நவம்பர் 18
Appearance
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 18 (November 18) கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 326 – பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது.
- 401 – விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர்.
- 1105 – மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1180 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- 1210 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார்.
- 1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
- 1493 – கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
- 1494 – பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார்.
- 1626 – புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
- 1730 – பின்னாளைய புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் அரச மன்னிப்புப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- 1803 – எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
- 1809 – நெப்போலியப் போர்கள்: வங்காள விரிகுடாவில் இடம்பெற்ற கடற்படைச் சமரில் பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளை வென்றது.
- 1863 – தென்மார்க்கின் ஒன்பதாம் கிறித்தியான் சிலெசுவிக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் செருமனி-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
- 1872 – சூசன் பிரவுன் அந்தோனியும் மேலும் 14 பெண்களும் அமெரிக்க அரசுத்தேர்தலில் வாக்களித்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.
- 1883 – கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரவலயங்களை வகுத்துக் கொண்டன.
- 1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
- 1905 – டென்மார்க் இளவரசர் கார்ல் நோர்வே மன்னராக ஏழாம் ஆக்கொன் என்ற பெயரில் முடிசூடினார்.
- 1909 – நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
- 1918 – லாத்வியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1926 – ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
- 1928 – வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.
- 1929 – அத்திலாந்திக் பெருங்கடலில் நியூபவுண்ட்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேதம் எற்பட்டது. 28 பேர் உயிரிழந்தனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: முசோலினியின் கிரேக்க-இத்தாலியப் போரில் ஏற்பட்ட தோல்வியைப் பற்றி விவாதிக்க இட்லரும் இத்தாலிய வெளியுறவு அமைச்சரும் சந்தித்தனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 440 போர் விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் பிரித்தானியா 9 வானூர்திகளையும் 53 விமானிகளையும் இழந்தது.
- 1947 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் உயிரிழந்தனர்.
- 1949 – நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர்.
- 1961 – அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி 18,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமுக்கு அனுப்பினார்.[1][2]
- 1963 – முதலாவது தள்ளு-குமிழ் தொலைபேசி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
- 1971 – ஓமான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
- 1987 – லண்டனில் கிங் க்ரொஸ் பாதாளத் தொடருந்து நிலையத்தில் தீ பரவியதில் 31 பேர் உயிரிழந்தனர்.
- 1988 – அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் ஒப்புதல் அளித்தார்.
- 1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
- 1993 – தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.
- 1996 – பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு கால்வாய் சுரங்கம் வழியாகச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் பலர் காயமடைந்தனர்.
- 2006 – ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
- 2013 – அமெரிக்காவின் நாசா நிறுவனம் மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.
பிறப்புகள்
- 1787 – லூயி தாகர், பிரான்சிய இயற்பியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1851)
- 1836 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1911)
- 1882 – ஜாக் மாரித்தேன், பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1973)
- 1888 – திருமலை கிருஷ்ணமாச்சாரி, இந்திய யோகா ஆசிரியர் (இ. 1989)
- 1888 – பிரான்சஸ் மரியன், அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1973)
- 1901 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 1990)
- 1910 – பதுகேஷ்வர் தத், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1965)
- 1923 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 1998)
- 1929 – பி. எஸ். சரோஜா, தமிழகத் திரைப்பட நடிகை
- 1939 – மார்கரெட் அட்வுட், கனடிய எழுத்தாளர், கவிஞர்
- 1939 – ஜான் ஓ'கீஃப், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-பிரித்தானிய நரம்பணுவியல் அறிஞர்
- 1945 – மகிந்த ராசபக்ச, இலங்கையின் 6வது அரசுத்தலைவர்
- 1956 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணினியாளர் (இ. 2014)
- 1965 – பிரேம்குமார் குணரத்தினம், இலங்கை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்
- 1967 – ஷோபாசக்தி, இலங்கை-பிரான்சிய தமிழ்ப் படைப்பாளி, நடிகர், போராளி
- 1968 – ஓவன் வில்சன், அமெரிக்க நடிகர்
- 1982 – நேகா பாசின், இந்தியப் பாடகி, பாடலாசிரியர்
- 1984 – நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1992 – நேத்தன் கிரெஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்
இறப்புகள்
- 1772 – மாதவராவ், மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (பி. 1745)
- 1887 – குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1801)
- 1908 – வி. பாஷ்யம் ஐய்யங்கார், இந்திய வழக்கறிஞர், நீதியாளர் (பி. 1844)
- 1922 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1871)
- 1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1872)
- 1952 – போல் எல்யூவார், பிரான்சியக் கவிஞர் (பி. 1895)
- 1962 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (பி. 1885)
- 1982 – தி. ஜானகிராமன், தமிழக எழுத்தாளர் (பி. 1921)
- 2013 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929)
- 2014 – சி. ருத்ரைய்யா, இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1947)
- 2015 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)
- 2017 – திருமலை பத்மநாதன், ஈழத்து இசையமைப்பாளர்
- 2020 – அலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியத் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் (பி. 1941)
- 2021 – கே. எஸ். ஆனந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1930)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லாத்வியா, உருசியாவிடம் இருந்து 1918)
- விடுதலை நாள் (மொரோக்கோ, பிரான்சு, மற்றும் எசுப்பானியாவிடம் இருந்து 1956)
மேற்கோள்கள்
- ↑ Defending the Free World: John F. Kennedy, Lyndon Johnson, and the Vietnam War, 1961-1965 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-27596-279-2 p. 56
- ↑ The Fog of War: Lessons from the Life of Robert S. McNamara பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-742-54221-1 ப. 282
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 18 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்