே 2017 (UTC)
- நான் நீண்ட காலமாக அதனைப் பயன்படுத்தி வந்துள்ளேன். ஆனால் அண்மைய கருவிப்பட்டை தெரியாத பிரச்சனையில், விருப்பத் தெரிவுகளை எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றிய பின்னர் கருவிப்பட்டை தெரிய ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் எனக்குரிய விருப்பத் தேர்வுகளை தெரிவு செய்ததும், கருவிப்பட்டை மறந்துவிட்டது. அதனால்தான் கேட்டேன்.--கலை (பேச்சு) 18:38, 3 மே 2017 (UTC)
- நான் Proveit பயன்படுத்துகின்றேன், ஆனால் அதன்மூலம் இடப்படும் மேற்கோள் பிழையுள்ளதாகக் காட்டுகிறது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:22, 3 மே 2017 (UTC)
கலை
[தொகு]செந்தி கூறியபடி மாற்றங்களைச் செய்துபார்க்க இன்றுதான் ஆறுதலாக நேரம் கிடைத்தது. மாற்றங்களைச் செய்த பின்னர், எனக்கும் இப்போ பிரச்சனை தீர்ந்துள்ளது. இப்போது, விரைவுப்பகுப்பி, தொடுப்பிணைப்பி, ProveIt எல்லாம் தெரிகிறது. ஒருசில மேலதிக கருவிகளின் உதவிதான் இல்லை.
- எ.கா. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களுக்கு கட்டுரைகள் த.வி.யில் இருப்பின், தானாகவே அவற்றைக் கண்டுபிடித்து தமிழுக்கு மொழிமாற்றல். அதை இப்போது காணவில்லை.
- மேலும், ஒரு கட்டுரையின் முதல் பந்தியை மட்டும் தொகுப்பதற்கு, அங்கே ஒரு தொகு பொத்தான் முன்பு இருந்தது. அதற்கான விருப்பத்தேர்வைச் செயல்படுத்த வேண்டுமாயின், அது எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.
இங்கே உதவிக் குறிப்புகள் தந்த அனைவருக்கும் நன்றி @Drsrisenthil, AntanO, and Kanags:.--கலை (பேச்சு) 09:29, 6 மே 2017 (UTC)
தமிழ்பெருங்களஞ்சியத்திட்டம், தமிழ் விக்கீபிடியா; விகடன்
[தொகு]இன்று தமிழ் இந்துவில் தமிழ்பெருங்களஞ்சியத்திட்டம் குறித்த கட்டுரை வெளிவந்தது, அங்கிருக்கும் பெரும்பாலான கட்டுரைகளையே இங்கும் மீழ்பதிவு செய்கின்றோம், எனக் கருதுகின்றேன். சகோ நீச்சல்காரன் அங்கும் தனது தானியங்கிகள் மூலம் கட்டுரைகளை வெளியிடுகிறார் எனக் கருதுகின்றேன், மற்றும் வீக்கிமிடியாவினால் அந்த கலைக் களஞ்சியம் இயக்கப்படுவதாக தெறிகிறது. இது குறித்து தெளிவான மேலும் அதிகப்படியான தகவல்களை தமிழ் வீக்கிபிடியா நிர்வாகிகள் தந்தால் மேலதிகமான தகவல்களை அனைவரும் தெறிந்துகொள்ள நேரிடும் எனக் கருதுகின்றேன்.
மேலும் நிர்வாகிகளுக்கு ஒரு விண்ணப்பம், விகடன் போன்ற பத்திரிக்கை சார்ந்த பயனர்களின் கட்டுரைகளை உள்வாங்குவது முக்கியமென கருதுகின்றேன். ஏனெனில் இங்கு எழுதும் பெரும்பாலான வீக்கிபிடியர்கள் எவ்வித பலனுமின்றி தங்கள் கடும் பணிச்சூழ்நிலைக்கிடையையோ அல்லது தங்களது ஒய்வு நேரத்தினையோ விட்டுத் தந்து எழுதி வருகின்றனர். அதனால் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மெதுவாகவே இருக்கும். ஆனால் விகடன் போன்ற பணிச்சூழ்நிலையில் எழுதுவோர்களை உட்படுத்தும்பொழுது கட்டுரைகளின் எண்ணிக்கை உயர்வதோடு, கட்டுரைகளின் தரமும் உயரும். அவர்களின் எழுதும் சூழல் விக்கீபிடியா தரத்திற்கு இல்லையெனில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் எழுதும் முறையையே திருத்த முற்படுவோம், அல்லது நிர்வாகிகள் அதில் உள்ள தவறுகளை களைய முற்படுவோம். எனது தனிப்பட்ட கருத்து விகடன் போன்ற பல வருட பத்திரிக்கை வரலாற்றில் உள்ள பல்வேறு கட்டுரைகளை நாம் விக்கிபீடியாவினுள் ஏற்ற முற்பட்டால் பல்வேறு தரப்பு மக்களும் பயன்படுவர்.
பதிலினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி... குறிஞ்சி
- குறிஞ்சி, காலாகாலம் எழுதி செவ்வனே வளர்க்கப்பட்டு வந்த தமிழ் விக்கிப்பீடியாவை, வெறும் 9 மாதங்களில் லாவகமாகக் Copy செய்தது போல இருக்கிறது. இத்திட்டத்தை விக்கிப்பீடியா மூலமே செயற்படுத்தியிருக்கலாமே? எதற்காக வேறாக உருவாக்கினார்கள் என அறியலாமா? --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:18, 3 மே 2017 (UTC)
- @Shriheeran:, அறிவு பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் இலக்கு, எனவே விக்கிப்பீடியாவை அப்படியே நகலெடுத்து உருவாக்கினாலும் அதை வரவேற்போம். ஆனால் அவ்வாறு அங்கு நகலெடுத்தது போலத் தெரியவில்லை, ஊழியர்கள் கொண்டே எழுதிவருகிறார்கள். அரசு தரவுகளை விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் செய்ததைப் போல அங்கும் தன்னார்வலராய்க் கட்டுரைகளை உருவாக்கினேன். இத்திட்டம் பற்றி விளக்குகிறேன். @Kurinjinet: விக்கியில் யாரையும் பணியமர்த்தி கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. விகடன் போன்ற பத்திரிக்கை சார்ந்த பயனர்களிடம் கோரிக்கை வைக்கும் மரபில்லை, விருப்பமுள்ளவர்கள் கட்டுரைகளைத் தாராளமாக எழுதலாம், யாரும் தடுக்கவில்லை, காப்புரிமையின்றி, பயன்தரத்தக்க கட்டுரைகள் என்றும் தேவை.
- தமிழ்ப்பெருங்களஞ்சியத்திட்டம் என்பது மீடியாவிக்கி என்ற அதே மென்பொருள் கொண்டு த.இ.க. நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் விக்கிப்பீடியாவிற்கும் தொடர்பில்லை. விக்கிப்பீடியா என்பது பொதுவான களஞ்சியம் தனியொரு நிர்வாகமில்லாததால் யாரும் எல்லோரும் எழுதலாம் என்பதால் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளோம். ஆனால் தமிழ்ப்பெருங்களஞ்சியத்திட்டம் அவ்வாறு இல்லாமல் நிர்வாகக்கட்டுக்குள் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் இல்லை. அது இரண்டாம் நிலை தரவுத்தளமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகிறேன். அங்கிருக்கும் பெரும்பாலான கட்டுரைகளையே இங்கும் மீள்பதிவு செய்கின்றோம் என்பது தரத்தில் சமரசம் செய்யாதவரை தவறல்ல. ஆனால் அரசு கொடுத்த தரவுகள் அடிப்படையில் தான் ஊராட்சிக் கட்டுரைகளும், கோயில் கட்டுரைகளும் உருவாகின அதே கருவியைக் கொண்டு அங்கும் கட்டுரையை உருவாக்கினேன். அரசிடம் உள்ள தரவுகளை எல்லாம் பொதுத் தளத்தில் வெளியிடுவதில் ஆர்வமாக உள்ளனர். அதற்கேற்ற களமாக விக்கிப்பீடியா இருக்கமுடியாது எனவே அரசின் சொந்த களஞ்சியம் வழியாக வெளியிடலாம் என்பதே நோக்கம். மேலும் அரசின் மூலம் சில துறைசார்ந்த விக்கிகள் உருவாகவும் வாய்ப்புள்ளது-நீச்சல்காரன் (பேச்சு) 19:02, 3 மே 2017 (UTC)
@நீச்சல்காரன்- விளக்கத்திற்கு நன்றி. அறிவுடமை எப்பொழுதுமே பொதுவுடமையாகும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை :) - குறிஞ்சி
- ஊராட்சி பற்றிய கட்டுரைகள் ஒரே உள்ளடக்கத்துடன் எழுதப்பட்டுள்ளன. கூடாது எனச் சொல்லவில்லை. ஆனால் எதற்காக இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு பெருந்தொகையான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன? அந்த விக்கீபீடியாவின் கொள்கை என்ன? தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துக் கட்டுரைகளுக்கும் பிரதி ஒன்று வைத்திருப்பதா?--Kanags \உரையாடுக 09:00, 4 மே 2017 (UTC)
- விருப்பம் உரிய பதில் தர வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:21, 4 மே 2017 (UTC)
NEED DELETED EXACT REASON
[தொகு]Dear Sir, As a new writer of wikipedia. i am post a new file on the topic of "mathematical psychology" in tamil wikipedia. kindly list out the exact mistakes in my file. it will support me for further writings. thank you
- தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் மட்டுமே கட்டுரைகள் எழுதலாம். வேற்று மொழிகளில் எழுதப்படும் கட்டுரைகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாகவே நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:53, 4 மே 2017 (UTC)
பகுப்பு மற்றும் விக்கித்தரவு தொடா்பான ஐயப்பாடுகள்
[தொகு]TNSE Mahalingam VNR மின்சார மணி என்ற கட்டுரையை மின்காந்த சாதனங்கள் என பகுப்புச் செய்யலாம் எனக் கருதுகிறேன். ஆனால் பகுப்பு செய்யப்படவில்லை என்றே கட்டுரையில் காட்டப்படுகிறது. மேலும், ஹெக்சா மெதிலீன் டெட்ரமீன் என்ற கட்டுரையின் தலைப்பை இடைவெளி இன்றி ஹெக்சாமெதிலீன்டெட்ரமீன் என்று பெயா் மாற்றம் செய்ய விரும்புகிறேன். இக்கட்டுரையை இதே பெயருள்ள ஆங்கிலக்கட்டுரைப் பக்கத்தில் தமிழ் மொழிக்கான இணைப்பில் இணைக்கப்பட விரும்புகிறேன். விக்கித்தரவில் சோ்க்கப்படவில்லை என்ற குறிப்பை சாி செய்வது எவ்வாறு?
- ஹெக்சாமெதிலீன்டெட்ரமீன் என மாற்றப்பட்டுள்ளது; விக்கித்தரவில் சேர்க்கப்பட்டுவிட்டது.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:27, 7 மே 2017 (UTC)
உசாத்துணை என்றால் என்ன?
[தொகு]உசாத்துணை என்றால் என்ன?
- உங்களுக்குத் தேவையான விளக்கம் இங்கு உள்ளது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:47, 9 மே 2017 (UTC)
விக்கிபீடியாவில் கட்டுரை எப்படி எழுதுவது ?
[தொகு]நான் மணல் தொட்டியில் தொடங்க்கி இருப்பது சரியா? மிகச் சிறந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதலாமா?
- மணல்தொட்டியில் எழுதியபின் வேறு பயனர்களிடம் கருத்தறியுங்கள். பார்க்க, விக்கிப்பீடியா:முதல் கட்டுரை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:46, 9 மே 2017 (UTC)
ஏன் இன்னும் மணல்ெதாட்டியிலிருந்து கட்டு ைர பதிேவற்றம் ெசய்யப்படவில்ைல. தயவு ெசய்து பதிலளிக்க வும்
கட்டுரையை தேடி கண்ட பிறகு அதை யார் எழுதியது என்பதை எவ்வாறு கண்டறிவது --TNSE palaniappan svg (பேச்சு) 16:55, 9 மே 2017 (UTC)
என்னுடைய மனல் தொடடியை திறந்தாள் அதில் எவ்வாறு எழுதுவது. அதில் எதுவதற்கான பக்கம் திறக்கப்படவில்லை. எவ்வாறு எழுதுவது.
Elaeocarpus ganitrus / Elaeocarpus
[தொகு]Elaeocarpus ganitrus, Elaeocarpus ஆகிய ஆங்கிலக்கட்டுரைகளுக்கான தமிழ்க்கட்டுரைகளின் பெயர்கள் சரியானவையா எனப்பாருங்கள். --AntanO 09:09, 10 மே 2017 (UTC)
- எஸ் ஜான் பிரிட்டோ எழுதியுள்ள, மைய களவகைத்தாவரவியல் என்னும் நூலில் (பக்கம் 490), தி இராபினாட் ஹெர்பேரியம்:திருச்சிராப்பள்ளி, 1993, Guazuma ulmifolia என்னும் செடி உத்ராக்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:26, 10 மே 2017 (UTC)
- Elaeocarpus ganitrus, Elaeocarpus ஆகிய பற்றிய குறிப்பு உள்ளதா?--AntanO 10:32, 10 மே 2017 (UTC)
- Guazuma ulmifolia என்தை பேரா ஜான் பிரிட்டோ தமிழில் உத்ராக்சம் என்கின்றார். Elaeocarpus ganitrus, Elaeocarpus ஆகியன தமிழகத்தைச்சார்ந்தவை அல்ல எனவே இந்த நூலில் இந்த வகையினங்கள் பற்றியக்குறிப்புகள் காணப்படவில்லை. Elaeocarpus tectorius என்ற சேலா மரத்தினைப்பற்றிய குறிப்புகள் உள்ளன.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:48, 10 மே 2017 (UTC)
பாடப்பொருள் மொழிப்பெயர்ப்பு எவ்வாறு செயல்படுத்துவது என வழிகாட்டவும்
[தொகு]பாடப்பொருள் மொழிப்பெயர்ப்பு படிநிலைகளை குறிப்பிட்டு வழிகாட்டவும்.
- பாடப்பொருள் மொழிப்பெயர்ப்பு என்பது யாது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:02, 10 மே 2017 (UTC)
- Content translation என்பதைத்தான் பாடப்பொருள் மொழிபெயர்ப்பு எனக் குறிப்பிடுகிறார். இதற்கான படிநிலைகள் கீழே பார்க்கவும்.
- உங்கள் பக்கத்தின் மேலுள்ள பீட்டா என்ற அமைப்பைச் சொடுக்கவும்.
- அதில் உங்களுக்கு உதவும் சில கருவிகள் நீங்கள் நிறுவிக்கொள்ளத் தரப்பட்டிருக்கும்.
- அதில் கீழேயுள்ள மொழிபெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்து சேமித்துக் கொள்ளவும்.
- இப்பொழுது உங்கள் பங்களிப்புகள் என்ற இணைப்பருகில் உங்கள் சுட்டியைக் கொண்டு செல்லும் போதே அதில் மொழிபெயர்ப்பு என்ற விருப்பம் இருக்கும்.
- அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
- அதைச் சொடுக்கினால் புதிய மொழிபெயர்ப்புப் பக்கம் ஒன்று திறக்கும்
- ஆங்கில விக்கியில் மொழிபெயர்க்கப்படவுள்ள கட்டுரைகள் பரிந்துரைக்கப்படும்.
- அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய தலைப்பினைத் தட்டச்சு செய்தும் தேர்ந்தெடுக்கலாம்.
- ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பு செய்ய அப்பத்திக்கு வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் சொடுக்கினால் மொழிபெயர்க்கலாம்.
- இக்கருவியில் தானியக்கக் கருவி மொழிபெயர்ப்பு தரமானதாக இல்லாததால் நீங்களாகவே மொழிபெயர்ப்பு செய்யவும்.
நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:24, 14 மே 2017 (UTC)
உளவியல் பாா் ைவ -திருவள்ளுவா்
[தொகு]மணற்ெதாட்டியிலிருந்து எவ்வாறு ேகாப்ைப பதி ேவற்றம் ெசய்வது. ெநடிய நாட்கள் மணல் ெதாடடியி ேல ேய உள்ளது. உதவுங்க ேளன்.
- நண்பரே,. விக்கிப்பீடியா:உதவி என்ற பக்கத்தில் புதிய விக்கிப்பீடியர்களுக்குப் பயன்படும் அனைத்து குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. படிமம் பதிவேற்றம் குறித்து விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் என்ற பக்கத்தில் தகவல்கள் உள்ளன. கோப்பு எனப்படும் FILE களை விக்கியில் படிம வடிவில் மட்டுமே தரவேற்ற இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:48, 10 மே 2017 (UTC)
Moving தமிழ் from 10,000+ article section to 100,000+ article section in Wikipedia main page (https://www.wikipedia.org/)
[தொகு]விக்கிபீடியா தமிழ் பக்கத்தை 100,000+ கட்டுரை பகுதிக்கு நகர்த்த முடியுமாSgvijayakumar (பேச்சு) 21:53, 11 மே 2017 (UTC)
- இது பற்றி உரையாடப்படுகின்றது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:53, 13 மே 2017 (UTC)
மல்லிகை மருத்துவம் எனும் தலைப்பை நீக்குதல் தொடர்பாக
[தொகு]ஒரு செயல் விளக்கத்தின் போது மல்லிகை மருத்துவம் என்ற தலைப்பை உருவாக்கம் செய்வது எவ்வாறு என்று செய்து காண்பிக்கப்பட்டது. அந்தத் தலைப்பில் எழுத என்னிடம் எண்ணம் இல்லை. நீக்கிவிட வேண்டுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 10:36, 13 மே 2017 (UTC)
- மகாலிங்கம் அவர்களே, மல்லிகை மருத்துவம எனும் கட்டுரை நீக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது போல, கட்டுரைகளை நீக்குவதற்குப் பரிந்துரை செய்ய {{நீக்குக}} அல்லது {{delete}} என மேலே சேருங்கள்! சில மணி நேரங்களில் நிருவாகிகள் அவதானித்து நீக்கிவிடுவார்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:53, 13 மே 2017 (UTC)
நன்றி மகாலிங்கம் (பேச்சு) 07:07, 28 சூன் 2017 (UTC)
உதவி
[தொகு]'கனவு விளக்கம்' என்னும் கட்டுரையை எழுதியுள்ளேன். அக்கட்டுரை சரியான அமைப்போடு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதனை மேம்படுத்த தங்களின் கருத்தைக் கோருகிறேன்.
- பார்க்க -> விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதும் முறை பற்றிய விளக்கம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:31, 14 மே 2017 (UTC)
முதன்மைக் கட்டுரைக்கான குறிச்சொல்
[தொகு]முதன்மைக் கட்டுரைக்கான குறிச்சொல் விரியும்போது முதன்மை கட்டுரை என ஒற்று (க்) இல்லாமல் விரிவது தவறு. அதனைச் சரி செய்ய வேண்டும். அது முதன்மைக் கட்டுரை என வரவேண்டும். -இரா. செல்வராசு (பேச்சு) 00:47, 15 மே 2017 (UTC)
- மாற்றப்பட்டுள்ளது.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 01:20, 15 மே 2017 (UTC)
கட்டுரை எழுதும் முறைகள்
[தொகு]நான் முதன் முதலாக எழுதியுள்ள தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி. என்னும் கட்டுரையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? கட்டுரைகளுடன் படங்களை எவ்வாறு இணைப்பது?−முன்நிற்கும் கருத்து TNSE V.N.SADATCHARAVEL VNR (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. த♥உழவன் (உரை) 02:29, 16 மே 2017 (UTC)
- உங்கள் கட்டுரையை அடிக்கடி கவனித்து வாருங்கள். விரைவில் அக்கட்டுரை மேம்படுத்தப்படும். புகைப்படங்களை கட்டுரையில் இணைப்பது எளிது. பொதுவாக கட்டுரையின் வலப்பக்கத்திலேயே புகைப்படங்கள் இணைக்கப்படுகின்றன. விக்கி பொதுவகத்திலுள்ள புகைப்படம் எனில் [[File:புகைப்படக்கோப்பின் பெயர்.jpg|thumb|right|புகைப்படம் பற்றிய குறிப்பு]] எனக் கொடுத்தால் போதும், புகைப்படம் கட்டுரையில் இணைக்கப்படும். உங்கள் கைவசமுள்ள உங்களுக்குக் சொந்தமான புகைப்படத்தை விக்கிப் பொதுவகத்தில் இணைக்க இக்காணொளியைப் பாருங்கள். --இரா. பாலா (பேச்சு) 01:40, 16 மே 2017 (UTC)
- உங்கள் மாவட்டைச் சார்ந்த பயனர்:TNSE Mahalingam VNR என்பவர் உங்களுக்கு நேரில் விளக்கம் தர இயலும். உங்கள் வாழ்விடத்திற்கு அருகில் எனில் உடன் சந்தியுங்கள். உங்கள் DIET கூடல் நடக்கும் போது, அவர் சிறப்பாக விளக்குவாரென்றே நம்புகிறேன். --த♥உழவன் (உரை) 02:26, 16 மே 2017 (UTC)
நியூட்டனின் வளையங்கள் கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டிய பகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை எவ்விதத்தில் சரிசெய்யப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்தால் உடனடியாக சரிசெய்து விடலாம். கட்டுரையானது சரியான பொருளடக்கத்துடன் தான் உள்ளது. மேற்கோள்கள் சரியான விதத்தில் இடப்பட்டுள்ளது. விக்கிப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தாலோ, நடையில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் உடனடியாகச் செய்து விடலாம். ஆலோசனைகளை எதிர்நோக்கியுள்ளேன். --மணிவண்ணன் (பேச்சு) 07:24, 19 மே 2017 (UTC)
பத்திய முட்டை என்ற தலைப்பை கொழுப்பு குறைந்த முட்டை என தலைப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.மேற்கோள்கள் சேர்த்துள்ளேன்.தகுந்த ஆலோசனைகள் வழங்கவும்.--மணிவண்ணன் (பேச்சு) 07:44, 19 மே 2017 (UTC)
நியூட்டனின் வளைய சோதனை கட்டுரையை வடிவமைக்க எனது இருபது ஆண்டுகள் அனுபவத்தைப் பயன்படுத்தியுள்ளேன்.அதில் தாங்கள் காணும் தவறுகளை சுட்டி காட்டினாவ் நலம்.பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.--மணிவண்ணன் (பேச்சு) 11:30, 19 மே 2017 (UTC)
- துப்புரவுப் பணிக்காகவே அக்கட்டுரையில் வார்ப்புரு இணைக்கப்பட்டிருந்தது. உங்களது தொகுத்தலுக்குப் பின்னர் செய்யப்பட்ட மாற்றங்களை இங்கு காணலாம்.--இரா. பாலா (பேச்சு) 13:06, 19 மே 2017 (UTC)
நன்றி.துப்புரவுப் பணி முடிந்ததும், கட்டுரையை ஒளியியல் பகுதியில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மணிவண்ணன் (பேச்சு) 13:46, 19 மே 2017 (UTC)
உதவி மற்றும் வழிகாட்டுதல் தேவை
[தொகு]விக்கி பொதுவகத்தில் உள்ள ஒரு படிமத்தை நாம் பதிவிறக்கம் செய்து சிறிது மாற்றங்கள் செய்து (தமிழ் விளக்கங்கள் கொடுத்து) புதிதாக பொதுவகத்தில் பதிவேற்றம் செய்ய இயலுமா? அப்படிமத்தை நம்முடைய கட்டுரைகளில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் பதிப்புரிமைச் சிக்கல்கள் ஏதேனும் இதில் இருக்கிறதா என்பது குறித்தும் விளக்கம் தேவை நான் Mississipi River என்ற ஆங்கில கட்டுரையில் பயன்படுத்தி இருந்த File:Mississippi River Watershed Map.jpg என்ற படிமத்தை சிறிது (தமிழில் விளக்கம் கொடுத்து) மாற்றம் செய்து File:Mississippi River Watershed Map in Tamil.jpg என்ற பெயரில் பதிவேற்றம் செய்து (மூலப்படிமத்திலுள்ள ஆக்குனர் விவரங்களைக் கொடுத்து) மிசிசிப்பி ஆறு என்ற தமிழாக்கக் கட்டுரையில் பயன்படுத்தியிருந்தேன். தற்போது அதில் ஏதோ பதிப்புரிமைச் சிக்கல் இருப்பதாக எனது பொதுவகப்பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய ஆலோசனைகளையும் உதவியையும் எதிர்பார்க்கிறேன். நன்றி--- ThIyAGU 14:25, 19 மே 2017 (UTC)
- @Thiyagu Ganesh: இங்கு விளக்கம் அளித்துள்ளேன். அந்த உரையாடலைத் தாங்கள் பின்தொடர்ந்து வந்தால் போதுமானது.--இரவி (பேச்சு) 16:45, 19 மே 2017 (UTC)
சீன பெயர்கள்
[தொகு]சீன பெயர்களை தமிழில் எழுதுவதில் சிக்கலாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வேறு எழுத்து இருந்தாலும் தமிழில் ஒன்றாகவே இருக்கிறது. Qing Dynasty Jin Dynasty Qin Dynasty என்பதை சின் அரசமரபு என்பது எப்படி சரியாகும். இப்படி குழப்பங்கள் உள்ளது. என்ன செய்யலாம்? விக்கி 15 போட்டியின் போது இச்சிக்கலை எதிர்கொண்டேன்--குறும்பன் (பேச்சு) 20:03, 20 மே 2017 (UTC)
சில ஆங்காங் வாழ் தமிழர்களுடன் இணைந்து அடிப்படை சீனம் அகரமுதலியை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன். இப்பொழுது தமிழ் விக்சனரியில் ஏறத்தாழ ஆயிரம் சொற்களே உள்ளன. அதில் ஒலிக்கோப்பு, எழுதும் முறை அசைப்படம், சொற்பிறப்பியல், எடுத்துக்காட்டு போன்றவை அடங்கும். மேலும் பல ஒலிக்கோப்புகள் பொதுவகத்தில் உள்ளன. அவற்றின் வெளியிணைப்புகளுக்குச் சென்று தேடினால், உரிய ஒலிக்கோப்பினைக் கேட்கலாம். அதனைக் கேட்டு அதற்கொப்ப தமிழ் பெயரை நீங்களே உருவாக்கக் கேட்டுக் கொள்கிறேன். உரிய தொடுப்புகளை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இணைத்து விடுங்கள். பிறகு சீனம் தெரிந்த தமிழ் நண்பர்களின் மூலம் சரிபார்த்து விடலாம். பகுப்பு:சரிபார்க்கப் பட வேண்டிய சீனத்தலைப்புகள் ஒவ்வொரு கட்டுரையாக சரிபார்க்க அவர்களை அழைப்பதை விட, பத்து பத்து கட்டுரைகளாக, அப்பகுப்பினை சரிபார்க்க அழைக்கலாம். இச்சூழ்நிலை வரின் எனது உரையாடற் பக்கத்திலும் தெரிவியுங்கள். தொடர்கிறேன். வாழ்த்துக்கள். வணக்கம்.--த♥உழவன் (உரை) 01:31, 21 மே 2017 (UTC)
விருப்பம்--குறும்பன் (பேச்சு) 14:30, 21 மே 2017 (UTC)
- நன்றி த-உழவன். நான் பொதுவாக இவ்வாறான ஆங்கில மொழியல்லாத சொற்களின் ஒலிப்பைக் கண்டறிவதற்கு உருசிய விக்கியையே தேடிப் போவேன். உருசிய மொழி ஒலி பொதுவாக ஆங்கிலம் போலல்லாமல் தமிழ் போன்று எழுத்தும், ஒலிப்பும் ஒன்றாகவே இருக்கும். Jin, Qin இரண்டும் கிட்டத்தட்ட ஒரே ஒலிப்பு. (மீண்டும் துல்லியமாக சரி பார்க்க வேண்டும்). இரண்டும் ஒரே ஒலிப்பு என்றால் அடைப்புக்குறிகளுக்குள் காலப்பகுதியைக் குறித்து வேறுபடுத்தலாம்.--Kanags \உரையாடுக 01:57, 21 மே 2017 (UTC)
விருப்பம்--குறும்பன் (பேச்சு) 14:30, 21 மே 2017 (UTC)
- சீன சொல் உருவாக்கம், எனக்கு நல்ல அனுபவம். நான் அதனைச் சிரமப் பட்டே தொடங்கினேன். அதுபோல, உங்களைப் போன்ற பன்மொழி திறனாளரின் மொழி அறிவை நிலைநாட்ட பல்வேறு தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அவை தற்போது உள்ளன. விரிவாக பிறகு...எமது நீண்ட நாள் உரையாடல்கள், சீனி, நீச்சல்காரன், காமன்சு சிபி என பல நிரலர்களின் திறன், உழைப்பு யாவருக்கும் பயன்படப் போகிறது. சீனியின் வியன்னா பயணம் நம் தமிழ் விக்கிக்கு பல மாற்றங்களைத் தரப் போகிறது. எப்படி விக்கிமூலத்தில் இந்திய அளவில் பல மாற்றங்கள் ஒரு சில மாதங்களில் நடைபெற்றதோ அதுபோல... மேற்கூறிய பொதுவக ஒலிக்கோப்புகளை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். அதற்கு உங்களின் உதவி தேவை. அவற்றை ஒரு விரிதாளில் மாற்றி தந்தால் உங்களுக்கு உதவியாக இருக்குமா? அல்லது வேறு என்ன பணி செய்தளித்தால், அது காலத்தையும் கடந்து நிற்க போகும் உங்களின் இரசிய-தமிழ் ஆங்கில அகரமுதலி உதவும்? ஏற்கனவே @Drsrisenthil: மருத்துவர் செந்தி சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். அப்பொழுதை விட, தற்பொழுதுள்ள நுட்பதிறன் நமது இலக்கை எளிமையாக்கும். இரசிய-தமிழ் அகரமுதலி நூல் சில தனிப்பட்ட எனது வாழ்வியல் சூழ்நிலைகளால் தெளிவான கோர்வையாக என்னால் சொல்ல இயலவில்லை. நீங்களே திட்டமிடுங்கள். உடன் இணைகிறேன். ஆவலுடன்..--த♥உழவன் (உரை) 08:30, 21 மே 2017 (UTC)
படம் பதிவேற்றல்
[தொகு]மெயிலில்(email)உள்ள போட்டோவை கட்டுரைக்கு எப்படி எடுத்து பயன்படுத்துவது?
- வணக்கம். நீங்கள் உங்கள் மடற்பெட்டியில் கொண்டுள்ள படம் முதலில் உங்களுக்குச் சொந்தமானதாக, பதிப்புரிமை உள்ளதாக இருக்க வேண்டும். அடுத்து, அது தக்க ஒரு விக்கிப்பீடியா கட்டுரையில் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு உள்ள படங்களை இங்கு பதிவேற்றுங்கள். பதிவேற்ற உதவிக்கு First steps பக்கம் பாருங்கள். பதிவேற்றிய பிறகு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் எப்படி பதிவேற்றுவது என்று அறிய இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள். --இரவி (பேச்சு) 13:48, 24 மே 2017 (UTC)
பகுப்பு தொடர்பான உதவி
[தொகு]பகுப்பு:இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் துணைப் பகுப்பை, முக்கிய பகுப்பான பகுப்பு:இமாச்சலப் பிரதேசம் எனும் பகுப்புடன் சேர்க்கக் கேட்டுக் கொள்கிறன். அதே போன்று பகுப்பு:ஒரிசா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் துணைப்பகுப்பை முக்கிய பகுப்பான பகுப்பு:ஒடிசா எனும் பகுப்புடன் சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 14:16, 31 மே 2017 (UTC)
- நகரங்கள் தொடர்பான பகுப்புகள் அந்நாட்டின் அல்லது மாநிலத்தின் புவியியல் பகுப்புக்குக்கீழ் வருவதே முறை.--Kanags \உரையாடுக 08:58, 31 மே 2017 (UTC)
தலைப்பு மாற்றம் தொடர்பான உதவி
[தொகு]அறிவியல் மன்றம் என்ற தலைப்பை அறிவியல் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். உதவி தேவை.--TNSE G.Velladurai VNR (பேச்சு) 06:53, 2 சூன் 2017 (UTC)
சோடியம் சல்பேட் கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டிய பகுப்பிலிருந்து மீட்க வேண்டி
[தொகு]சோடியம் சல்பேட் கட்டுரையானது தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரைத் தலைப்பானது ஸ்ரீகர்சன் அவர்களால் அளிக்கப்பட்ட பட்டியலில் காணப்பட்டது. கட்டுரையானது, ஆங்கிலத்தில் Sodium sulfate என்ற கட்டுைரயிலிருந்து content translation முறையில் உருவாக்கப்பட்டது தான். மொழியாக்கத்தில் ஏதேனும் தவறுகள் காணப்பட்டால் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதைத் திருத்தி விடலாம்.--மகாலிங்கம் (பேச்சு) 02:05, 3 சூன் 2017 (UTC)
- மொழிமாற்றத்தில் தவறேதும் இல்லை. ஆனாலும், வடிவமைப்பில் மாற்றம் வேண்டும். தகவல் சட்டத்தை எதற்காக ஒரே வரியில் எழுதியுள்ளீர்கள். அறிமுகப் பகுதி சிறிய எழுத்துகளில் உள்ளன. ஆங்கிலத் துணைத்தலைப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 02:23, 3 சூன் 2017 (UTC)
- மகாலிங்கம், மேலும் ஒரு பரிந்துரை: ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்களுக்கு இக்கருவியை நிறுவி அதனைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். இதனால் உங்கள் கட்டுரைகளில் துப்பரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இலகுவாக இருக்கும். இதனை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து உங்கள் விக்கிப் பயிற்சியாளரிடம் கேட்டு அறியுங்கள். @Info-farmer and Balurbala:--Kanags \உரையாடுக 02:32, 3 சூன் 2017 (UTC)
- கட்டுரையில் உள்ள தகவல் பெட்டியில் சில உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளதால் தான் {{cleanup may 2017}} துப்புரவு வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அவற்றையும் தமிழில் மாற்றிவிட்டு கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வார்ப்புருவை நீங்களே எடுத்துவிடுங்கள். என் கோரிக்கையை ஏற்று முக்கிய கட்டுரைகளை உருவாக்கிவருவதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 02:36, 3 சூன் 2017 (UTC)
மிக்க நன்றிகள். அவ்வாறே செய்து விடுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 02:41, 3 சூன் 2017 (UTC)
- மகாலிங்கம், cleanup போன்ற பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்காதீர்கள். இவற்றை அனுபவமுள்ள பயனர்கள் கவனித்து நீக்குவார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:45, 3 சூன் 2017 (UTC)
Kanags, நான் அனுபவமுள்ள பயனர்கள் கூறும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்தே வருகிறேன். முதல் பத்தி எவ்வாறு சிறிய எழுத்துக்களில் அமைந்தது என்று தெரியவில்லை. சோடியம் சல்பேட்டு கட்டுரையை தொடர்ந்து நான் விரிவாக்கலாமா? வேண்டாமா? நீங்களே அந்தக் கட்டுரையை சரிசெய்து விடுங்கள். நன்றிகள். --மகாலிங்கம் (பேச்சு) 11:09, 3 சூன் 2017 (UTC)
- கட்டுரையின் வரலாற்றைக் கவனியுங்கள். எவ்வாறு அந்தத் தவறு வந்ததென நீங்களே அறிவீர்கள். கட்டுரையில் ஏற்பட்ட தவறுகள் களையப்பட்டு விட்டன. எனவே இக்கட்டுரையை மேலும் விரிவாக்க விரும்பினால் நீங்கள் தாராளமாக விரிவாக்கலாம். பராமரிப்பு வார்ப்புருவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.--Kanags \உரையாடுக 11:24, 3 சூன் 2017 (UTC)
துப்புரவு பணிகள் - ஆசிரியர் பயிலரங்கு
[தொகு]Kanags! தமிழகத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2நபர்கள் வீதம் மொத்தம் 64நபர்கள் தலைநகரான சென்னைக்கு கடந்த மே 2,3,4 வரவழைக்கப்பட்டு பயிற்சி தரப்பட்டது. அதில் கலந்து கொண்டு பயிற்சி அளித்த விக்கியர்களைக்குறித்து அதுபற்றிய பக்கத்தில் காணலாம். அப்பொழுது சில வழிமுறைகளை 'வாட்சு அப்' வழியாக, பார்வதிசிறீ ஒருங்கிணைத்தார். நான் அந்த சேவையை பயன்படுத்துவதில்லை. எனவே, அதுபற்றிய விவரம் அறியேன். பிறகு சென்னையிலும் அத்தேதியில் பார்வதிசிறீ உட்பட நாங்கள் ஐவர் கலந்து கொண்டோம். அங்கு இணைய இணைப்பு தடை நிலவியது. மேலும், ஒருங்கிணைந்த பயிற்சி நடக்கவில்லை. இறுதிநாள் 5 மாவட்டங்களைத் தந்தனர். ஒத்தி வைத்த மாவட்ட அளவிலான மூன்றுநாள் பயிற்சி தொடங்கும் போது, பெரம்பலூர்,அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக செல்ல மட்டுமே முடியும். அங்கு உகந்த சூழ்நிலை இருப்பின் இக்கருவி பற்றி அறிமுகப்படுத்துவேன். நீங்கள் கூறிய நபர் வேலூர் மாவட்டம். எனினும், அவரை அலைப்பேசி வழியே தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். நடக்கவிருக்கும் பயிற்சியில் தமிழ்நாட்டு அளவில் 6000-7000ஆசிரியர்கள் கலந்து கொள்வர். பயிலுமிடப்(மணல்தொட்டி ) பயன்பாடு இல்லாமல் கட்டுரைகள் எழுதும் சூழ்நிலையே தற்போது அதிகம் உள்ளது. எனவே, துப்புரவு பணியடர்வு அதிகம் வர வாய்ப்புள்ளது என்பது எனது கவலையாக உள்ளது. விக்கியினுள்ளே செய்யவேண்டியன பற்றியும், முதல்நிலை பங்களிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்யக்கூடாதவைகளையும் நாம் எண்ண வேண்டும். வணக்கம்.--த♥உழவன் (உரை) 02:59, 3 சூன் 2017 (UTC)
தலைப்பை மாற்றுதல் -உதவி
[தொகு]நான் தொடங்கிய கட்டுரையின் தலைப்பினை எவ்வாறு மாற்றம் செய்வது ? Dsesringp
- @Dsesringp: பார்க்க - விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல். இது போன்ற உரையாடல்களில் எப்படி கையெழுத்திடுவது என்று அறிய இங்கு பாருங்கள். கூடுதல் உதவிப் பக்கங்களுக்கு விக்கிப்பீடியா உதவி வலைவாசலைப் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:05, 5 சூன் 2017 (UTC)
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் சமயம் சார்நத கட்டுரைகளை எழதுவது எப்படி--Anishikunew (பேச்சு) 02:39, 19 சூன் 2017 (UTC)
கல்வி நுட்பவியல்
[தொகு]மணல்தொட்டியிலிருந்து கல்வி நுட்பவியல் என்ற தலைப்பில் பொது வெளிக்கு நகர்த்தப்பட்ட கட்டுரையின் நிலை என்ன?
- கல்வி நுட்பவியல் கட்டுரை இருக்கிறது. ''நிலை என்ன?'' என எதைக் கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை!.--இரா. பாலாபேச்சு 14:24, 6 சூலை 2017 (UTC)
how to put table
[தொகு]how to put table--இரவி (பேச்சு) 11:39, 21 சூன் 2017 (UTC)
- கருவிப் பெட்டியில் பட்டியல் (பெட்டி வடிவம்) என்பதைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags \உரையாடுக 12:14, 21 சூன் 2017 (UTC)
- ஆசிரியர்கள் எப்படி உதவி கோருவது என்பதை விளக்கிக் காட்ட இக்கேள்வியை இட்டேன். சிரமத்துக்கு வருந்துகிறேன். ----இரவி (பேச்சு) 14:15, 21 சூன் 2017 (UTC)
பயிற்சிக் காணொலிகள்
[தொகு]ஆங்கிலத்தில் உள்ளதுபோல், தமிழிலும் பயிற்சிக் காணொலிகள் தேவையாகிறது.
கட்டுரைப்பகுப்பு
[தொகு]எனது கட்டுரையை (அரசு கல்லூரி கும்பகோணம் இயற்பியல் துறை மற்றும் இதயா மகளிர் கல்லூரி கும்பகோணம் தமிழ்த்துறை ) சரியான வழியில் பகுக்க முடிய வில்லை. தயவு செய்து உதவவும்.
மேற்கோள்கள் : சில ஐயங்கள்
[தொகு]வணக்கம், என் பெயர் ஜே. பிரெஞ்சு விக்கிப்பீடியா குழுவில் தமிழ் பொறுப்பில் இருக்கிறேன். பிரெஞ்சு - தமிழ் தொடர்பான சில விடயங்களை அறிஞர்கள் மூலமாக ஆவணப் பதிவு செய்து வருகிறேன். அப்படியான காணொளிகளை மேற்கோளாக கட்டுரைகளில் பயன்படுத்தலாமா??? ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிப்பெயர்த்து மேற்கோளாக பயன்படுத்தலாமா??? பிரெஞ்சிலிருந்து தமிழில் அடிப்படையாக மொழிப்பெயர்க்க வேண்டியவை எவையென்று சொல்வீர்கள்... சில கருத்துகள்... நன்றி !
பயனர் பட்டியல் தேவை
[தொகு]@Shanmugamp7:, VLR, VNR என்று குறிப்பிட்டாவறு முடியும் பயனர்களின் பட்டியலை எடுக்க ஒரு Quarry வினவல் தேவை. --இரவி (பேச்சு) 23:32, 5 சூலை 2017 (UTC)
- @Ravidreams: [1]--சண்முகம்ப7 (பேச்சு) 14:03, 6 சூலை 2017 (UTC)
- @Shanmugamp7:, நன்றி.--இரவி (பேச்சு) 18:26, 6 சூலை 2017 (UTC)
பெயர் மாற்றம் தேவை
[தொகு]நன்னுால் உரையாசிரியா்கள் என்ற தலைப்பை ’’’நன்னூல் உரையாசிரியா்கள்’’’ மாற்றுக -TNSE Rekhasaro DIET CHN (பேச்சு)
- நன்னுால் உரையாசிரியா்கள் மற்றும் நன்னூல் உரைநூல்கள் ஆகிய இரு கட்டுரைகளையும் நன்னூல் எனும் கட்டுரையுடன் இணைக்கலாம் எனக் கருதுகிறேன்.--இரா. பாலாபேச்சு 08:51, 10 சூலை 2017 (UTC)
ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் மேலும் தகவல்களை தொகுத்தால், பங்களிப்பில் மேம்பட்ட தகவல்களை தொகுத்
[தொகு]--TNSE GANAPATHY DIET MDU (பேச்சு) 10:04, 13 சூலை 2017 (UTC)கணபதி டயட் மதுரை
மேம்பட்ட தகவல்களை தொகுப்பவர் பெயர் பங்களிப்பவர் பட்டியலில் சேர்க்கப்படுமா ?
[தொகு]--TNSE GANAPATHY DIET MDU (பேச்சு) 10:11, 13 சூலை 2017 (UTC)கணபதி டயட் மதுரை
- சேர்க்கப்படுவது நல்லது. @Ravidreams: இன் கவனத்திற்கு.--Kanags \உரையாடுக 10:15, 13 சூலை 2017 (UTC)
விக்கித்தரவு
[தொகு]மாங்கனீசு(II) மாலிப்டேட்டு கட்டுரையை விக்கித்தரவில் இணைத்த பின்னர் ஆங்கில விக்கியின் மொழிகள் பட்டியலில் தமிழ் தெரியவில்லை. கவனிக்கவும் --கி.மூர்த்தி (பேச்சு) 15:53, 19 சூலை 2017 (UTC)
Wikimedia Community User Group Sri Lanka
[தொகு]Dear volunteers,
As editors contributing to content relating to Sri Lanka, you are warmly invited to join the official Wikimedia Community User Group Sri Lanka and to subscribe to its mailing list, Wikimedia-LK. The user group currently includes volunteers from Wikipedia and other projects, from the English, Sinhala, and Tamil speaking communities. It is the Wikimedia-approved platform for editors from Sri Lanka to enable wider collaboration, for both online and offline projects. With your support, we hope to organize cross-project content improvement drives as part of online projects, as well as organize in-person edit-a-thons, training sessions, photowalks, and other such activities, in the near future. The ultimate goal(s) of these initiatives is to improve the overall coverage and quality of topics relating to Sri Lanka, as well as encourage new editors to join the Wikimedia community, while simultaneously empowering and retaining our existing team of editors. There are no mandatory obligations for members who choose join the community, other than the usual editing rules for online projects, and the friendly space policy for in-person projects. You may also (or instead) subscribe to the mailing list, where any member could initiate discussions with volunteers across projects, notify members of events and meetings, stay up to date with competitions, organize your own events, and so on. See you on board, and Happy Editing! | |
Rehman 09:25, 29 சூலை 2017 (UTC) |
- Apologies for posting the above message in English. Appreciate if a kind volunteer can help with translation? We also need assistance with creating the Tamil-language pages at Meta. Any help is welcome! :) Rehman 09:25, 29 சூலை 2017 (UTC)
காலாவதியான இணையத்தள முகவரி
[தொகு]கட்டுரைகளில் மேற்கோளுக்காக இணைக்கப்படும் இணையத்தள முகவரிகள் சில காலங்களுக்குப் பின்னர் காலாவதியாகிவிடுகின்றன (The page no longer exists). அம்மாதிரியான மேற்கோள்களால் எவ்விதப் பயனும் இல்லை. இம்மாதிரியான மேற்கோள்கள் உடைய கட்டுரைகளை இனம் காணும் தானியங்கி ஏதாவது உள்ளதா? உதாரணமாக 2013 லிட்டில் இந்தியா கலவரம் கட்டுரையில் மேற்கோளாகச் சுட்டிய இணையப் பக்கங்கள் பெரும்பாலானவை காலாவதியாவிட்டன. இவ்வாறான இணைய முகவரிகளை முதலிலேயே இனம் காண இயலுமா? நன்றி.
குறிப்பு: இதுபற்றி ஏற்கனவே உரையாடியிருந்தால் அதன் இணைப்பைத் தரவும்.--இரா. பாலாபேச்சு 03:28, 31 சூலை 2017 (UTC)
- இணையத்தளம் ஒன்றில் இருந்து, குறிப்பாக செய்தித் தளங்களில் இருந்து மேற்கோள் சுட்டும் போது பார்த்த நாள் கட்டாயமாகத் தரப்பட வேண்டும். இது தரப்பட்டிருந்தால், குறிப்பிட்ட முகவரி நீக்கப்பட்டிருந்தாலும், புதிய இணைப்பு தரும் வரை கட்டுரையில் வைத்திருக்கலாம். மேலும், பொதுவாக இணைப்புத் தரும் போது வெறுமனே இணைய முகவரி மட்டும் தந்தால் போதாது. முழுத் தகவலும் தரப்பட வேண்டும். ஆங்கில விக்கியில் dead link தகவல் இணைப்பதற்கு தானியங்கிகள் உள்ளன. தானியங்கி இணைத்தாலும் அவ்விணைப்புகள் கட்டுரையில் இருந்து நீக்கப்படுவதில்லை. இங்கு தமிழில் நீண்ட காலத்திற்கு முன்னர் தெரன்சு இவ்வாறான தானியங்கியை செயல்படுத்தி இயக்கினார்.--Kanags \உரையாடுக 07:35, 31 சூலை 2017 (UTC)
வார்ப்புரு மாற்றம்
[தொகு]வார்ப்புரு:பாண்டியர் வரலாறு, அது பயன்படும் பக்கங்களின் பெரும்பகுதியை பிடித்து நிற்கின்றது. இதை மாற்றி இங்குள்ளது போல் சுருக்கமான மன்னர் விவரங்களைக் கொடுப்பது பொருத்தம் எனக் கருதியதால், பாண்டியர் வார்ப்புருவை Navbox வார்ப்புருவாக மாற்ற முயற்சித்தேன். எனினும், மேற்படி வார்ப்புரு பெரும்பாலான பக்கங்களில் (அவற்றின் துவக்கத்திலேயே) இடப்பட்டிருப்பதால் , இந்த மாற்றத்தின் பின், அக்கட்டுரைகளின் மேற்பகுதியில் குறுக்காக இந்த Navbox வார்ப்புரு வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதைத் தவிர்க்க ஏதும் வழியுள்ளதா? அல்லது புதிதாக வேறொரு Navbox வார்ப்புருவை உருவாக்கி, ஒவ்வொரு பக்கமாக திருத்துவது தான் ஒரே வழியா? --5anan27 (பேச்சு) 10:15, 15 ஆகத்து 2017 (UTC)
- பொதுவாக இவ்வகை வார்ப்புருக்கள் கட்டுரையின் கீழே இருப்பதே வழக்கம். எனவே வார்ப்புரு:பாண்டியர் வரலாறு பக்கத்தை நீங்கள் உருவாக்கிய புது வடிவத்திற்கு மாற்றி, கட்டுரைகளின் மேற்பகுதியில் இருக்கும் வார்ப்புருவை கட்டுரையின் கீழே அமைத்துவிடுங்கள்.-நீச்சல்காரன் (பேச்சு)
- @5anan27: நீங்கள் உருவாக்கிய புதிய வார்ப்புருவிற்கு புதிய பெயர் இடுங்கள். உ+ம்: வார்ப்புரு:பாண்டிய மன்னர்கள். பழைய வார்ப்புரு அப்படியே இருக்கட்டும். அனைத்துக் கட்டுரைகளிலும் நீச்சல்காரன் கூறியது போன்று கட்டுரைகளில் மேலுள்ளதை நீக்கிவிட்டு, இறுதியில் (பகுப்புகளுக்கு மேல்) புதிய வார்ப்புருவை சேர்க்கலாம். பாண்டியரின் சின்னத்தையும் புதிய வார்ப்புருவில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 10:19, 16 ஆகத்து 2017 (UTC)
- @Neechalkaran:, @Kanags:, மிக்க நன்றி. அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள எல்லாப் பக்கங்களிலுமே இந்த மாற்றத்தை செய்யவேண்டுமே என்றே கேட்டேன். ஆயிற்று. உருவாக்கியுள்ள வார்ப்புரு:பாண்டிய மன்னர்கள் பட்டியலை இணைத்து விடுகிறேன். இன்னொரு ஐயம். இந்த சேர, சோழ, பாண்டிய கொடிகள் எந்த சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை? சேர, பாண்டியக் கொடிகளாவது பரவாயில்லை. புலிக்கொடி மிகைப்படுத்தப்பட்டது போலிருக்கிறது. அவை உண்மையிலேயே தொல்பொருள் முத்திரை ஆதாரங்களை வைத்து உருவாக்கப்பட்டவையா? --5anan27 (பேச்சு) 15:39, 16 ஆகத்து 2017 (UTC)
தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகள் இணைப்பதில் எழும் சிக்கல்
[தொகு]தமிழில் எழுதப்பட்ட கட்டுரையை ஆங்கிலக் கட்டுரையுடன் இணைத்த பிறகும், ஆங்கிலக் கட்டுரையுடன் தமிழ் கட்டுரை இணைக்கப்பட்டிருப்பது தெரியவில்லை. Content translation முறையில் மொழிபெயர்க்கும் போது இந்தப் பிரச்சனைகள் எழவில்லை. ஆனால், ஒரு கட்டுரையை சாதாரணமான முறையில் மொழிபெயர்த்து விட்டு இணைக்கும்போது, இந்தப் பிரச்சனை எழுகிறது. இதன் காரணமாக, ஆங்கிலக் கட்டுரையை எடுத்து தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கும் போது (இணைப்பு காட்டப்படாததால்) மீண்டும், மீண்டும் எழுதப்பட்ட கட்டுரைகள் எழுதப்படுவதற்கு காரணமாய் அமைகிறது. இதை சரிசெய்ய இயலாதா?--மகாலிங்கம் (பேச்சு) 16:43, 19 ஆகத்து 2017 (UTC)
- இப்பிரச்சினை சில வேளைகளில் தான் எழுகிறது. உங்கள் ஆங்கில விக்கிக் கணக்கில் உங்கள் Preference இல் Beta Features இல் Compact language links என்பதைத் தேர்ந்தெடுத்து சேமியுங்கள்.--Kanags \உரையாடுக 22:36, 19 ஆகத்து 2017 (UTC)
Kanags, மிக்க நன்றி. நான் தாங்கள் சொன்னவாறு முயன்று பார்க்கிறேன். --மகாலிங்கம் (பேச்சு) 00:47, 20 ஆகத்து 2017 (UTC)
பயனர் பக்கம்
[தொகு]பயனர் பக்கம் ஒன்றை உருவாக்கும் போது ஒரு வார்ப்புருவினை பயன்படுத்துவது எவ்வாறு?--ப.விஜயகாந்தன் (பேச்சு) 05:54, 5 செப்டம்பர் 2017 (UTC)
பயனர் கணக்கை நீக்குதல் தொடர்பாக
[தொகு]வணக்கம், நான் 17 அக்டோபர் 2014 அன்று P.vijayakanthan எனும் பயனர் பெயரில் விக்கிப்பீடியாவில் புது பயனர் கணக்கினை தொடங்கினேன். இக்கணக்கின் ஊடாக ஒருசில பங்களிப்புக்களை செய்துள்ளேன்.
தவறுதலாக 9 ஆகத்து 2017 அன்று P.Vijayakanthan எனும் பயனர் பெயரில் மற்றும் ஒரு பயனர் கணக்கினை தொடங்கிவிட்டேன். இதனூடாகவும் சில பங்களிப்புக்களை செய்திருப்பதோடு இதற்கான பயனர் பக்கத்தினையும் உருவாக்கியுள்ளேன்.
இப்போது ஒரு கணக்கினை நீக்க வேண்டும் அதேநேரம் எனது இரண்டு கணக்குகளிலுமுள்ள பங்களிப்புக்களை தக்கவைக்க வேண்டும். உதவுவீர்களா?--ப.விஜயகாந்தன் (பேச்சு) 05:56, 5 செப்டம்பர் 2017 (UTC)
- @Shanmugamp7: கவனிக்க.--Kanags \உரையாடுக 09:53, 1 செப்டம்பர் 2017 (UTC)
- ஆலமரத்தடியில் பதிலளித்துள்ளேன்--சண்முகம்ப7 (பேச்சு) 14:19, 3 செப்டம்பர் 2017 (UTC)
நான் விக்கியில் கட்டுைைர ஒன்று ெதாகுத்துள்ேளன் ஆனால் இன்னும் ெவளியிடப்படவில்ைல எ
[தொகு]என்ன காரனமாக இருக்கும்? ெசாந்த விைசப்பலைக மற்றும் பாமினி யுனிக்ேகாட் எனக்கு ெதரிந்ததால் நான் மனல் ெதாட்டியில் பயிற்சி ெசய்தது இல்ைல எனது கட்டுைைைைர முன்ேதாற்றம் மட்டும் காட்டப்படுகிறது. நான் எழுதிய தைலப்பில் ஏதும் சிக்கலா
- யுனிக்கோடில் தமிழில் எழுத இந்த விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:08, 6 செப்டம்பர் 2017 (UTC)
எப்படி ஒரு புதிய கட்டுரையை தொகுப்பது மற்றும் பழைய கட்டுரையை மாற்றுவது என்பதைப்பற்றி அச்சம்...
[தொகு]விக்கிப்பீடியாவில் எப்படி ஒரு புதிய கட்டுரையை தொகுப்பது மற்றும் பழைய கட்டுரையை மாற்றுவது என்பதைப்பற்றி படித்தேன் ஆனால் எனக்கு சரியாக புரியவில்லை , மேலும் தெரியாமல் தவறாக தொகுத்துவிட்டால் என்ன நேரிடும் என்ற அச்சமும் உள்ளது. எனவே தயவுசெய்து யவரேனும் உதவவும் . எனது சந்தேகங்களை நீக்க இந்த மின் அஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் (tamizlanbala@gmail.com).--−முன்நிற்கும் கருத்து Balaji. G M (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கருவிகள் வேலை செய்யவில்லை
[தொகு]விரைவுப் பகுப்பி போன்ற கருவிகள் வேலை செய்யவில்லை ஏதாகினும் சிக்கல் உள்ளதா தெரிந்தவர்கள் கூறவும்--அருளரசன் (பேச்சு) 06:24, 6 அக்டோபர் 2017 (UTC)
- @Arulghsr: அண்மையில் விருப்பத்தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உங்கள் விருப்பத்தேர்வுக்கு சென்று மீண்டும் விரைவுப் பகுப்பியைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags (பேச்சு) 01:37, 16 அக்டோபர் 2017 (UTC)
நன்றி Kanags இப்போது கருவிகள் வேலை செய்கின்றன--அருளரசன் (பேச்சு) 03:23, 16 அக்டோபர் 2017 (UTC)
டி. ஆர். பாப்பா
[தொகு]நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு .ஒரு இசை அமைப்பாளரின் ஆன்மாவை கேவலப்படுத்தகிறீர்கள் . நல்ல எழுத்துக்களை வேண்டுமென்றே உங்கள் சுயநலத்துக்கு பயன் படுத்து கிறீர்கள் . நமக்கு தெரியாததை இவன் எழுதி விட்டானே என்ற ஈகோ விக்கி பீடியாவின் தரத்தை விரைவில் குறைத்து விடும் .டி .ஆர் .பாப்பா கட்டுரை நீக்கலுக்காக பலத்த கண்டனத்துடன் கா .நாகராஜன்
- நாகராஜன், விக்கிப்பீடியாவைப் பற்றி முதலில் அறிந்து கொண்டு கட்டுரைகள் எழுதுங்கள். வேறு இணையத்தளங்களில் இருந்து பிரதி செய்யப்பட்டு எழுதப்படும் கட்டுரைகள் அல்லது தொகுப்புகள் உடனடியாகவே நீக்கப்படும். இது குறித்து உங்களுக்கு பல முறை எச்சரிக்கப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 01:31, 16 அக்டோபர் 2017 (UTC)
இது எங்கும் பிரதி எடுக்கப்படவில்லை .என் சொந்த படைப்பு தான் .உங்களுக்கு என் படைப்பு மேல் பொறாமை .எனவே உங்கள் சொந்த பொறாமை ,மற்றும் ஆற்றாமை காரணமாய் இதே பதிலை சொல்லி பிறர் படைப்பு திறனை கொச்சை படுத்துகிறீர்கள் .விக்கிபீடியா தரம் தாழ்ந்து வருகையில் அதற்கு நீங்களும் ஒரு காரணகர்த்தா ஆக இருப்பீர்கள் . என்னுடைய blog க்கில் 1200 கட்டுரைகள் உள்ளன . அதில் எடுக்கப்பட்டதே டி .ஆர் .பாப்பா கட்டுரை .பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் .உங்களைப்போல் குற்றம் கண்டுப்பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கின்றனர் .நீங்கள் இரண்டாம் பிரிவை சேர்ந்தவர் கே .நாகராஜன்
- இங்கு கவனிக்க. --AntanO (பேச்சு) 02:16, 16 அக்டோபர் 2017 (UTC)
ஆசிய மாதம் போட்டி விதிகள் தொடர்பான உதவி
[தொகு]நான் விக்கிப்பீடியாவில் 6 மாத கால வயதுள்ள புதிய பயனர் தான். தற்போது ஆசிய மாதம் கட்டுரைப் போட்டிகளில் 300 வார்த்தைகளுக்கு அதிகமாக கட்டுரைகள் படைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. word count tool பயன்படுத்தி வார்த்தைகள் எண்ணிக்கை சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு word count tool பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கம் தேவை.--மகாலிங்கம் (பேச்சு) 16:50, 6 நவம்பர் 2017 (UTC)
தொடங்கிய கட்டுரைகள் விவரம் அறிவதில் சிக்கல்
[தொகு]பங்களிப்புகளிலிருந்து செல்லும் தொடங்கிய கட்டுரைகள் என்னும் இணைப்பு வேலைசெய்யவில்லையா? எவ்வாறு இதுவரை எழுதிய கட்டுரைகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்வது?--மகாலிங்கம் (பேச்சு) 16:37, 9 நவம்பர் 2017 (UTC)
- [2] இங்கே சொடுக்குங்கள்.--இரா. பாலாபேச்சு 11:15, 29 நவம்பர் 2017 (UTC)
புதிய பகுப்பு உருவாக்குவது எப்படி?
[தொகு]நாம் எழுதிய கட்டுரைக்கு ஏற்கெனவே உள்ள பகுப்புகள் அல்லாமல் ஒரு புதிய வகை பகுப்பினை எவ்வாறு உருவாக்குவது?--மகாலிங்கம் (பேச்சு) 16:08, 24 நவம்பர் 2017 (UTC)
- 1.[[பகுப்பு:நீங்கள் உருவாக்க நினைக்கும் தலைப்பு]] என்பதை போல கட்டுரையில் இணைக்கலாம். அதன் பிறகு சிவப்பிணைப்பாக தோன்றும் பகுப்பினை உருவாக்கி, ஏற்ற தாய்ப்பகுப்பினை இட வேண்டும்.2. நீங்கள் உருவாக்க நினைக்கும் தலைப்பினை விக்கிப்பீடியாவில் தேடினால், புதியதாக உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியோடு சிவப்பிணைப்பாக தோன்றும், அதனை சொடுக்கி தாய்ப்பகுப்பு இணைத்து பகுப்பினை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதனை ஏற்ற கட்டுரையில் இணையுங்கள்.
இவ்வாறு பகுப்பினை உருவாக்கும் முன் ஏற்ற பெயர்களில் அல்லது அதனை ஒத்த பொருளில் பகுப்பு உள்ளதா என்று கவனமாக பார்த்துக் கொள்ளவும்.3. இவை கடினமாக இருக்கும் பட்சத்தில் மற்ற விக்கிப்பீடியர்களை பகுப்பினை உருவாக்கி தர சொல்லி ஏற்ற கட்டுரைகளில் இடலாம். நன்றிங்க.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:45, 9 திசம்பர் 2017 (UTC)
சரியான தமிழ் சொற்கள்
[தொகு]- region -
- zone -
இவ்விரு சொற்களுக்கான சரியான தமிழாக்கம் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:40, 25 திசம்பர் 2017 (UTC)
- zone - வலயம், region - வட்டாரம் (பிராந்தியம் வடசொல் மூலமாகத் தெரிகிறது).--Kanags (பேச்சு) 07:06, 26 திசம்பர் 2017 (UTC)
- இரண்டு சொற்களின் பொருள் பயன்படுத்தும் முறையில் வேறுபடும். உதாரணம் Time Zone -நேர வலயம்; இங்கு வலயம் என்பது சரியான பொருள். Zonal office - மண்டல அலுவலகம். இங்கு Zone என்பது மண்டலம் என பொருள்படும். Region என்பது பிரதேசம் அல்லது சில சமயங்களில் மண்டலம் என்றும் வழங்கப்படும். உதாரணம் Regional Office - மண்டல அலுவலகம் என்பதே சரியான பொருளாகும். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 07:26, 26 திசம்பர் 2017 (UTC)
- நன்றி உமாசங்கர்.--Kanags (பேச்சு) 07:39, 26 திசம்பர் 2017 (UTC)
- @Kanags:, @Umashankar81: தெளிவுபடுத்தியதற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:19, 26 திசம்பர் 2017 (UTC)
ஆவியுடன் இதை இணைக்க முடியவில்லை--குறும்பன் (பேச்சு) 08:22, 23 பெப்ரவரி 2018 (UTC)
நான் எழுதிய கட்டுரையை நான் எங்கு சென்று பார்ப்பது :? ==
நான் நன்கு ஐந்து கட்டுரைகளை எழுதினேன் சென்றவாரம் தற்போது எங்கு சென்று அந்த கட்டுரைகளை பார்ப்பது --Sugayaazh (பேச்சு) 05:38, 14 மார்ச் 2018 (UTC)
வெள்ளை அரிவாள் மூக்கன்
[தொகு]வெள்ளை அரிவாள் மூக்கன் கட்டுரை ஆங்கிலப் பெயர் black headed ibis? கருந்தலை அரிவாள் மூக்கன் என்றுதானே வரும். கருந்தலை அரிவாள் மூக்கன் ஆங்கிலப் பெயர் Red-naped ibis? எனவே தமிழ் பெயர் சரிதானா? சரிபார்க்கவும்
நன்றி [பயனர்:Kurinjinet|Kurinjinet]] (பேச்சு)
Judgement tool page - விளக்கம் தேவை
[தொகு]judgement tool page என்றால் என்ன? விக்கிப்பீடியாவில் இந்தப்பக்கத்திற்கு எவ்வாறு செல்லலாம்?[[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 15:55, 2 ஏப்ரல் 2018 (UTC)
தமிழ்99 விசைப்பலகை உதவி
[தொகு]நான் சிறிதுகாலத்திற்குப் பிறகு இங்கு வந்துள்ளேன். தமிழ்99 விசைப்பலகையை பயன்படுத்தும் போது ":" என்ற எழுத்துரு எங்குள்ளது ? முன்பு shift+l விசைசேர்க்கையில் இருந்தது. நன்றி ! --மணியன் (பேச்சு) 07:45, 11 ஏப்ரல் 2018 (UTC)
- @Rsmn: இங்கு பாருங்கள். Shift+i க்கு மாற்றி விட்டார்கள் போலும். தமிழ்99 என்ற விசைப்பலகை தெரிவு வரும் இடத்தின் அருகே உள்ள கேள்விக்குறியை அழுத்தினால் இந்த உதவிப் பக்கம் வருகிறது. ஏன் இப்படிச் செய்தார்கள் என்று கண்டறிய வேண்டும். தரப்படுத்தப்பட்ட விசைப்பலகைகளை இப்படி மாற்றுவது சரியில்லை. --இரவி (பேச்சு) 13:37, 25 ஏப்ரல் 2018 (UTC)
குலக்கல்வி திட்டம்
[தொகு]குலக்கல்வி திட்டம் கட்டுரையை திருத்தப்பட்ட தொடக்க கல்வி திட்டம் 1953 என்று அதிகாரபூர்வமான பெயரில் தலைப்பிடுவதே நேர்மையான செயல். ஆங்கில விக்கிப்பீடியாவில் அப்படிதான் இருக்கிறது. என்னால் தலைப்பை மாற்ற முடியவில்லை. −முன்நிற்கும் கருத்து Jag2018 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- பொதுவாக, அதிகாரப் பெயரைவிட பரவலாக அறியப்பட்ட பெயரிலேயே தலைப்பு அமையும். தமிழ் வழக்கில் குலக்கல்வித் திட்டம் என்றே வழங்கப்படுவதால் அத்தலைப்பு அமையப்பட்டிருக்கலாம். உங்கள் கருத்தை குலக்கல்வித் திட்டம் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:00, 26 ஏப்ரல் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி கட்டுரை பதிவு தொடர்பாக
[தொகு]கிழக்கு சைபீரியக் கடல் எனும் கட்டுரை என்னால் உருவாக்கப்பட்டது. East Siberian Sea என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்கப்படாமல் கிழக்கு சைபீரியன் கடல் என்ற பெயரில் ஒரு கட்டுரை முன்னதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது Fountain இல் பழைய கட்டுரை அவசரத்தில் இணைக்கப்பட்டு விட்டது. சரிசெய்ய உதவவும். மகாலிங்கம் (பேச்சு) 05:47, 5 மே 2018 (UTC)
வார்ப்புரு உதவி தேவை
[தொகு]நெடுநாள் கழித்து தொகுக்கத்தொடங்கியிருக்கிறேன். கார்ட்டிசால் கட்டுரையில் {{Chembox}} வார்ப்புருவை இணைத்தால் சரியாக வரவில்லை. வார்ப்புருவை ஆங்கில விக்கியிலிருந்துபெற்று இற்றைப்படுத்தினாலும் சீராகவில்லை. துணை வார்ப்புருக்களனைத்தையும் ஒருசேர தருவிக்கும் வசதியெதுவுமுள்ளதா? -- சுந்தர் \பேச்சு 13:39, 8 மே 2018 (UTC)
சுந்தர், தகவற்பெட்டியை விட்டுவிட்டு உங்கள் மொழிபெயர்ப்பைத் தொடருங்கள். தொழில்நுட்பம் தெரிந்த மூத்த பயனர்கள் இதை சரிசெய்யக்கூடும். மருந்து வகை வேதிப்பொருட்களுக்கு சமானமான தகவற்பெட்டிகள் இன்னும் உருவாக்கப்படாமல் இருக்கலாம். வேங்கைத் திட்டம் போட்டியில் தகவற்பெட்டிகள் கணக்கில் சேர்க்கப்படுவதும் இல்லை.மகாலிங்கம் (பேச்சு) 00:45, 10 மே 2018 (UTC)
எனக்குமொரு உதவி!!
[தொகு]நான் தொகுக்கும் கட்டுரைகளில் கொடுக்கப்படும் ஆங்கில மேற்சான்றுகளில் இணையபக்கங்களின் சேகரிக்கப்பட்ட பக்கங்களுக்கு செல்ல {{webarchive}} என்ற வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் லுவா நிரலில் Web Machine என்ற இணையதளத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இதற்கான தமிழ்விக்கிப் பக்கத்தை இங்கு காணலாம்.
- வேண்டுகின்ற உதவி: இந்த லுவா நிரலியில் ஆங்கில பக்கத்திற்கு மாறாக தமிழ் விக்கிப்பக்கம் செல்ல திருத்தம் வேண்டும். --மணியன் (பேச்சு) 09:35, 28 மே 2018 (UTC)
எழுத் உதவி
[தொகு]குறைந்த நேரத்தில் அதிகமான எண்ணிக்கைகளில் கட்டுரைகள் எழுத ஏதேனும் வழி இருந்தால் பகிருங்கள். நானும் தெரிந்துகொண்டு பலருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டியுள்ளது. உதவ முன் வருபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி.
உதவி
[தொகு]ICC Test Player of the Year ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் எனும் கட்டுரையில் உள்ள List of Winners அட்டவணையை நகல் எடுத்து ஒட்டுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. எப்படி சரிசெய்வது எனக் கூற இயலுமா? source edit செய்தும் வரவில்லை. நன்றிDsesringp (பேச்சு) 12:16, 2 சூன் 2018 (UTC)
தமிழ் 99 விசைப் பலகையில் சிக்கல்
[தொகு]தமிழ் 99 விசைப் பலகையில் ஏதோ சிக்கல் அவ்வப்போது தோன்றுகிறது. தட்டச்சில் உரிய எழுத்துகள் வராமல் வேறு எழுத்துகள் வருகின்றன. பின்னர் சரியான எழுத்துகளும் வருகின்றன. இந்த சிக்கல் எனக்குமட்டுமா அல்லது தமிழ் 99 பயன்படுத்தும் அனைவருக்குமா என தெரியவில்லை. தமிழ் 99 விசைப்பலகையை பயன்படுத்துபவர்கள் யாராகினும் இருந்தால் பார்த்துச் சொல்லுங்கள்--அருளரசன் (பேச்சு) 15:32, 13 சூன் 2018 (UTC)
- @Arulghsr: எங்குள்ள தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறீர்கள்? சிக்கல் நீடிக்கிறதா? --இரவி (பேச்சு) 01:41, 8 சூலை 2018 (UTC)
உதவி
[தொகு]ஆர். தியாகராஜன் என்ற பெயரில் கட்டுரையைத் துவக்கினால் தடை செய்யப்பட்ட பக்கம் என்று காட்டப்படுகிறது. உரியவர்கள் கவனித்து தடையை நீக்கினால் கட்டுரையைத் துவக்க ஏதுவாக இருக்கும்.--அருளரசன் (பேச்சு) 01:31, 8 சூலை 2018 (UTC)
- @AntanO:, உதவவும்.--நந்தகுமார் (பேச்சு) 01:39, 8 சூலை 2018 (UTC)
- @Arulghsr: கட்டுரையைத் தொடங்கியுள்ளேன். விரிவாக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 01:39, 8 சூலை 2018 (UTC)
நன்றி--அருளரசன் (பேச்சு) 01:51, 8 சூலை 2018 (UTC)
திருமால் > விஷ்ணு
[தொகு]Due to limited access, I am unable to write in English. Could you check the names of திருமால், விஷ்ணு, மாயோன்? En.wiki has separate articles for en:Thirumal and en:Vishnu. Are these names pointing a person or multiple persons? Also, check links of Wikidata that connect திருமால் to Thirumal and விஷ்ணு (redirect) to Vishnu which is not redirect. --AntanO (பேச்சு) 20:39, 9 சூலை 2018 (UTC)
கட்டுரை நீக்கப்பட்டது ஏன்?
[தொகு]நான் பதிவேற்றிய முனைவர் க.முத்துஇலக்குமி பற்றிய கட்டுரையும் முனைவர் த.கவிதா பற்றிய கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றை மீளப்பெறுவது எப்படி? இதனை நீக்கிய Kanags (பேச்சு) என்பவர் இதனை நீக்குவதற்கு குறித்துள்ள காரணம் ஏற்புடைத்தில்லை. அவருடைய செயல் அநாகரிகமானது என உணர்கிறேன். அவர் மேல் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்?
கட்டுரைகள் நீக்கம் தொடர்பாக
[தொகு]தனித்துவமான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் சில பற்றி என்னால் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. உசாத்துணையாக youtube இணைப்புகளையோ, அல்லது இணையத்தள சுட்டிகளையோ இணைக்கும்போது அவை விளம்பர நோக்கம் கொண்டவையாக ஆகிவிடும் என எண்ணியதால் அவற்றை இணைக்கவில்லை. ஆனால் விக்கிபிடியா கலைக்களஞ்சியத்துக்கு உகந்ததாக இல்லை என்று கூறி அக்கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை ஏலவே விக்கிபீடியா கொண்டுள்ளது. எனவே கட்டுரைகள் நீக்கப்படுகையில் பின்பற்றப்படும் முறைமைகளை அறிய விழைகிறேன். நன்றி
நிரலாளர் உதவி தேவை
[தொகு]Module:Convert என்ற மாட்யூல் ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு இறக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் வெளிப்பாடு ஆங்கில அளவைகளிலேயே தருகிறது. நிரல் வல்லுநர்கள் உரிய இடத்தில் தக்க மொழிமாற்றத்தை தொகுத்தால் பல பக்கங்களில் ஆங்கில kilometers, miles போன்றவை நீங்கும். இந்த மாட்யூலின் பயன்பாடு தமிழ் விக்கியில் பரவலாக உள்ளதால் இத்தொகுப்பு அவசியமாகிறது. காட்டாக, காராக் கடல் கட்டுரை காண்க..--மணியன் (பேச்சு) 05:46, 2 ஆகத்து 2018 (UTC)
வார்ப்புருக்கள் சம்பந்தமாக
[தொகு]கட்டுரைகை வடிவமைக்க சில வார்ப்புருகள் தேவைப்படுகிறது எனவே அதை எப்படி பயன்படுத்துவது?
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
[தொகு]2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கட்டுரைக்கு Logo சேர்க்க உதவி செய்யுங்கள். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள
{{{Name}}} |
---|
வார்புருவில் அந்த Logo கட்டுரையில் தெரியவில்லை அதனால் comment செய்துள்ளேன். தற்போது போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. வரும் 2 செப்டம்பரில் முடிவடைகிறது. அதறகுள் Logo பிரிச்சனையை சரிசெய்ய உதவுங்கள். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 07:08, 28 ஆகத்து 2018 (UTC)
- Logo கட்டுரையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 11:24, 28 ஆகத்து 2018 (UTC)
- 18வது ஆசிய விளையாட்டு Logo கட்டுரையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. CommonsDelinker என்பவரால் நீக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இந்த கட்டுரையில் Logo வை சேர்க்க யாரேனும் உதவி செய்யுங்கள். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 04:36, 29 ஆகத்து 2018 (UTC)
- Logo கட்டுரையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 11:24, 28 ஆகத்து 2018 (UTC)
தகவற்சட்டம் நபர் டெம்ப்ளேட்
[தொகு]sir by mistake i have created template page and changed something in தகவற்சட்டம் நபர் டெம்ப்ளேட். Something is going wrong... I think so... I am new to wikipedia page creation. That's why I made this mistake... Extremely sorry. Tell me what to do my page is https://ta.wikipedia.org/wiki/பயனர்:Compcare_K._Bhuvaneswari
பனிக்கால போர் உதவி
[தொகு]கட்டுரையிலுள்ள எழுத்துப்பிழை, மற்ற பிழைகளை மற்றவர்கள் சரிபார்க்கவும்.
பெயர் உதவி
[தொகு]Snake River, Bear river என்று உள்ளதை பாம்பு ஆறு, கரடியாறு என்பதா இசுனேக் ஆறு பியர் ஆறு என்பதா? --குறும்பன் (பேச்சு) 19:52, 6 நவம்பர் 2018 (UTC)
- Snake River - சினேக் ஆறு. Bear River இன் ஆங்கில இணைப்பைத் தாருங்கள்.--Kanags (பேச்சு) 05:52, 7 நவம்பர் 2018 (UTC)
ஆசிய மாதம் 2018 போட்டி தொடர்பாக
[தொகு]போட்டி தொடர்பான தலைப்புகள் தேடவோ, உருவாக்கிய அல்லது விரிவாக்கம் செய்த கட்டுரைகளை சமர்ப்பிக்கவோ, எளிதில் தொடர்புடைய போட்டிப் பக்கத்திற்கு செல்லும் வகையில் தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தில் இருந்து செல்ல ஏதுவாக, வழக்கம் போல் ஏதாவது செய்யலாமே?மகாலிங்கம் (பேச்சு) 13:49, 11 நவம்பர் 2018 (UTC)
நிறுவனப் பயன் என்ற கட்டுரையை நீக்குக.
[தொகு]நிறுவனப் பயன் என்ற கட்டுரையை நீக்க வேண்டுகின்றேன். இந்தக் கட்டுரை என்னால் தவறுதலாக உருவாக்கப் பட்டுவிட்டது. இதில் உள்ள அனைத்தும் நிறுவனப் பண்பாடு என்னும் கட்டுரையில் உள்ளது. நன்றி.
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 01:45, 15 நவம்பர் 2018 (UTC)
TWL Con (2019 India)
[தொகு]Please help translate to your language
Dear all,
I am happy to announce that the applications for TWL Con (2019 India), a mini-conference around The Wikipedia Library (TWL) and library outreach for Wikimedia projects in India are now open. The application form is available here. Last date is 25 November 2018. The event is to be held in January 2019. The eligibility guidelines are applicable as mentioned here. -- Shypoetess (பேச்சு) 18:52, 19 நவம்பர் 2018 (UTC)
Reminder TWL Con (2019 India)
[தொகு]Please help translate to your language
Dear all,
It is to remind you that the applications for TWL Con (2019 India), a mini-conference around The Wikipedia Library (TWL) and library outreach for Wikimedia projects in India are open only till tomorrow i.e. 25 November 2018. The application form is available here. The event is to be held in January 2019. The eligibility guidelines are applicable as mentioned here. Kindly fill out the form as soon as possible -- Shypoetess (பேச்சு) 18:24, 24 நவம்பர் 2018 (UTC)
மிசோரி ஆறு பிழைதிருத்த உதவி
[தொகு]கட்டுரை முழுமை பெற்றுவிட்டது, கட்டுரை பெரிது அதனால் பிழைதிருத்த உதவி தேவை--குறும்பன் (பேச்சு) 17:22, 25 நவம்பர் 2018 (UTC)
உதவி
[தொகு]மஞ்சப்பாறை ஆற்றை பற்றி எழுதலாம் என்றபோது
- Basin - Yellowstone Basin Watershed contains
- Watershed - Watershed is a river basin spanning 37,167 square miles
- delta
- Drain – drains 10,000 sq miles drain a wide area, draining Yellowstone Lake
படுகை , வடிகால், வடிநிலம் மற்றும் சில ஆறு தொடர்பான சொற்களின் பொருள்ள் குறித்து ஐயம் வந்துவிட்டது. தெளிவு படுத்துவிர்களாக.
திரும்ப
[தொகு]பயனர்:Nan நீக்கப்பட்ட பக்கங்கள் டற்ணோபில் மற்றும் டற்ணோபில் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், காரணம் விளக்கவில்லை. தயவு செய்து இந்த பக்கங்களை திரும்பவும். --П'явка медична (பேச்சு) 15:22, 27 நவம்பர் 2018 (UTC)
- @П'явка медична: நீங்கள், ஒரு வரியை (தமிழில் பிழையாக) எழுதிவிட்டு, படங்களை மட்டும் பதிவிட்டதால் நீக்கிவிட்டேன். விக்கிப்பீடியா வலைப்பதிவு அல்ல. சோதனை முயற்சிகளுக்கு மணல்தொட்டியைப் பயன்படுத்தவும்.நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 15:59, 27 நவம்பர் 2018 (UTC)
- @Nan:
- தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம்! - டற்ணோபில் உள்ளது விக்கியிடை இணைப்புகள். இது உக்ரைனில் ஒரு நகரம். பிற நகரங்களைப் பார்க்கவும்.
- மூன்று வரிகள் இருந்தால் போதும்! - நான் வேலை செய்ய ஆரம்பித்தேன்.
- மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர்! - இந்த உதவி? பக்கத்தை நீக்கவா?
- உங்கள் நடவடிக்கைகள் விக்கிபீடியா விதிகளின் மீறல்கள். விக்கிப்பீடியாவில் இறுக்கமான விதிமுறைகள் இல்லை: மேற்கண்ட நான்கு பொது கொள்கைகளைத் தவிர, வேறு கட்டுப்பாடுகள் இங்கு இல்லை. துணிவுடன் கட்டுரைகளை இற்றைப்படுத்தவும்; தவறுகள்/பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் முந்தைய பதிப்புகள் இயல்பாகச் சேமிக்கப்படுவதால் மீட்கமுடியாத பாதிப்பு ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை.
- பக்கங்களை திரும்பவும் திரும்பவும். --П'явка медична (பேச்சு) 08:55, 28 நவம்பர் 2018 (UTC)
- @Kanags:, :@AntanO: இப்பயனர், தமிழில் பிழையாக ஒருவரி கட்டுரை எழுதிவிட்டு, படங்களை மட்டும் பதிவிட்டதால் இரு கட்டுரைகளை நீக்கிவிட்டேன். தற்பொழுது மீளமைக்கக் கோரிக்கை வைத்துள்ளார். உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 09:27, 28 நவம்பர் 2018 (UTC)
- @П'явка медична: என் நடவடிக்கைகள் விக்கிபீடியா விதிகளின் மீறல்கள் என்பதை ஏற்க இயலாது.--நந்தகுமார் (பேச்சு) 09:31, 28 நவம்பர் 2018 (UTC)
- @Nan: என் திருத்தங்கள் மீறலாகாது. தவறுகள்/பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் - மற்ற பயனர்கள் பிழைகளை சரிசெய்ய முடியும். --П'явка медична (பேச்சு) 09:48, 28 நவம்பர் 2018 (UTC)
- இரண்டாவது கட்டுரை கூகுள் தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தானியங்கி மொழிபெயர்ப்புகள் நீக்கப்படுவதில் தவறில்லை. முதலாவது கட்டுரையும் தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், தானியங்கி இரண்டு வரிகளையும் சரியாகவே மொழிபெயர்த்துள்ளது. ஆனாலும், கட்டுரையில் போதிய அளவு தகவல்கள் இல்லை.--Kanags (பேச்சு) 10:08, 28 நவம்பர் 2018 (UTC)
- கட்டுரைகள் கூகுள் இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு மாணவர் உதவினார். --П'явка медична (பேச்சு) 10:33, 28 நவம்பர் 2018 (UTC)
- From பயனர் பேச்சு:Nan: "I started working. Return the pages. These pages are interwiki. Wikipedia has policies and guidelines, but they are not carved in stone; And do not agonize over making mistakes: every past version of a page is saved, so mistakes can be easily corrected. You could correct the error. But you deleted pages. Simple but wrong way. Fix the bugs here: in the table மாகாணங்கள் is incorrect name. Example: வாலின்." --П'явка медична (பேச்சு) 10:36, 28 நவம்பர் 2018 (UTC)
- @Kanags: இங்கே கட்டுரைகளில் சிறிய தகவல் உள்ளது. --П'явка медична (பேச்சு) 13:45, 28 நவம்பர் 2018 (UTC)
- இரண்டாவது கட்டுரை கூகுள் தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தானியங்கி மொழிபெயர்ப்புகள் நீக்கப்படுவதில் தவறில்லை. முதலாவது கட்டுரையும் தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், தானியங்கி இரண்டு வரிகளையும் சரியாகவே மொழிபெயர்த்துள்ளது. ஆனாலும், கட்டுரையில் போதிய அளவு தகவல்கள் இல்லை.--Kanags (பேச்சு) 10:08, 28 நவம்பர் 2018 (UTC)
Please undeletion டற்ணோபில். This city in Ukraine, see interwiki. Incorrect name? Please write correctly. Please undeletion டற்ணோபில் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் into the main space, or to my personal profile. This is one of the best medical universities from Ukraine, see interwiki. Incorrect name? Please write correctly name this University from enwiki. Many students from India study at the university, who speak the Tamil language. They are help to translate. Articles are answered notability. --П'явка медична (பேச்சு) 10:57, 28 நவம்பர் 2018 (UTC)
- The deletion was right. Therefore, no need to argue. --AntanO (பேச்சு) 16:47, 28 நவம்பர் 2018 (UTC)
- @П'явка медична: see தெர்னோப்பில்.--Kanags (பேச்சு) 07:34, 29 நவம்பர் 2018 (UTC)
- @Kanags: நன்றி. --П'явка медична (பேச்சு) 09:41, 29 நவம்பர் 2018 (UTC)
- @П'явка медична: see தெர்னோப்பில்.--Kanags (பேச்சு) 07:34, 29 நவம்பர் 2018 (UTC)
மதுரையின் நிலவியல் என்னும் கட்டுரை,விக்கிப்பீடியா ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்து பதியப்பட்டது,ஆனால் இதனை எவ்வாறு லின்க் செய்வது