விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 4
தமிழ் வழிக் கணினிக் கல்வி
[தொகு]தமிழ் மொழியில் கணினி தொடர்பாக கற்க முடியுமா? வன்பொருள் மென்பொருள் தொடர்பில் இணைய தளத்தில் எவ்வாறு கற்பது? --59.99.137.136 12:32, 16 மே 2010 (UTC)
தமிழ் மொழி மூலம் கணினி தொடர்பாக ஓரளவு கற்க முடியும். விக்கிப்பீடியாவில் உள்ள பகுப்பு:கணினியியல் கட்டுரைகளைப் பாக்கவும். வலைப்பதிவுகளில் பல கணினி நிபுணர்கள் தமிழில் எழுதுகிறார்கள். உபுண்டு குழுமம் போன்ற தமிழ் கணினி அணிகளிடமும் மேலும் கட்டுரைகள் உள்ளன. கணினித் துறை பெரியது, அதில் எதில் உங்களது அக்கறை என்று கூறினால் மேலும் சில பரிந்துரைக்க முடியும். --Natkeeran 22:37, 1 ஜூலை 2010 (UTC)
divination என்று வருவதை எவ்வாறு நீக்குவது?
[தொகு]divination என்றால் என்ன? அதை நீக்குவது எப்படி?
கீழே பகுப்பு என்பதில் வரும் சிவப்பு சொற்களை நீலமாக்குவது அல்லது நீக்குவது எப்படி?
Tamil35 06:02, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
Multiple sclerosis
[தொகு]நண்பர்களே, வணக்கம். நான் Multiple sclerosis என்ற கட்டுரையை திருத்தி வருகிறேன். மல்ட்டிபிள் ஸ்கீளீரோசிஸ் என்பதற்கு தமிழாக்கம் மூளை, தண்டுவட மரப்பு நோய் என ஒரு அகராதியில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மூளை முதுகுத்தண்டை மூடியுள்ள மையிலீன் உறை பாதிப்பினால் ஏற்படும் நோயாகும். இதனைத் தமிழில் எவ்வாறு அளிப்பது என்பதில் குழப்பமாக உள்ளது. மூளை தண்டுவட மரப்பு நோய் என்பது சரியானதாக இதற்கு தோன்றவில்லை. இதற்கு சரியான தமிழ் வார்த்தை அளிக்க உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி −முன்நிற்கும் கருத்து Kashya06 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- புருனோ அல்லது செல்வா உதவக்கூடும். செய்தி அனுப்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:32, 21 ஜூன் 2010 (UTC)
N.MUNIYANDI.OLDBAZARSTREET.KALLAL.SIVAGANG.
விடை வேண்டும்
[தொகு]நண்பர்களே, வணக்கம். கீழ்க்காணும் கேள்விகளுக்கு விரைவில் விடை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். -- −முன்நிற்கும் கருத்து Ramya (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- nunchaku, cattle prods என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?
- clubs என்பதற்கு தடி, குறுந்தடி அல்லது குண்டாந்தடி எது சரியான வார்த்தை?
- crowbars என்பதற்கு கடப்பாரை என்பது சரியா?
- club என்பதற்கு குண்டாந்தடி என தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் தந்துள்ளார்கள். ஆனால் தமிழ் பேரகரமுதலியில் கணை, வளைதடி போன்ற பல இணைச் சொற்கள் தரப்பட்டுள்ளன. இடத்துக்கேற்ப தடி, வளைதடி, கைத்தடி, போன்றவற்றை ஆளலாம். crowbar- என்பது இன்றைய வழக்கில் கடப்பாரை என்றே குறிக்கப்படுகிறது. அதே வேளையில் கன்னம் போன்ற பிற சொற்களும் வழக்கில் உள்ளன. cattle prod என்பதை முடுக்கி, மாட்டு வண்டி முடுக்கி, சாட்டை போன்ற சொற்களால் குறிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 07:18, 29 மே 2010 (UTC)
தமிழாக்க உதவி
[தொகு]what is tamil word for "Knowledge Representation"? representation-பிரதிநிதித்துவம் சரியா? வெளிப்பாடு சரியா?
நண்பரே மொழிப் பிரதிநிதித்துவப்படுத்தல் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
அன்புள்ள அய்யா, மிக்க நன்றி...மீண்டும் கலைச்சொல்லாக்கத்தில் அறிஞர்கள் உதவி தேவைப்படுகின்றது
Grid Computing,Simulation என்பதற்கு எப்படி பொருத்தமாக தமிழில் சொல்லாக்களாம்.
தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் படிப்பதற்கு இணையத்தளம் இருந்தால் விவரங்கள் தரவும்.... நன்றி.. இரா.சுதர்சன்..--சுதர்சன் 09:22, 26 ஏப்ரல் 2010 (UTC)
- சுதர்சன், நீங்கள்தமிழ் விக்சனரியை பயன்படுத்தலாம். அங்கு ஒரு இலக்கத்திற்கும் மேலான சொற்கள் தரப்பட்டுள்ளன.தவிர, அதன் சமுதாய வலைவாசல் பக்கத்தில் இணைய அகரமுதலிகளின் பட்டியல் உள்ளது.
- Grid Computing -- பின்னல் கணிமை
- Simulation -- உருவகப்படுத்துதல்
--மணியன் 09:35, 26 ஏப்ரல் 2010 (UTC)
தமிழாக்க உதவி
[தொகு]அன்பு நண்பரே, வணக்கம். கீழ்க்காணும் கேள்விகளுக்கு விரைவில் விடை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். machine learning என்பதற்கு இயந்திர சுய அறிவூட்டம் என்பது சரியா? இல்லையென்றல் அதற்கான கலைச்சொல் என்ன?--−முன்நிற்கும் கருத்து சுதர்சன் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அறிவூட்டம் (பிறர் ஊட்டும் அறிவு)என்பதே சுயம் என்பதோடு முரணாக உள்ளது. learning என்பது கற்றல் என்று பொருள்படும். இயந்திர சுயகற்றல் என்பது நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கும். அல்லது தானாகவே செயலாக்கப்படும் சில வினைகள்,தற்கொலை,தன்னிச்சை,தற்காத்தல் போன்று , இன்னும் விள்ளக்கமாக பொறியின் தற்கற்றல் என்றும் பெயரிடலாம் என்பது எனது கருத்து.--மணியன் 04:42, 26 ஏப்ரல் 2010 (UTC)
- மணியன் சொன்னது சரிதான். எனினும் பொறி தானாகக் கற்றல் அல்லது கணி தானாய்க்கற்றல் அல்லது கணியின் தற்கற்றல் எனலாம். --செல்வா 05:51, 26 ஏப்ரல் 2010 (UTC)
machine learning என்பது எந்திரத்தின் உதவியோடு கற்றல் அல்லது பொறியூடக கற்றல் என்று கொள்ளலாம். ஆயினும் இன்னொரு அர்த்தத்தில் எந்திர தனமாக கற்றல் என்றும் பொருள் படுத்தலாம்.
- Data mining என்பதற்கு தகவல் சுரங்கி என்பது சரியா?
- எனது தலைப்பிற்குத் தமிழில் பெயரிட்டு அடைப்புக் குறியில் ஆங்கிலத்தில் பெயரிடலாமா?
- இரண்டு A4 தாள்கள் என்றால் மொத்தமாக 4 பக்கங்களா அல்ல 2 பக்கங்களா, அதாவது A4 தாளின் இரு பக்கங்களும் எழுதலாமா?
- தரவுத்தளம் என்பது சரியா அல்ல தரவுதளம் என்பது சரியா?
நன்றி. -- −முன்நிற்கும் கருத்து 61.2.238.40 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
- Data mining என்பதற்கு தகவல் சுரங்கி சரியான மொழிபெயர்ப்பு அல்ல. தரவுகளில் பொதிந்துள்ள அறிவை வெளிக்கொணர்தல் என்று பொருள்படுமாறு அமைக்க வேண்டும். விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தை அணுகவும். பயனர்கள் இங்கும் உதவக்கூடும்.
- தமிழில் மட்டுமே தலைப்பைத் தந்தால் போதுமானது. கட்டுரைக்குள்ளிருந்து ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைப்பு தரலாம்.
- இரண்டு பக்கங்களே போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் இதை ஒரு வழிகாட்டலாகக் கொண்டு கட்டுரைக்கான தேவையைப் பொருத்து சற்று நீட்டிக் கொள்ளலாம்.
- தரவுத்தளம் சரியென நான் கருதுகிறேன். மற்றவர்கள் கருத்தையும் பொருத்து முடிவு செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 04:59, 12 ஏப்ரல் 2010 (UTC)
தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்
[தொகு]which one of language is best for writting my title ? wether it ll be tamil or english or both language ? if i can chosse for my title about medicine what are the basic for writing my title ? −முன்நிற்கும் கருத்து 122.165.255.178 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- கட்டுரைத் தலைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவம் தொடர்பாகக் கட்டுரைகளைக் கட்டாயம் வரவேற்கிறோம். சில தலைப்புகளை வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள்_பட்டியல்#மருத்துவம் என்ற பக்கத்தில் காணலாம். இவை தவிர தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத எந்த ஒரு கலைக்களஞ்சியத் தலைப்பிலும் கட்டுரை எழுதலாம். இங்கு ஏற்கனவே எழுதப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பிலான கட்டுரைகளைக் காண இங்கே பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 09:53, 8 ஏப்ரல் 2010 (UTC)
how to create thalai vasal pages?
- வலைவாசல் குறிப்பிட்ட பகுப்புகளுக்கு அல்லது பொருளடக்கத்திற்குரிய முதற்பக்கமாக அமைக்கப்படுகிறது. இவை வார்ப்புருக்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. தமிழ் விககிப்பீடியாவில் உள்ள வலைவாசல்களை "உலாவி" பாருங்கள். வார்ப்புருக்களைப் பற்றி படித்தறியுங்கள். சற்றே துய்ப்பறிவு கொண்டவர்களே இதனை வடிவமைக்க முடியும். --மணியன் 10:24, 9 ஏப்ரல் 2010 (UTC)
data mining may means - thakaval akazhthal
கட்டுரைப் பக்கங்களை இணைத்தல்
[தொகு]எனது கட்டுரை 'அமரர் ஜீவா' என்பதை ஜீவானந்தம் என்கின்ற கட்டுரையோடு இணைக்க செய்தி வந்துள்ளது...இதை நான் எப்படி சாத்தியப்படுத்துவது?−முன்நிற்கும் கருத்து Ragavanpandian (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அமரர் ஜீவா,தமிழ்நாட்டு அரசியல் வாதிகலில் மதிபிர்குரியவர்.இவர் ஒரு இடது சாரி சின்தனையாலர்.இ.செங்குட்டுவன் .வத்தலகுன்டு
விக்கிப்பீடியாவில் படங்களை எப்படி சேர்ப்பது.
[தொகு]அதாவது திருப்பதி குறித்த செய்திகளை அளித்தேன். ஆனால் திருப்பதி படங்களை இணைக்க முடியவில்லை. மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள டுல்ஸ்&ல் படங்கள் எனும் ஐ கானில் படங்களை சேமிக்க முடியவில்லையே.
- நல்வரவு. முன்னர் இக் கோள்வி பல முறை கேட்கப்பட்டுள்ளது. இங்கு பதில்களைக் காணலாம்: விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி. மேலும் சந்தேகங்கள் இருந்தால், இங்கு கூறவும். நன்றி. --Natkeeran 03:12, 23 மார்ச் 2010 (UTC)
- எ.கா: [[File:Tirumala temple.JPG|thumb|center|350px|படம் பற்றிய குறிப்பு]]
இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?
[தொகு]இணைய தளமா?இணையத் தளமா? எது சரி?
- எனக்கும் இந்தக் குழப்பம் உள்ளது. இணையத்தில் இணையத்தளம் என்று பெரும்பாலும் எழுதுகிறோம். அச்சு ஊடகங்கள் இணைய தளம் என்று எழுதுகின்றன. இது குறித்த இலக்கண விதியை யாராவது தெளிவுபடுத்தினால் நலம்--ரவி 14:38, 14 ஏப்ரல் 2010 (UTC)
இணையத்தளம் என்பதேசரி;தமிழ் இலக்கணப்படி சரியான ஒன்று. இணையம்+தளம்= இணையத்தளம். மரம்+கிளை=மரக்கிளை என்பதுபோல. இணையத்தின் தளம் அல்லது இணையத்தது தளம் என வேற்றுமைப்புணர்ச்சியாகக் கொண்டால்: "மகர இறுதி வேற்றுமை யாயின்/ துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே" என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின்படி (எழுத்ததிகாரம்,310) அது `இணையத்தளம்` என்றுதான் ஒற்றுமிகுந்து புணரும். மரக்கோடு, மரச்செதிள், மரத்தோல், மரப்பூ என்பதுபோல. இங்கு மகரம் கெட்டு வல்லெழுத்துமிகுந்தது என்பதாம். இனி இணையத்தளம் என்பதனை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டாலும் ஒற்றுமிகுவதுதான் சரி. தாமரைப்பூ என்பதுபோல். இணையம் என்பது சிறப்புப்பெயர்; தளம் என்பது பொதுப்பெயர் . பலதளங்கள் உண்டு அவற்றுள் இது இணையத்தளம் என்பதாம். எனவே அல்வழியில் பார்த்தாலும் ஒற்றுமிகுவதே சரி. பொதுவாக "இயல்பினும் விதியினும் நின்றஉயிர்முன் கசதப மிகும்" (நன்னூல், 165)என்றசூத்திரத்தின்படி, இணையம் என்பது மகரம் கெட்டு 'இணைய' என்று உயிர் ஈறாக நின்றது; அதன்பின்னர் வந்த 'தளம்' என்ற சொல்லுக்கேற்பத் தகரஒற்று மிகுந்தது. எனவே இணையத்தளம் என்று எழுதுவதே சரியான ஒன்று. அச்சு ஊடகங்கள் எப்பொழுதும் எழுத்துக்குறைப்பிலேயே கவனம் செலுத்துவன அவர்களுக்கு இலக்கணம் பற்றி என்ன கவலை?. என்னசெய்வது? இதில் மிச்சம்பிடித்துத்தான் பெரும் கோட்டை கட்டப்போகின்றார்கள்? உண்மையில் கோட்டைகட்டுகின்றார்களா? கோட்டைவிடுகின்றார்களா?--Meykandan 09:22, 28 ஏப்ரல் 2010 (UTC)
- அருமையான விளக்கம். நன்றி--ரவி 10:47, 28 ஏப்ரல் 2010 (UTC)
எப்படி எழுதுவது?
[தொகு]can we add pictures to the essay or simply the text is enough? please guide me is it we have to include references within the space(A4 sheet) given for the essay?kindly guide me
.--−முன்நிற்கும் கருத்து 87.238.84.64 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- Please Do NOT write in A4 sheet and send. Type the essay using Unicode Tamil font (Tamil typing guidelines here) and upload it in .doc or .odt format (You can use MS latha font) at http://tamilint2010.tn.gov.in --[[பயனர்:saravana] 14:38, 14 ஏப்ரல் 2010 (UTC)
How to upload the writed documents? please help me. and how to add up-loaders details?§ lovelysarathi §
- கட்டுரையை இங்கு விக்கிக் கட்டுரையாக இட முடியும். நீங்கள் கட்டுரைப் போட்டிக்காகத் தரவேற்ற (upload) விரும்பினால், இந்த முகவரியில் செய்யலாம்: http://tamilint2010.tn.gov.in. தமிழ் விக்கியில் நீங்கள் படங்களைத் தரவேற்ற முடியும். அதற்கு இடப் பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியில் கோப்பைப் பதிவேற்று என்று உள்ளது. அதைச் சொடுக்கித் தரவேற்றலாம். மேலும் தெளிவு வேண்டும் என்றால் கூறவும். --Natkeeran 15:24, 17 ஏப்ரல் 2010 (UTC)
"வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துகிறோம்."வாழ்க வளமுடன்" என்பது சரியா? அல்லது "வாழ்க வளத்துடன்" என்பது சரியா?(Muttuvancheri natarajan)--MUTTUVANCHERI NATARAJAN 16:43, 5 மே 2010 (UTC)
தலைப்புக்கள்
[தொகு]- already available spectrometer in wikipedia
Spectrometer க்கான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா என்று கேட்டிருக்கிறீர்களானால்......
இது தொடர்பான பல கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பதை நீங்கள் காணலாம். நிறமாலை ஒளிமானி (Spectrophotometery), நிறமாலையியல் (Spectroscopy) என்ற கட்டுரைகளும், நிறமாலை பகுப்பாய்வி (Spectrum analyzer) என்ற நிறைவு செய்யப்படாத ஒரு கட்டுரையும் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில் Spectrometer, Photometer க்கு தனியாக கட்டுரைகள் உள்ளன. அதன் தமிழாக்கத்திற்கான இணைப்பை அங்கே காணவில்லை. வெவ்வேறு பெயர்களிட்டு தமிழ் விக்கியில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே Spectrometer க்கு தனியான கட்டுரை தமிழில் இல்லை என்றே நினைக்கிறேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பார்த்தீர்களானால், நீங்கள் தெரிவு செய்யும் தலைப்பைப் பற்ரிய முடிவுக்கு வரலாம். --கலை 12:49, 15 ஏப்ரல் 2010 (UTC) how will i write in tamil? please tell
தமிழின் யாப்பிலக்கணச் சிறப்பை பற்றி எழுதிள்ளேன். உலகத்தமிழ் இணைய மாநாடு கட்டுரைப் போட்டியில் மாணவர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டுமா? அல்லது பொதுமக்களும் கலந்து கொள்ளலாமா? ஆம் என்றால் என்ன செய்ய வேண்டும்.--−முன்நிற்கும் கருத்து 117.199.135.36 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- வருகைக்கு நன்றி, கட்டுரைப்போட்டி இப்போது மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிகிறேன். மேலும் விபரங்களுக்கு வலைவாசலைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 20:58, 18 ஏப்ரல் 2010 (UTC)
- யாப்பிலக்கணச் சிறப்புகளைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். கட்டுரைப்போட்டியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திறந்து விடப்பட்டுள்ளது. நீங்கள் http://tamilint2010.tn.gov.in/ தளத்துக்குச் சென்று 'பதிவு' என்ற இணைப்பை அழுத்துங்கள். திரையில் வரும் படிவத்தில் 'பிரிவு' என்ற வரிசையில் 'பொதுமக்கள்' எனத் தேர்ந்தெடுக்கவும். -- சுந்தர் \பேச்சு 04:26, 20 ஏப்ரல் 2010 (UTC) (பி.கு. இத்தகவலை வலைவாசலிலும் சேர்க்க வேண்டும்.)
respected sir,
I read the information that in case of selecting the topics we should give the topics in the search engine, if any informations available it will be displayed or else no information will be displayed, but even if we give the topics in the search engine that are red marked, we get some information about it.so i feel some what difficult to select the topics, so help me how to decide whether the information about the topics which we give is already available or not
படிமங்கள் இடுதல்
[தொகு]நீங்கள் படிமங்கள் என்று குறிப்பிடுவது புகைப்படங்கள் தானே. நான் அவற்றை கூகுள் சர்ச் என்ஜினில் இருந்து எடுத்து பயன் படுத்துகிறேன். அவற்றை பயன்படுத்தக் கூடாதா? அப்படியெனில் புகைப்படங்களை எங்கு இருந்து எடுக்க வேண்டும் என்பதை கூறவும். பெரும்பாலும் கூகுள் இணையதளத்தில் இருந்து தான் நான் புகைப்படங்களை எடுத்து வருகிறேன்.
- கூகுள் அல்லது இதர இணையதளங்களில் காப்புரிமையுள்ள புகைப்படங்களை விக்கிப்பீடியாவில் பதிவேற்றக் கூடாது. சிறப்பான படிமங்களை விக்கி காமன்சில் பெறலாம். [1] --பரிதிமதி 18:00, 29 ஏப்ரல் 2010 (UTC)
how to add a essay in this site
I have submiited my article ' World Malaria Day" for World Tamil conference. It is an Azhahi format. Shall i type it again in Latha font. Kindly send details, please. N. Bhaskar. Email: nagbhas15@yahoo.com
- Please send your article in Latha font to ravidreams at gmail dot com as soon as possible. Thanks--ரவி 15:54, 17 மே 2010 (UTC)
கட்டுரை தலைப்பை மாற்றுவது எப்படி?
[தொகு]ஐயா, வணக்கம் விக்கிப்பீடியாவில் நான் இயற்றிய கட்டுரையில் உள்ள தவறுகளை திருத்திக்கொண்டு வருகிறேன். கட்டுரையின் தலைப்பில் சிறு தவறு உள்ளது. என்னால் தலைப்பில் உள்ள தவறை சரிசெய்ய முடியவில்லை. எவ்வாறு தலைப்பை சரிசெய்வது என்று கூற வேண்டும்?--−முன்நிற்கும் கருத்து புஷ்பலதா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- கட்டுரையின் மேற்பக்கத்தில் உள்ள “நகர்த்துக” என்ற பொத்தானை அழுத்தி சரியான தலைப்பை அதில் இட்டு சேமியுங்கள்.--Kanags \உரையாடுக 23:53, 21 மே 2010 (UTC)
அழைப்பு
[தொகு]மதிப்பிற்குரியீர்! அன்பு வணக்கம்!
நான் விக்கிபீடியாவுக்குக் கைப்பேசி வழியே பங்களிப்பவன்! ஆனால் இவ்வாறு பங்களிப்பதில் எனக்குப் பல சிக்கல்கள் உள்ளன.
'என் விருப்பத்தேர்வுகள்' பக்கத்தின் கீழ்ப் பகுதியிலுள்ள 'சேமி' பொத்தானை என்னால் பயன்படுத்த முடியவில்லை. அதை அழுத்தினால் அந்தப் பக்கம் மறுவரவு (refresh) ஆகிறதே தவிர நான் செய்த மாற்றங்கள் பதிவாக மாட்டேன்கிறது!
'செல்' , 'தேடுக' ஆகிய பொத்தான்கள், தொகுத்தல் பக்கத்தின் மேற்பகுதியிலுள்ள பொத்தான்கள் போன்றவற்றிலும் இதே சிக்கல்தான். இது மட்டுமின்றித், தமிழ் விக்சனரியில் ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடுதல், கோப்பைப் பதிவேற்றுதல் போன்ற வேலைகளையும் கைப்பேசி வழியே செய்ய இயலவில்லை!
ஏன் இந்தச் சிக்கல்கள்? இவற்றுக்கு என்ன தீர்வு? ஒருவேளை எனக்குத்தான் சரியான பயன்பாட்டு முறை தெரியவில்லையா? அப்படியென்றால் அன்பு கூர்ந்து யாராவது எனக்குக் கற்பிக்க முன்வருமாறு வேண்டுகிறேன்!
அப்படியில்லாமல் விக்கிபீடியாவைக் கைப்பேசி வழியாக அணுகினால் இப்படிப்பட்ட கோளாறுகள் ஏற்படத்தான் செய்யும் எனில், கைப்பேசி வழியாகவும் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு அதன் தரத்தை விரைவில் மேம்படுத்தக் கோருகிறேன்!
விக்கிபீடியாவுக்குக் கைப்பேசி வழியே பங்களிப்பவர்கள் என்னைத் தவிர வேறு யாரேனும் இருந்தால் அவர்கள் அன்பு கூர்ந்து அவர்களின் அனுபவங்களையும் யோசனைகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 13:40, 4 ஜூன் 2010 (UTC)
நிழற்படத்தைப் பதிவேற்றுவது எப்படி? ( How can I upload an image? )
[தொகு]நிழற்படத்தைப் பதிவேற்றும் முறைகள் குறித்து எனக்கு யாரேனும் தெளிவாகக் கூற முடியுமா? உதவி தேவை! உதவ நினைப்போர் உதவுங்கள்! --ச.அ. சூர்ய பிரகாஷ். 12:14, 7 ஜூன் 2010 (UTC)
- இடது பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியில் "கோப்பைப் பதிவேற்று" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 12:46, 7 ஜூன் 2010 (UTC)
படத்தினை இணைப்பது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்!, செய்வீர்களா. - ஜெகதீஸ்வரன்.
- இடது பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியில் "கோப்பைப் பதிவேற்று" என்ற இணைப்பை சொடுக்கியதும் பதிவேற்றப்பக்கத்துக்கு செல்லுவீர்கள். அங்கு உங்கள் கணினியில் இருந்து மூல கோப்பை இணைத்ததும் மூல கோப்பின் பெயரே இலக்குக் கோப்பின் பெயராக தோன்றும். இதை மாற்ற வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இப்படத்தை \ கோப்பை பற்றி ஏதாவது விளக்கம் இருந்தால் அதை "சுருக்கம்" என்ற பகுதியில் தரலாம். பின்பு அனுமதி என்ற பகுதியில் சரியான அனுமதியை தேர்வுசெய்ய வேண்டும். அப்புறம் "கோப்பை பதிவேற்று" என்ற பொத்தானை சொடுக்கியதும் அக்கோப்பை தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டுக்கு தயாராகிவிடுகிறது. --குறும்பன் 17:16, 24 ஜூன் 2010 (UTC)
பெயர் மாற்றம்
[தொகு]விக்கியில் ஆங்கிலத்திலுள்ள என் பயனர் பேரை (Surya Prakash.S.A.) தமிழில் மாற்ற விரும்புகிறேன். மாற்ற முடியுமா? எவ்வாறு என யாரேனும் கூறினால் நன்று...பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 14:47, 15 ஜூன் 2010 (UTC)
- பயனர் பேச்சு:Surya Prakash.S.A. பக்கத்தில் பதில் தரப்பட்டுள்ளது.
கையெழுத்திடுதலில் ஓர் ஐயம்!
[தொகு]அன்புடையீர்!
வணக்கம்! 'வார்ப்புருக்கள்' பகுதியில், கையெழுத்திடும்பொழுது ~ என்ற குறியை நான்கு முறை இட்டால் நாள், நேரத்துடன் கூடிய கையெழுத்திடலாம் என்றும் அதையே மூன்று முறை இட்டால் நம் பயனர் பக்கத்துக்கான இணைப்பு மட்டும் இருக்குமாறு கையெழுத்திடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போல் நம் பேச்சுப் பக்கத்துக்கான இணைப்புடன் கூடிய கையெழுத்திடுவது எப்படி என்று கனிவு கூர்ந்து யாராவது எனக்குக் கற்பிக்கக் கோருகிறேன்!--இ.பு.ஞானப்பிரகாசன் 11:34, 1 ஜூலை 2010 (UTC)
- நீங்கள் விருப்பத்தேர்வுகள் பக்கத்துக்குச் சென்று அங்கு கையொப்பம் என்றுள்ள பெட்டியில் விரும்பிய விக்கி நிரலை இடலாம். என்னுடைய ஒப்பம் [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> என்ற நிரல் வழியாக வருவது. -- சுந்தர் \பேச்சு 11:58, 1 ஜூலை 2010 (UTC)
அளவில் நீண்ட பக்கங்களைச் சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றையொன்று இணைப்பது எப்படி?
[தொகு]விக்கிமூலத்தில் திருவிவிலியப் பக்கங்களைப் பதிவேற்றிவருகிறேன். ஆனால், எச்சரிக்கை: இந்தப் பக்கம் 213 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும் என்னும் செய்தி வருகிறது.
- கேள்வி: - நான் தொகுக்கின்ற பக்கத்தை மூன்று நான்கு பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கிடையே இணைப்பு (link) உருவாக்கிட எண்ணுகிறேன். அதைச் செய்வது எப்படி? விக்கியின் பயனர் உதவி, ஒத்தாசை போன்ற பக்கங்களைப் பார்த்ததில் மேற்கூறிய இடர்ப்பாட்டுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. உதவி நாடுகிறேன். நன்றி!--பவுல்-Paul 22:21, 1 ஜூலை 2010 (UTC)
- ஒரு பரந்த விடயம் பற்றி எழுத முற்படும் போது, அந்த விடயம் பற்றி ஒரு பொது அறிமுகக் கட்டுரையை எழுதி, பின்னர் அதோடு தொடர்புடைய பல்வேறு விடயக் கட்டுரைகளுக்கு இணைப்புத் தரலாம். இதன் மூலம் எல்லா விடயங்களையும் ஒரே கட்டுரையில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனினும் 100-150 Kb என்றால் பரவாயில்லை. எ.கா தமிழர் என்ற கட்டுரையை நோக்குக. அதில் பல்வேறு முதன்மைக் கட்டுரைகளுக்கு சுட்டி தரப்பட்டுள்ளது. அதை இவ்வாறு செய்யலாம். ''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் அடையாளம்]]''. இரண்டு சதுர பிறக்கட்டுக்களுக்குள் போடுதல் மூலம் இணைப்புத் தரலாம். எ.கா [[கிறித்தவம்]] கிறித்தவம் . மேலும் விளக்கம் வேண்டும் எனின் கூறவும். --Natkeeran 22:30, 1 ஜூலை 2010 (UTC)
- தமிழர் கட்டுரையையும் அதில் தரப்டுகின்ற முதன்மைக் கட்டுரைகள் இணைப்பு முறையையும் பார்த்தேன்; பயனடைந்தேன். தரமான படைப்புகள். நக்கீரன் வழிகாட்டலுக்கு நன்றி!--பவுல்-Paul 23:00, 1 ஜூலை 2010 (UTC)
- விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு நற்கீரனின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் விக்கிமூலம், மற்றும் விக்கிநூல் கட்டுரைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவை முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் பகுதி பகுதியாக வெவ்வேறு பக்கங்களை உருவாக்கலாம். உதாரணத்திற்குப் பார்க்க: விக்கிமூலத்தில் பொன்னியின் செல்வன். இதில் அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. எப்படி ஏனைய அத்தியாயங்களுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய பின்வரும் அத்தியாயத்தைப் பாருங்கள்: பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/ஆடித்திருநாள்.--Kanags \உரையாடுக 01:06, 2 ஜூலை 2010 (UTC)
- தமிழர் கட்டுரையையும் அதில் தரப்டுகின்ற முதன்மைக் கட்டுரைகள் இணைப்பு முறையையும் பார்த்தேன்; பயனடைந்தேன். தரமான படைப்புகள். நக்கீரன் வழிகாட்டலுக்கு நன்றி!--பவுல்-Paul 23:00, 1 ஜூலை 2010 (UTC)
உதவி
[தொகு]நண்பர்களே! நான் இன்றுதான் விக்கிபீடியாவில் சேர்ந்துள்ளேன்.கட்டுரை எப்படி எழுதுவது,எதைப்பற்றி எழுதுவது எனத்தெரியவில்லை.என் புருசனும் கச்சேரிக்கு போகிறான் எனச்சொல்வதுபோல, நானும் கட்டுரை எழுத ஆசைப்பட்டுவிட்டேன். யாராவது உதவுங்களேன்.--−முன்நிற்கும் கருத்து Sivakamieswaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- வணக்கம் சிவகாமீசுவரன், விக்கிப்பீடியாவுக்கு வரவேற்கிறேன். விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் புதியவர் என்றபடியால் முதலில் உங்களுக்கு விருப்பமான துறை ஒன்றில் ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அதனை மேம்படுத்த முயற்சியுங்கள். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றைத் திருத்த முயற்சிக்கலாம். விக்கிப்பீடியா கட்டுரை நடை ஓரளவு உங்களுக்குப் பிடிபட்டவுடன், புதிய கட்டுரைகளை எழுத முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 10:57, 8 ஜூலை 2010 (UTC)
அன்பார்ந்த நண்பர்களே
உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
விநாயகர் அகவல் துதியில் வரும் இவ்வரிகள் நமது விகிபீடியாவிற்கு பொருந்தும் என நான் நினைக்கிறேன்:
'சொற்பதங்கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிரே.. ..'
மேலும் அதை படித்து மகிழ்பவர்களுக்கு:
".. தெளிவாய் பொருந்தவே வந்து உளந்தனில் புகுந்து குருவடிவாகி குவலயந்தன்னில் திருவடி வைத்து திறம் அதுபொருள் என..'
விநாயகர் அகவலில் வரும் இவ்வரிகளும் மிகவும் ஆழமான கருத்தை வழங்குவதாகும்:
'அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி'
அணு என்பது ஒரு பொருளின் மிகவும் சிறிய துகளாக, மேலும் ஒரு மூலகத்தின் தனிப்பொருளாக நாம் அறிவோம்.
அதே போல் கணு என்ற சொல் உயிரினங்களின் மூலப் பொருளாக, அதாவது ஆங்கிலத்தில் செல் cell என்ற சொல்லிற்கு ஈடாக பயன்படுத்தலாமா?
உங்கள் விருப்பத்தை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
இப்படிக்க்கு,
அன்புடன்
உங்கள தமிழ் 09 ராமச்சந்திரன்.
- திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
'கணு' என்பது அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு உறுப்புகள் சேரும் இடத்தைக் குறிப்பது. எ.டு: கரும்பின் கணுப் பகுதி, நம் உடம்பிலேயே அமைந்துள்ள கணுக்கால் பகுதி போன்றவை. அதை எப்படி ஐயா 'செல்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்த முடியும்? முடியாதே!
'செல்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஏற்கனவே 'உயிரணு' என்ற சொல் இருக்கிறது. அதையே நீங்கள் பயன்படுத்தலாமே? அன்புடன்--இ.பு.ஞானப்பிரகாசன் 11:42, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
அன்பரே,
நான் சொல்ல நினைத்ததையே நீங்களும் வழி மொழிந்தீர்கள்!
ஒரு சொல் அல்லது பதத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள் இருக்கலாம், மேலும் அவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
எ.கா: field என்பது களம், திடல், வயல், காடு, கழனி, புலம், தரவுத்தளம், தரவிடம், பந்தை பிடிப்பது போன்றவை.
கணு என்பது உயிரின் மூலப்பொருளான உயிரணுவை குறிக்கலாமல்லவா? இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்! அணுவிற்கு அப்பாலும், கணுவாக உயிரின் செயல்பாட்டிலும்! கணுமுற்றி என்பது ஒரு interface ஐ (இடைமுகத்தை) குறிபபதில்லையா? இன்று மனித வாழ்க்கையில் இடை முகங்கள் இனிதே பெரும் பங்கு வகிக்கின்றன. முற்றம் என்பதும் ஒரு இடை முகம் தானே? அன்றே அக்காலத்திலேயே நம்மவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லையா?
சற்றே நினைத்துப்பாருங்கள், பிறகு கூறுங்கள்! தாமதமாக பதில் அளித்தமைக்கு வருந்துகிறேன், மன்னிப்பீராக. நான் சில நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்தேன்.
நன்றியுடன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும்,
தமிழ்-09 ராமச்சந்திரன் 7-08=2010. உயிரியலில் cell என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக "கலம்" என்றுதான் இலங்கையில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கமும் கலம் என்று பயன்படுத்துவதை மட்டுமே அங்கீகரிக்கிறது.--பாஹிம் 16:46, 17 செப்டெம்பர் 2010 (UTC)
நன்றி!
[தொகு]கையெழுத்திடும் முறை பற்றி நான் கேட்டிருந்த ஐயத்திற்குத் திரு. சுந்தர் அவர்கள் பதிலளித்திருப்பதை இன்றுதான் கண்டேன். நன்றி நண்பரே!--இ.பு.ஞானப்பிரகாசன் 11:54, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
வார்ப்புருத் தேவை!
[தொகு]மதிப்பிற்குரிய விக்கியக் கிளைஞர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! அன்பர்களே! ஒரு பட்டியலுக்குள் நாம் தொடக்கத்திலோ இடையிலோ கடைசியிலோ எந்த இடத்தில் ஒரு புது வரியைச் சேர்த்தாலும் அதற்கு வரிசைப்படித் தானாகவே எண் அமைய # என்ற குறி பயன்படுகிறது இல்லையா? இதே போல் பட்டியல்கள் தானாகவே அகரவரிசைப்படி அமைய ஒரு வார்ப்புரு உருவாக்க முடியுமா? அதாவது அகரவரிசைப்படி அமைந்த ஒரு சொற்பட்டியலுக்குள் நாம் புதிதாக ஒரு சொல்லைச் சேர்க்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்; அந்தச் சொல்லை அந்தப் பட்டியலுக்குள் நாம் எந்த இடத்தில் சேர்த்தாலும் பக்கத்தைச் சேமித்தவுடன் அது தானாகவே அகரவரிசைப்படித் தனக்குரிய இடத்தில் அமர்ந்துவிட வேண்டும். மேலும் அகரவரிசைப்படி அமைந்திராத பட்டியல்களுக்குள் இந்த வார்ப்புருவைச் சேர்த்தால் தானாகவே அந்தப் பட்டியல் அகரவரிசைப்படி அமைந்துவிட வேண்டும். இப்படி ஒரு வார்ப்புருவை உருவாக்க இயலுமா? இயலுமென்றால் கனிவு கூர்ந்து யாராவது உருவாக்கித் தாருங்கள் அன்பர்களே! நான் தற்பொழுது தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் அவர்தம் படைப்புகளின் பெயர்களைப் பதிவேற்றி வருகிறேன். இதில் அவர்தம் படைப்புகள் பற்றிய பட்டியல்கள் அகரவரிசைப்படி இல்லாததால் ஒவ்வொரு படைப்பின் பெயரைச் சேர்க்கும் முன்பும் அப்பெயர் அப்பட்டியலில் இல்லாதிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு முறையும் முழுப் பட்டியலையும் பார்வையிட வேண்டியதாக இருக்கிறது. எப்பொழுதுதாவது ஓரிரு முறை என்றால் தேவலை. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் குறைந்தது பதினைந்து நூல்களின் பெயர்களையாவது கொண்டு வருபவன். அந்தப் பெயர்கள் ஒவ்வொன்றையும் சேர்ப்பதற்கு முன்பும் ஒவ்வொரு முறை முழுப் பட்டியலையும் படித்துப் பார்ப்பது என்பது மிகவும் சிரமமாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் உள்ளது. இந்த இடத்தில் மட்டுமின்றி நமது தமிழ் விக்கிப்பீடியாவின் பல இடங்களில் உள்ள பல பட்டியல்கள் அகரவரிசைப்படி அமையாதிருப்பதால் அவற்றுள் புதியனவற்றைச் சேர்ப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எனக்கோ என் பணிக்கோ மட்டுமின்றி விக்கிப்பீடியாவில் பலருக்கும் பல பணிகளுக்கும் பல வருங்காலப் பணிகளுக்கும் இந்த வார்ப்புரு உதவும். எனவே கனிவு கூர்ந்து இப்படியொரு வார்ப்புருவை உருவாக்கித் தர வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!
உங்கள் அன்பன்--இ.பு.ஞானப்பிரகாசன் 09:47, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
ஐயம் போக்குவீர்!
[தொகு]அன்புடையீர்!
வணக்கம். ஒரு கட்டுரையில் ஒரே மேற்கோளை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுட்டிக்காட்ட வேண்டி வந்தால் அதை எவ்வாறு எழுதுவது? கனிவு கூர்ந்து உதவுவீர்!
ஆவலுடன் காத்திருக்கும்--இ.பு.ஞானப்பிரகாசன் 13:09, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்துக்கான குறிப்பு, "K.A.N. Neelakanda Sastri, A History of South India" என்று முதலில் வரும் பொழுது <ref name=Sastri>KAN Sastri, A History of South India</ref> என்று தாருங்கள். அடுத்தடுத்து வரும் இடங்களில் சுருக்கமாக <ref name=Sastri/> என்று குறித்தால் அதே நூலுக்கு சுட்டு கிடைக்கும். மேலும் விளக்கமாகப் பார்க்க என்னும் பக்கத்தையும், என்னும் பக்கத்தையும் பார்க்கலாம் --செல்வா 14:49, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்னும் பக்கத்தையும் பாருங்கள்.--செல்வா 15:25, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வாவுக்கும் பிற விக்கிப்பீடியர்களுக்கும்
[தொகு]மிக்க நன்றி செல்வா! நீங்கள் கூறியபடியே செய்தேன். வெற்றிகரமாக வந்தது. ஆனால் இதைத் தமிழில் செய்ய முடியவில்லையே ஏன்? தமிழிலும் ஒரே மேற்கோளை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டுவதற்கான வசதியை ஏற்படுத்தும் பொறுப்பைத் தொழில்நுட்ப வல்லாண்மையுடைய விக்கிப்பீடியர்கள் யாராவது ஏற்றுக் கொள்ளலாமே? அன்பன்--இ.பு.ஞானப்பிரகாசன் 10:07, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
அணுசக்தி = அணுஆற்றல் / அணுவாற்றல்
[தொகு]அணுசக்தி என்பதற்கு அணுஆற்றல் / அணுவாற்றல் என்பது தமிழ் பெயர் என எண்ணுகிறேன். இலக்கண புணர்ச்சி விதிகள் படி அணுஆற்றல் / அணுவாற்றல் இவற்றில் எது சரி? நான் பள்ளியில் படிக்கும் பொழுது இந்த மூன்று பெயர்களும் பள்ளியின் பெயருக்கு அடிக்கடி மாற்றப்பட்டது. ஸ்ரீகாந்த் 01:42, 28 அக்டோபர் 2010 (UTC)
அதிவேகக் கணினி குறித்த கட்டுரை
[தொகு]கல்லூரித் தேர்வுகள் முடிந்துவிட்ட காரணத்தினால் த.வி-யில் பங்களிக்க கணினி ஆய்வகத்திற்கு வந்தேன். எந்தத் தளம் சென்றாலும் சீனத்தின் மீத்திறன் கணினியைப் பற்றிய பேச்சே அடிபட்டது. எனவே அதனைப் பற்றி த,வி-யில் எழுதியுள்ளேன். அக்கணினிப் பெயரில் ஏதேனும் மாற்றமிருப்பின் கூறவும். கட்டுரை "டியான்ஏ-1" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்துப் பார்த்துக் கருத்து கூறவும். திருத்தம் ஏதேனும் இருப்பினும் கூறவும். இந்தப் பக்கத்தில் கட்டுரைகள் எவ்வெம்மொழியிலுள்ளது என்ற பட்டியலில் தமிழின் பெயரும் இடம்பெற ஆவன செய்யுமாறு மதிப்பிற்குரிய நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையைப் படித்துப் பார்க்க மறக்க வேண்டாம்..
வேண்டுகோள்
[தொகு]
வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி எனும் பெயர் மிகவும் நீளமான ஒன்றாகவும் அதனை விவரிக்கும் விதமாகவும் உள்ளது. ஒரு பொருளுக்குப் பெயரிடுகையில் அதன் பொருள் விளங்குவதைக் காட்டிலும் அதனை சுருக்கமாக அழைக்கும் முறைமையே கையாளப்பட வேண்டும் என்பது திரு.மா.நன்னன் அவர்களின் கருத்து. அதை நான் ஒப்புகிறேன். ஆனால் விக்கியின் கொள்கை என்னவென்று அடியேன் அறிகிலம். எனவே உங்கள் அனைவரின் கருத்தும் தேவை. அதைக் கொண்டு இந்த சாதனத்திற்கு இப்பெயரே இருக்கட்டுமா அல்லது சுருக்கமாக வேறொரு பெயரிடலாமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது குறித்து பொதுவான ஓர் அறிவிப்பை நிர்வாகி அவர்கள் அனைவருக்கும் வெளியிட வேண்டுகிறேன். அதாவது 'தமிழில் பெயரிடும்போது அப்பெயர் அதன் பயன்பாட்டை விளக்கும் வகையில் இருக்க வேண்டுமா அல்லது அதனை எளிதில் நினைவு வைத்துக் கொண்டு செயல்படுவது போல் இருக்க வேண்டுமா'
--சூர்ய பிரகாசு.ச.அ. 10:51, 2 நவம்பர் 2010 (UTC)
அறிவுசார் சொத்துடைமை
[தொகு]
அறிவுசார் சொத்துடைமை தொடர்பான கட்டுரையில் patent , copyright போன்ற சொற்களுக்கு சரியான கலைச்சொற்கள் உண்டா? விக்கிசனரியில் காப்புரிமை என்பது பொதுவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை patent காப்புரிமை copyright பதிப்புரிமை geographical indicators புவிசார் குறியீட்டு உரிமை industrial design தொழில் வடிவத்துரிமை trademark வணிகக்குறியீடு என்று மொழிப்பெயர்த்துள்ளேன். தமிழில் வழக்கில் வேறு உள்ளனவா? இதையே பயன்படுத்தலாமா?
--பயனர்:AananthR
- நீங்கள் சொல்வது உண்மை. சரியான சீரான ஈடுசொற்கள் பயன்பாட்டில் உள்ளனவா எனத் தெரியவில்லை. காப்புரிமம் என்பது பொதுச்சொல். எழுத்துரிமம் என்னும் சொல்லும் சில சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றது. Patent என்பது படைப்புக் காப்புரிமம். படைப்புரிமம் என்பது சரியல்ல. copyright என்பதைப் பதிப்புரிமை என்பது முற்றிலும் சரியே. trademark என்பதை வணிகக்குறி என்றாலே போதும், ஆனால் வணிகக்குறியீடு என்பதும் சரியே. industtrial design என்பதை தொழில் வகுதியுரிமை எனலாம்.
- திருக்குறளில்
- வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
- தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
- என்று கூறுவதில் வரும் வகுத்தல், வகுத்த வகை என்பன design என்னும் பொருள் தருவன. எனவே வகுதி என்பதை design என்னும் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுத்தலாம் என பாவாணர் ஓரிடத்திலே கூறியுள்ளார். அது பொருத்தமானதாகவே எனக்கும் தோன்றுகின்றது. வகுதி என்பதும் சுருக்கமான சொல். --செல்வா 03:34, 6 திசம்பர் 2010 (UTC)
Tamil Transliteration
[தொகு]Does Tamil Wikipedia offer 'Tamil Transliteration' features.? If yes, can you please explain how to use that feature so that it would assist the people who don't know typewriting in Tamil.
- Yes recently the transliteration feature has been introduced in Tamil wikipedia in a test basis. Once the bugs are identified, worked out and a stable version is rolled out, we will create a detailed help page. For using it now, check the ”தமிழில் எழுத” check box on the top right corner and chose the "எழுத்துப்பெயர்ப்பு” option in the dropdown box. If you are not seeing these features, you must clear your browser's cache and then reload the page. Please log the bugs you find here - விக்கிப்பீடியா பேச்சு:தமிழ்த் தட்டச்சுக் கருவி--சோடாபாட்டில் 20:17, 9 திசம்பர் 2010 (UTC)
- I can see the features in IE and Firefox but not in Chrome,even after clearing the cache. All the Indian language's Transliteration features(tamil,telugu,hindi etc) are not seen in Chrome. I think wikipedia should look into this matter.
- yup Chrome issue is a known bug. Hopefully it will be soon resolved in the future.--சோடாபாட்டில் 06:09, 12 திசம்பர் 2010 (UTC)
- Actually issues were fixed for chrome i guess.it now works on chrome, but the way chrome caches itself is strange. Sometimes on slow connections the transliterate js might not load and if that is cached, it wont load in chrome. ஸ்ரீகாந்த் 03:54, 14 திசம்பர் 2010 (UTC)
புது பதிகை
[தொகு]புது பதிகை ஏன்பதிவுசெய்யவேண்டும் ? நான் பலமுறை முயர்ச்சி செய்தேன் பலன் இல்லை குக்கிஸ் என்றால் என்ன?
- புகு பதிகை = login. நீங்கள் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும் என்பது தேவையில்லை. செய்யாமலேயே விக்கிப்பீடியாவுக்கு பங்களிக்கலாம். --சோடாபாட்டில் 09:20, 18 திசம்பர் 2010 (UTC)