பெப்ரவரி 10
Appearance
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 10 (February 10) கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.
- 1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
- 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.
- 1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.
- 1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.
- 1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
- 1840 – ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.
- 1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
- 1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
- 1936 – இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.
- 1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
- 1947 – பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.
- 1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
- 1962 – பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்ரம் இடம்பெற்றது.
- 1964 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் "மெல்பேர்ன்" என்ற விமானந்தாங்கிக் கப்பலும் "வொயேஜர்" என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.
- 1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
- 1972 – ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.
- 1984 – கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.
- 1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
- 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.
- 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
- 2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
[தொகு]- 1775 – சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834)
- 1785 – கிளாட்-லூயி நேவியர், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1836)
- 1805 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, கேரள கத்தோலிக்கப் புனிதர் (இ. 1871)
- 1825 – சாமுவேல் பிளிம்சால், ஆங்கிலேய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1898)
- 1842 – அகனேசு மேரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (இ. 1907)
- 1848 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (இ. 1936)
- 1890 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1960)
- 1893 – பில் டில்டென், அமெரிக்க டென்னிசு ஆட்டவீரர், பயிற்சியாளர் (இ. 1953)
- 1897 – ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1985)
- 1898 – பெர்தோல்ட் பிரெக்ட், செருமானிய இயக்குநர், கவிஞர் (இ. 1956)
- 1902 – வால்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்ற சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1987)
- 1916 – தர்பாரா சிங், பஞ்சாபின் முதலமைச்சர் (இ. 1990)
- 1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010)
- 1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)
- 1937 – தா. கிருட்டிணன், தமிழக அரசியல்வாதி (இ. 2003)
- 1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர்
- 1957 – காத்தரைன் பிரீசு, அமெரிக்க வானியற்பியலாளர்
- 1982 – ஜஸ்டின் காட்லின், அமெரிக்க விரைவு ஓட்ட வீரர்
- 1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
- 1985 – மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி
இறப்புகள்
[தொகு]- 1307 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1265)
- 1837 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசியக் கவிஞர் (பி. 1799)
- 1865 – ஹைன்ரிக் லென்ஸ், எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1804)
- 1868 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1781)
- 1878 – கிளவுட் பெர்னாட், பிரான்சிய உயிரியலாளர் (பி. 1813)
- 1891 – சோஃபியா கோவலெவ்சுகாயா, சுருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)
- 1912 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (பி. 1827)
- 1923 – வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1845)
- 1944 – யூகி மைக்கேல் அந்தொனியாடி, கிரேக்க-பிரான்சிய வானியலாளர், சதுரங்க வீரர் (பி. 1870)
- 1953 – என். கோபாலசாமி அய்யங்கார், இந்திய அரசியல்வாதி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சர் (பி. 1882)
- 1993 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1906)
- 2001 – கே. தவமணி தேவி, இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை
- 2005 – ஆர்தர் மில்லர், அமெரிக்க நடிகர், எழுத்தாளர் (பி. 1915)
- 2010 – கிரீஷ் புத்தன்சேரி, மலையாளத் திரைப்பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் (பி. 1957)
- 2020 – சிசு நாகேந்திரன், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (பி. 1921)
சிறப்பு நாள்
[தொகு]- குருதிய எழுத்தாளர் ஒன்றிய நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)