ஆகத்து 29
Appearance
(ஆகஸ்ட் 29 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது.
- 1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது.
- 1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1350 – வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன.
- 1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1498 – வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
- 1526 – மோகாக்சு சமரில் உதுமானியத் துருக்கியர் முதலாம் சுலைமான் தலைமையில் அங்கேரி, பொகீமியாவின் கடைசி ஜாகிலோனிய மன்னரைக் கொன்றனர்.
- 1541 – உதுமானியத் துருக்கியர் அங்கேரியின் தலைநகர் புதாவைக் கைப்பற்றினர்.
- 1658 – சீர்திருத்தத் திருச்சபை யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ஒல்லாந்து மறைப்பரப்புனர் வண. பிலிப்பசு பால்டேயசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2]
- 1756 – ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் ஆரம்பமானது. புருசிய மன்னர் இரண்டாம் பிரடெரிக்கு செருமனியின் சாக்சனியைத் தாக்கினார்.
- 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: றோட் தீவில் பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் முடிவில்லாத போரில் ஈடுபட்டன.
- 1782 – திருகோணமலைக் கோட்டையை பிரான்சியர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
- 1786 – ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் விவசாயிகள் அதிக கடன், வரி பிரச்சினைகளால் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1807 – பிரித்தானியப் படையினர் சர் ஆரதர் வெல்லசுலி தலைமையில் கோபனாவன் நகருக்கு வெளியே கோகி என்ற இடத்தில் டென்மார்க்கு படைகளை வென்றனர்.
- 1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
- 1842 – நாஞ்சிங் உடன்படிக்கையை அடுத்து முதலாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது. [ஆங்காங்]] பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
- 1869 – உலகின் முதலாவது மலையேற்ற பற்சட்ட இருப்புப்பாதை வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
- 1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலண்டனில் ஆத்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷசுத் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
- 1885 – காட்லீப் டைம்லர் உலகின் முதலாவது உள் எரி பொறி விசையுந்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1898 – குட்இயர் டயர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து கொரியாவில் சப்பானியரின் ஆட்சி ஆரம்பமானது.
- 1911 – ஐரோப்பிய அமெரிக்கர்களுடன் கடைசியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இஷி என்ற கடைசி பழங்குடி அமெரிக்கர் வடகிழக்கு கலிபோர்னியாவின் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியே வந்தனர்.
- 1915 – எஃப்-4 அமெரிக்காவின் விபத்துக்குள்ளான முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
- 1916 – பிலிப்பீன்சுகு சுயாட்சி வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றபட்டடது.
- 1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி 36 குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இசுக்காட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கள்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நாட்சி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட டென்மார்க்கின் அரசை செருமனி கலைத்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: 60,000 சிலோவாக்கியப் படைகள் நாட்சி ஜெர்மனிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
- 1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
- 1949 – சோவியத் ஒன்றியம் தனது ஜோ 1 என அழைக்கப்பட்ட முதலாவது அணுக்கரு ஆயுதத்தை கசக்ஸ்தானில் சோதித்தது.
- 1950 – கொரியப் போர்: பிரித்தானியப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.
- 1965 – ஜெமினி V விண்கலம் புவிக்குத் திரும்பியது.
- 1966 – எகிப்திய அரசுத்தலைவர் ஜமால் அப்துல் நாசிரக் கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக எகிப்திய சிந்தனையாளர் சய்யித் கூத்துப் தூக்கிலிடப்பட்டார்.
- 1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
- 1982 – செயற்கைத் தனிமம் மெய்ட்னீரியம் (அணு எண் 109) முதல் தடவையாக செருமனியில் தொகுக்கப்பட்டது.
- 1991 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் சோவியத் உயர்பீடம் தடை செய்தது.
- 1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
- 1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று மலையுடன் மோதியதில் 141 பேர் உயிரிழந்தனர்.
- 1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இசுலாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2003 – ஈராக்கில் நஜாப் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் சியா இசுலாம் தலைவர் அயொத்தொல்லா சாயது அல்-அக்கீம் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $125 பில்லியன் சேதம் ஏற்பட்டது.
- 2012 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காணாமல் போயினர்.
பிறப்புகள்
- 1632 – ஜான் லாக், ஆங்கிலேய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1704)
- 1780 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், பிரான்சிய ஓவியர் (இ. 1867)
- 1863 – கிடுகு வெங்கட ராமமூர்த்தி, தெலுங்கு எழுத்தாளர், மொழியியலாளர், வரலாற்று ஆய்வாளர் (இ. 1940)
- 1887 – ஜீவராஜ் மேத்தா, குஜராத் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1978)
- 1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், கேரளக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952)
- 1905 – தியான் சந்த், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (இ. 1979)
- 1913 – கே. ஜெயக்கொடி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1923 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2014)
- 1926 – க. இராசாராம், தமிழக அரசியல்வாதி (இ. 2008)
- 1926 – இராமகிருஷ்ண எக்டே, இந்திய அரசியல்வாதி, கருநாடக மாநிலத்தின் 10-வது முதலமைச்சர் (இ. 2004)
- 1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி (இ. 2018)
- 1943 – ஆர்தர் பி. மெக்டொனால்டு, நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர்
- 1943 – விஜயகுமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1947 – டெம்பிள் கிராண்டின், அமெரிக்க கால்நடை அறிவியலாளர்
- 1949 – கே. ராதாகிருஷ்ணன், இந்திய அறிவியலாளர்
- 1958 – மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2009)
- 1959 – அக்கினேனி நாகார்ஜுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1977 – விஷால், திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1604 – அமீதா பானு பேகம், முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவி (பி. 1527)
- 1976 – காஜி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர், புல்லாங்குழல் மேதை (பி. 1899)
- 1985 – எம். கே. ராதா, இந்தியத் தமிழ் நாடக, திரைப்பட நடிகர் (பி. 1910)
- 1987 – நயி அல் அலி, பாலத்தீன கேலிச்சித்திர ஓவியர் (பி. 1938)
- 2003 – ஒரேசு வெல்கம் பாப்காக், அமெரிக்க வானியலாளர் (பி. 1912)
- 2005 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (பி. 1904)
- 2008 – ஆர்வி, தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (பி. 1918)
- 2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்
- 2015 – வேயின் டையர், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1940)
- 2016 – ஜீன் வைல்டர், அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1933)
- 2017 – ஏ. எச். எம். அஸ்வர், இலங்கை அரசியல்வாதி (பி. 1937)
- 2018 – நந்தமூரி ஹரிகிருஷ்ணா, தெலுங்குத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (பி. 1956)
- 2020 – ஆசை இராசையா, ஈழத்து ஓவியர் (பி. 1946)
சிறப்பு நாள்
- தெலுங்கு மொழி நாள் (இந்தியா)
- அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்
- தேசிய விளையாட்டு நாள் (இந்தியா)
- தேசிய எழுச்சி நாள் (சிலோவாக்கியா)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
வெளி இணைப்புகள்
- பிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)
- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
- கனடா இந்த நாளில் பரணிடப்பட்டது 2012-12-08 at Archive.today