உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:HD இலிருந்து வழிமாற்றப்பட்டது)
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:HD
WP:HELP
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

« பழைய உரையாடல்கள்
தொகுப்பு
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |14|15|16


கட்டுரை உள்ளிணைப்புக் கருவி

[தொகு]

இந்தக் கருவி Source Editing-இல் செயல்படுகிறது. இதை Visual Editing-லும் பயன்படுத்த இயலுமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 04:37, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@சுப. இராஜசேகர்: Source Editing இல் மட்டும்தான் இதனைப் பயன்படுத்த முடியும் என நம்புகிறேன். எனது தொகுப்புப் பக்கத்தில் Source Editing மட்டும்தான் உள்ளது, visual editing தெரிவதில்லை.--Kanags \உரையாடுக 07:18, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

எனது ஊர் கல்வெட்டு வரலாறு எழுத வழிகாட்டவும்

[தொகு]

எனது ஊர் கல்வெட்டு வரலாறு எழுத வழிகாட்டவும் மருதநாடன் (பேச்சு) 14:05, 1 சனவரி 2024 (UTC) என்து ஊர் கடலூர் மவட்டம் கட்டுமன்னார்கோயில் மானியம் ஆடூர் இங்கு ஒரு சிவாலயம் உள்ளது.இறைவன் பெயர்.பிரமபுரிஸ்வரர் இறைவி கமலாம்பிகை இக்கோயில் கி.பி 1119 கட்டப்பட்டுள்ளது.கோயில் மதில் சுவரில் கல்வெட்டு உள்ளது. ஆதாரம் ;(கல்வெட்டு துணைவன் நூல் மற்றும் 1954 கல்வெட்டு ஆண்டுஅறிக்கை)[பதிலளி]

சமிக்ஞை

[தொகு]

சமிக்ஞை எனும் சொல்லானது சைகை, குறி எனப் பொருள்படும் (விக்சனரி). சமிக்ஞை என்பது தனித்தமிழ்ச் சொல்லா? அல்லது வடமொழிச் சொல்லா? மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:01, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]

சமிக்கை என்றும் குறிப்பிடுகிறோம்.--கி.மூர்த்தி (பேச்சு) 04:29, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]

தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்

[தொகு]

பகுப்பு பேச்சு:தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள் துப்புரவு செய்வது குறித்து கேட்டுள்ளேன் உழவன் (உரை) 16:02, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Yபேச்சுப் பக்கத்தில் வழிகாட்டிய நண்பர்களுக்கு நன்றி. உழவன் (உரை) 01:57, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]

உங்கள் பரிந்துரையைத் தருக

[தொகு]

பகுப்பு பேச்சு:உண்மைத் திரைப்படங்கள் உழவன் (உரை) 02:34, 18 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Y:பேச்சுப்பக்கத்தில், பெயர் மாற்றலுக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. உழவன் (உரை) 01:58, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:கடல்வாழ் உயிரினங்கள்

[தொகு]

வார்ப்புரு:கடல்வாழ் உயிரினங்கள் எந்த வார்ப்புருவில் உள்ளவை பொதுவான உயிரிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் இதில் எழுத இயலும். இது போன்று எந்த ஒரு வகைப்பாட்டியல் தன்மையும் இல்லாமல் இப்படியான வார்ப்புருக்களை இருக்கலாமா? இதனை உருவாக்கியவர் கைப்பாவை கணக்கு என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளார். முறையான விக்கிவடிவம் இருப்பதால் மட்டுமே இதனை பேணுதல் நன்றா? உழவன் (உரை) 07:14, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நீக்குவது சிறப்பு AntanO (பேச்சு) 08:22, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

தலங்கள் <> தளங்கள்

[தொகு]

தலங்கள், தளங்கள் - இவற்றில் எது சரியானது? AntanO (பேச்சு) 08:21, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு:இராஜஸ்தானில் உள்ள சுற்றுலாத் தளங்கள் என்பதிலுள்ள தளங்கள் என்பது தலங்கள் என்று இருக்கவேண்டும். ஆனால், தலம் என்பது தனித்தமிழ் அன்று. ஸ்தலம் எனும் வடமொழிச் சொல், தமிழில் தலம் என அழைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது! பொருத்தமான சொல்லை பயன்படுத்த வேண்டும் எனும் எண்ணம் என்னுள் நீண்ட காலமாக உள்ளது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
இந்து சமயத்தில் holy place என்பதை புண்யஸ்தலம் என்பர். இதனை புண்ணியத்தலம் என தமிழ்ப்படுத்தினர். காசி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களை புண்ணியத்தலங்கள் அல்லது புண்ணியத் தலங்கள் என எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் ஒரு மரம் சிறப்பாக கருதப்படும். அந்த மரமும் அங்கிருக்கும். எடுத்துக்காட்டாக வன்னி மரம், புன்னை மரம் ஆகியன. இதனை ஸ்தல விருட்சம் என்றழைத்தனர். இப்போது தல விருட்சம் என தமிழ்ப்படுத்தியுள்ளனர்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:54, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
தளம் என்பது இடத்தைக் குறிக்கும் அல்லவா? எ.கா: வீட்டின் மேல் தளம். மேலும் ஆ.வி பகுப்பிடலில் Tourist attractions in India, Tourist attractions in Rajasthan என்றுள்ளது. எனவே, இந்தியாவில் சுற்றுலாப்பயணி ஈர்ப்புக்கள் என்றவாறு பெயரிடல் பல இடங்களையும் உள்ளடக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் அல்லவா? ஏனென்றால், இங்கு நகர். வழிபாட்டிடம், கோட்டை உட்பட்ட பலவும் உள்ளடங்குகின்றன. தல விருட்சம் தல மரமானால் இன்னும் சிறப்பு. --AntanO (பேச்சு) 10:48, 4 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

பகுப்பில் தலைப்பு மாற்றம் செய்ய பரிந்துரைக்கவும்

[தொகு]

பகுப்பு பேச்சு:போலி அறிவியல் என்ற பக்கத்தில் உங்களது முன்மொழிவுகளைத் தாருங்கள். உழவன் (உரை) 13:13, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கட்டுரை மீளமைக்க உதவி

[தொகு]

ஆர்த்தி அகர்வால் இந்தக்கட்டுரையானது மொழிபெயர்ப்பில் ஆர்த்தி அகர்வால்(நடிகை) இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தை மாற்றி பதிப்பிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டுரையை மீளமைக்க முடியாததால் புதியதாகவே உருவாக்கியுள்ளேன். பழைய கட்டுரையை மீளமைக்க முடியுமா? வேறென்ன வழிகள் உண்டென்று கூற முடியுமா??

@பிரயாணி:
  1. ஆர்த்தி அகர்வால் கட்டுரையை மீளமைத்துள்ளேன். இக்கட்டுரையில் மேற்கொண்டு செய்யவேண்டியது எதுவுமில்லை.
  2. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்தது, Arti Agrawal எனும் கட்டுரையை. கவனியுங்கள் அக்ரவால்; அகர்வால் அன்று.
  3. நீங்கள் மொழிபெயர்த்த உள்ளடக்கத்தை பயனர்:பிரயாணி/மணல்தொட்டி எனும் பக்கத்தில் இட்டுள்ளேன். *ஆர்த்தி அக்ரவால்* எனும் புதிய பக்கத்தை ஆரம்பித்து, இந்த மணல்தொட்டியில் உள்ள உள்ளடக்கத்தை புதிய பக்கத்தில் இட்டு, பதிப்பிடுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 14 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 10:14, 15 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கட்டுரைத் தலைப்பில் ஐயம்

[தொகு]

வணக்கம், கட்டுரைத் தலைப்புகளில் ஒரு பொதுவான வடிவம் இருப்பது நல்லது. விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு எனும் பக்கத்தில் சில விதிகள் உள்ளன. ஆனால் பின்வரும் சில கட்டுரைகளில் எந்த மாதிரியான வழக்கத்தினைப் பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனவே இது குறித்தான தெளிவு உள்ள விக்கிப்பீடியர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இதன் மூலம் கட்டுரைகளைத் துப்புரவு செய்வதில் என் போன்றவர்களுக்கு தெளிவு கிடைக்கும். நன்றி உதாரணக் கட்டுரைகள்:

-- ஸ்ரீதர். ஞா (✉) 08:42, 15 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி -பக்கத்தை நீக்கியது தொடர்பாக

[தொகு]

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியை பற்றிய கட்டுரையை எழுதியிருந்தேன். அதற்கான சான்றுகள் கொடுக்கப்பட்டிருந்தது. கூடுமானவரை விதிகளை பின்பற்றி எழுதி இருந்தேன். அதன் நீக்கம் குறித்து தெளிவு வேண்டும். எதன் காரணமாக கட்டுரை நீக்கப்பட்டது?@Sangeethkumar07 Sangeethkumar07 (பேச்சு) 06:06, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், அந்தக் கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரை இல்லை என்பதனால் நீக்கப்பட்டது. காண்க: கலைக்களஞ்சியம் ஸ்ரீதர். ஞா (✉) 06:14, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
கலைக்களஞ்சிய நடையில் எழுதப்படவில்லை, குறிப்பிடத்தக்கமை குறித்து வெளிச் சான்றுகள் எதுவும் தரப்படவில்லை.--Kanags \உரையாடுக 06:36, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

en:Template:Pending film தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் படங்களுக்கு இந்த வார்ப்புழுவை பட்டியலில் ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றனர். இதனை இறக்குமதி எவரேனும் ஒருவர் செய்து தருக. முன்கூட்டியே நன்றி! ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 17:05, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Cite-Web வார்ப்புருவில் தமிழாக்கம்

[தொகு]

வார்ப்புரு:Cite web வார்ப்புருவில் இதுவரை பார்க்கப்பட்ட நாள் என்றிருந்தது தற்போது 'Retrieved' என மாறியுள்ளது. இது நிர்வாகிகளால் மட்டுமே தொகுக்கக்கூடியதாகக் காக்கப்பட்டுள்ளது. இதனை மீளமைத்து மீண்டும் தமிழில் வர ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். பயன்பாட்டு எ.கா: கொக்குத்தொடுவாய் --சிவகோசரன் (பேச்சு) 14:07, 22 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. இல்லாவிடின் வழுக்கள் ஏற்படும். Module:Citation/CS1/Configuration இங்கு மொழிபெயர்க்க வேண்டும். தற்போதைக்கு 'Retrieved' என்பதை மாற்றியுள்ளேன். @Info-farmer: AntanO (பேச்சு) 18:58, 22 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:49, 23 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

இதை en:Template:Infobox religious text வார்ப்புரு:Infobox religious text தமிழில் புதுப்பித்து தர வேண்டுகிறேன். எவரேனும் செய்து உதவுங்கள். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 00:08, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

புதுப்பித்திருக்கிறேன். வேறு மாற்றங்கள் தேவையென்றால் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 06:38, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:தொகுக்கப்படுகிறது

[தொகு]

வார்ப்புரு பேச்சு:In use என்பதில் உங்களது எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். இது முக்கியம். ஏனெனில், பயனர் ஒருவர், பிறரின் பதிவுகள் இல்லாமல், தான் எண்ணியபடி ஒரு கட்டுரையை உருவாக்க இது உதவும். இவ்வார்ப்புரு நீக்கிய பின்பு பிறர் மேம்படுத்துவதே சரியானது. இது இருக்கும் போதே இதனை நீக்குவது, சரியில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு தனிநபர் உரிமை தருவது இவ்வார்ப்புரு. எனவே, கால எல்லையையும் முடிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், ஒவ்வொரு கட்டுரைக்கும் பேச்சு:கிளினசு லோடோய்டேசு இதுபோல எழுத வேண்டிய நிலை எழுகிறது. --உழவன் (உரை) 02:49, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

உங்கள் விருப்பப்படி தொகுக்க உங்கள் மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். இரு மணித்தியாலங்களில் தொகுக்க முடியாவிட்டால் எதற்கு ஆரம்பிக்கிறீர்கள்? ஏன் இந்த அவசரம்? தயவுசெய்து உங்கள் மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள்.--AntanO (பேச்சு) 13:43, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
சரி. உழவன் (உரை) 15:45, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மொத்த எண்ணிக்கை விவரம்

[தொகு]

வார்ப்புரு:Unreferenced இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கை அளவு தேவைப்படுகிறது. எங்கு பார்க்கவேண்டும்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மொத்தம் 6,049 கட்டுரைகள் உள்ளன.--Kanags \உரையாடுக 06:42, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நான் தேடியபோது, அதிகபட்ச display count 500 தான் பார்க்க இயன்றது. இதனை 5000 என மாற்றுவது எவ்வாறு? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நான் தந்திருந்த இணைப்பின் முகவரியைக் கவனியுங்கள். அங்கு limit=5000 ஆக மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:01, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Kanags: மிக்க நன்றி! தெரிந்துகொண்டேன். உரலிக்குச் சென்று limitஐ மாற்றிக்கொள்ள வேண்டும். 5000 என்பதுதான் அதிகபட்சம் போன்று தெரிகிறது. 10000, 6000 ஆகியன முயற்சி செய்து பார்த்தேன். எடுத்துக்கொள்ளவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:06, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பெருநகர பேராலயம் அல்லது உயர்மறைமாவட்ட பேராலயம்? - Metropolitan Cathedral

[தொகு]

பேச்சு:புனித மேரி பெருநகர பேராலயம், சங்கனாச்சேரி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 01:45, 26 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வடநடு சீனா

[தொகு]

வடநடு சீனா என்ற கட்டுரையில் புவிக்குறியீடுகளை சீர் செய்து தருக. கண்டு கற்றுக் கொள்கிறேன். உழவன் (உரை) 06:18, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு

[தொகு]

தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை தவறாமல் விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள். விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் என்பதில் 9, 15 ஆகிய விளக்கப்படங்கள் உங்களுக்கு உதவும். காண்க: வடநடு சீனா, ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:26, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைக்குரிய விக்கித்தரவில், எம்மொழியிலும் இல்லை. காண்க. இதுபோன்ற கட்டுரைகளுக்கென்று தனிப்பகுப்பு இருந்தால் விக்கித்தரவில் தானியக்கமாக இணைக்க உதவியாக இருக்கும். உழவன் (உரை) 06:42, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
விக்கித்தரவில் இல்லையெனில் உருவாக்குங்கள் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:13, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நன்றி. கட்டுரையாளருக்கு உருவாக்கக் கற்றுத்தருவேன். உழவன் (உரை) 07:31, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நீங்கள் கற்றுத்தரும்போது இந்த பக்கத்தினை அறிமுகப்படுத்துங்கள் d:Help:Contents ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 01:58, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நன்றி. அப்பயனர் ஆங்கில துறை கல்லூரிப் பேராசிரியை. தேர்தலால் கல்வியாண்டு முடிய உள்ளதால். 'கற்றலும் கற்பித்தலும்' தள்ளி போகிறது. முதலில் நான் கசடற அறிந்து கொள்ள அப்பக்கத்தின் இடைமுகத்தினை தமிழாக்கம் செய்வேன். உழவன் (உரை) 02:08, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வரைபட வழு

[தொகு]

பேச்சு:கபாரவ்சுக்கு தகவற்பெட்டியின் வரைபட வழு களைவது எப்படி? உழவன் (உரை) 06:28, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கட்டுரையை மேம்படுத்த விழைகிறேன்

[தொகு]

விக்கிப்பிடியா விதிகளின் படி 'புதுயுகன்' கட்டுரையை மேம்படுத்த விழைகிறேன். உதவும் மூல பக்கங்கள் யாவை என்று உதவுங்கள். நன்றி Sai160221 (பேச்சு) 10:28, 4 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஜெயப்பிரதா அல்லது ஜெயபிரதா எது சரி?

[தொகு]

செம்மைப்படுத்துதல் திட்டத்தின் மூலம் ஜெயபிரதா என்பதை மொழிபெயர்த்து வருகிறேன். இதனின் ஜெயபிரதா தற்போதைய கட்டுரை தலைப்பு என்று உள்ளது. எனக்கு ஜெயப்பிரதா/ஜெயபிரதா எது சரி? என்பதில் குழப்பமாக உள்ளது. எவரேனும் உதவுக ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:17, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Sriveenkat எனது பரிந்துரை ஜெயப் பிரதா. ஜெயபிரதா, ஜெயப்பிரதா ஆகிய வெவ்வேறு தலைப்புகளிலிருந்து ஜெயப் பிரதா கட்டுரைக்கு வழிமாற்று தரலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

தெலுங்கு மற்றும் பெரும்பான்மை மொழியிலுள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளில் அவரது பெயர், ஒரு சொல்லாகவுள்ளதால் தமிழிலும் ஜெயப்பிரதா என்று ஒரே சொல்லாகவே வரும் என்பது எனது கருத்து. ஜெயப் பிரதா எனப் பிரிந்து வராது.--Booradleyp1 (பேச்சு) 09:44, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஆம், ஒரு சொல்லாகவே வர வேண்டும். ஆங்கில மொழியில் பெரும்பாலான இந்தியப் பெயர்களை இரு சொற்களாகவே எழுதுவார்கள். ஜெயப்பிரதா தான் சரியானது.--Kanags \உரையாடுக 12:04, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@Sriveenkat: எனது பரிந்துரையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். @Booradleyp1 and Kanags: ஆகியோரின் கருத்துக்களைப் பார்த்த பிறகு, மீண்டும் ஆராய்ந்து பார்த்ததில், அவர்கள் சொல்வதுவே சரி எனப் புரிந்தது. இருவருக்கும் நன்றி! ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை மட்டும் பார்த்து எனது முடிவைச் சொல்லியிருந்தேன். 'ஒருவர் அவர் சார்ந்த மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்' என்பதனையும் கவனிக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன். இதைத் தவிர்த்து, மன்மத லீலை எனும் தமிழ்த் திரைப்படத்தில் அவரின் பெயர் ஜெயபிரதா என title cardஇல் இருப்பதால், ஜெயபிரதா எனும் தலைப்பிலிருந்து ஜெயப்பிரதா எனும் கட்டுரைக்கு வழிமாற்று தர பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:23, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
சரி, ஜெயப்பிரதா என்பதுதான் பொருத்தமானச் சொல் என்பது தெளிவாயிற்று. உரையாடலில் கலந்துக்கொண்டு உதவியமைக்கு நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:50, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஈழப்போர் எதிர்ப்புப் போராட்டங்கள் கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

[தொகு]

ஈழப் போர் / இலங்கை உள்நாட்டுப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பான எதிர்ப்புப் போராட்டங்கள் பகுப்பில் உள்ளவற்றை கலைக்களஞ்சியத்திற்கேற்ப முறையாக தொகுக்க வேண்டும். தற்போதுள்ள நிலை கலைக்களஞ்சியமற்று (சொந்தக் கருத்து, உசாத்துணைற்று) உள்ளது. கட்டுரைகளை ஒன்றாக்கியதும், அக்கட்டுரைகளை நீக்கிவிடலாம். ~AntanO4task (பேச்சு) 04:13, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

எ.கா: பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி என்ற இக்கட்டுரை செய்தியாகவே உள்ளது. இவ்வாறானவற்றை கலைக்களஞ்சியமாகக் கொள்ளவியலாது. --~AntanO4task (பேச்சு) 04:15, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
 ஆதரவு-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:20, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

புலம்பெயர் தமிழர் கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

[தொகு]

புலம்பெயர் தமிழர் தொடர்பான கட்டுரைகளை புலம்பெயர் தமிழர் கட்டுரையுடன் ஒன்றிணைக்க வேண்டும். உலக நாடுகளில் தமிழர் என்ற பகுப்பில் உள்ள பல கட்டுரைகள் கலைக்களஞ்சியமற்று (சொந்தக் கருத்து, உசாத்துணைற்று) உள்ளன. கட்டுரைகளை ஒன்றாக்கியதும், அக்கட்டுரைகளை நீக்கிவிடலாம். எ.கா: கயானாத் தமிழர் - சொந்த ஆய்வாகவும், உசாத்துணையற்றும் உள்ளது. ~AntanO4task (பேச்சு) 04:21, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:19, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

தமிழாக்கம்

[தொகு]

இரண்டு கூற்றுகள் தொடர்பாக பயனர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்கிறேன்.

அ. கட்டுரையில் பெயர் வைக்கும் போது,

  1. அதில் வடமொழி எழுத்துக்கள் இருக்கலாமா? தவிர்ப்பது நலமா? (எடுத்துக்காட்டாக யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்)
  2. ஆங்கில பெயரை தமிழில் வைப்பது சிறந்தது? மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஃபிளாஷ் டிரைவ் என்பது தகவல் சேமிப்பான் என்று இருக்க வேண்டுமா?
  3. தலைப்புகளில் புள்ளிகள் தேவையா? எடுத்துக்காட்டாக IKEA என்ற அதிகாரபூர்வ பெயர் ஐ.கே.இ.ஏ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  4. இலத்தீன் பெயர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டுமா (எடுத்துக்காட்டாக Panthera tigris )
  5. சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் பெயர்களில் ஒருமுகத்தன்மை இல்லை. எடுத்துக்காட்டாக:
  • சுக்கோய் சு-24 (சுகோய் எழுத்துப்பிழை)
  • சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ (புள்ளிகள் உள்ளது)
  • சுகோய் எஸ்யு-30

இவை கூகுளை தமிழாக்கத்தை விளைவாக அல்லது எழுதிய பயனர்கள் தெரியாமல் இவாறு வைத்திருக்கலாம்.

இவை அனைத்தும் திருத்தப்படலாமா? இதற்கு ஏதேனும் சிறப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டுமா?

ஆ. இரண்டாவது, வார்புருக்களில் (infobox)

  1. பல சொற்கள் தமிழில் மொழி பெயர்க்காமல் ஆங்கிலத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக வார்ப்புரு:Aircraft specs
  2. ஆங்கிலத்தில் உள்ளதில் சில அளவுருக்கள் (parameters) இல்லை. எடுத்துக்காட்டாக வார்ப்புரு:Company
  3. பொதுவான ஒரு கருத்து. convert வார்புருவில் சில அலகுகள் தமிழில் உள்ளன (எடுத்துக்காட்டாக அங்குலம், அடி) ஆனால் மற்ற பெரும்பாலான அலகுகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது பல கட்டுரைகளில் பயன்படுத்தப்படுவதினால், அலகுகளை ஒருமித்த தன்மைக்காக மற்றும் புரிதலுக்காக முழுவதும் தமிழில் இடலாமா?

நன்றி! Magentic Manifestations (பேச்சு) 15:09, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:பெயரிடல்_மரபு#செயலிகள்/ மென்பொருட்கள் விக்கியில் பின்பற்றப்படுகிறதா? உதாரணமாக: கூகுள் நிகழ்படங்கள், அழுகிய தக்காளிகள் போன்ற ஒரு சில கட்டுரைகளில் இது பின்பற்றப்படுவதில்லை. ஏன்? சில நிர்வாகிகளும் இதை ஏற்றுக் கொள்கின்றனர் என்று எண்ணுகிறேன் காண்க பேச்சு:அழுகிய தக்காளிகள். கையேடில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்றால் அழுகிய தக்காளிகள் கட்டுரை ரோட்டன் டொமாட்டோஸ் அல்லது ரோட்டன் டொமாட்டோசு என்றும், கூகுள் நிகழ்படங்கள் கட்டுரை கூகுள் வீடியோஸ் அல்லது கூகுள் வீடியோசு என்றும் இருக்க வேண்டும். இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல்! எவரேனும் பதிலளித்தால் நன்றாக இருக்கும். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 02:47, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

பெயரிடல் மரபுப்படி மாற்றலாம். அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் உரையாடி மாற்றுக் கருத்துஇல்லை எனில் மாற்றுவோம். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அதன்படி பெயரிடல் மரபில் இற்றைசெய்யலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:14, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

கட்டுரைகளில் புத்தக ISBN எண்ணை தரவாக சேர்ப்பது எப்படி

[தொகு]

கட்டுரைகளில் புத்தகங்களை மேற்கோளாக கொடுக்கும் போது, ஐஎஸ்பிஎன் எண்ணை எப்படி தரவாக (Source) பயன்படுத்துவது... Malaramuthan (பேச்சு) 06:58, 16 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், வெறுமனே ISBN எண்ணை மட்டும் சேர்க்காமல் பின்வருமாறு சேருங்கள்.
நீங்கள் காட்சித் தொகுப்பு (visual edit) பயன்படுத்தினால் ctrl+shift+k அழுத்தவும், கைமுறை --> நூல்--> பின்னர் உங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து மேற்கோளாக சேர்க்கலாம்.
Source edit எனில் பின்வருமாறு கொடுக்க வேண்டும். (தகவல்களை பொருத்தமாக மாற்றிக் கொள்ளவும்)
<ref name="Wankhede2009">{{cite book|author=Deepak Mahadeo Rao Wankhede|title=Geographical Thought of Doctor B.R. Ambedkar|url=https://books.google.com/books?id=1QT2oec2u3oC&pg=PA6|year=2009|publisher=Gautam Book Center|isbn=978-81-87733-88-1|pages=6–}}</ref> ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:35, 16 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நன்றி Malaramuthan (பேச்சு) 06:19, 17 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஒப்பான தமிழ்ச்சொல்

[தொகு]

@Kanags:, @கி.மூர்த்தி:, @Paramatamil:, Sociable number (en:Sociable number), Untouchable number (en:Untouchable number) இவ்விரண்டிற்கும் பொருத்தமான தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:50, 16 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Booradleyp1: இரண்டிற்கும் எனது பரிந்துரை: Sociable number - இணக்க எண், Untouchable number - தீண்டத்தகாத எண்.--Kanags \உரையாடுக 07:45, 17 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@Booradleyp1: Sociable number - இணக்க எண் Untouchable number- தகாவகுஎண் பொருந்தும் என நினைக்கிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 08:19, 17 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
இருவருக்கும் மிக்க நன்றி. மற்றொரு பெயரையும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். en:Amicable numbers என்பது விக்சனரியில் 'நட்பெண்கள்' எனத் தரப்பட்டுள்ளது. நட்பெண்கள் என்ற தலைப்பில் உருவக்கட்டுமா?--Booradleyp1 (பேச்சு) 12:43, 17 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
Amicable numbers -நட்பு எண்கள் பொருத்தமான சொல்.--Kanags \உரையாடுக 07:33, 18 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நன்றி Kanags.--Booradleyp1 (பேச்சு) 11:17, 18 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சுஷ்மிதா சென் - Pageantry - தமிழாக்க உதவி

[தொகு]

வணக்கம், நான் தற்போது சுஷ்மிதா சென் என்ற கட்டுரையைச் செம்மைப்படுத்தி வருகிறேன், இதை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் போது ஒரு பகுதியின் தலைப்பை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை, அது Pageantry என்ற சொல். தற்போது தற்காலிகமாக ஒப்பனை என்று எனது மணல்தொட்டியில் மொழிபெயர்த்துள்ளேன், அதற்கு makeup என்று பொருள். சொற்குவை அகராதியில் வண்ணமிகு காட்சி, வண்ணமிகு ஊழல் காட்சி, ஒப்பனை அணி வகுப்பு, காட்சி அணிவகுப்பு, பகட்டுக் காட்சி, ஒப்பனைக் காட்சி, ஒப்பனை அணிவகுப்பு போன்ற சொற்கள் உள்ளன தலைப்புக்கு பொருத்தமான சொல்லை தெரிவு செய்து உதவுக. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:44, 20 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

அலங்கார அணிவகுப்பு என்று தலைப்பிடலாம்--கி.மூர்த்தி (பேச்சு) 07:24, 20 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

படிமம் பதிவேற்ற உதவி தேவை

[தொகு]

இப்படம் குறித்த படிமத்தை ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு பதிவேற்ற உதவி தேவை. இப்படிமம் தற்போது தமிழ் விக்கியில் பயன்படுத்த இயலாமல் உள்ளது. சுப. இராஜசேகர் (பேச்சு) 16:11, 23 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

அரசியல் கட்சி

[தொகு]

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி என்பது உண்மையான பதிவு செய்யப்பட்ட கட்சியா? AntanO (பேச்சு) 19:13, 29 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஆம். நான் இக்கட்சியை முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒரு முறை கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. நாராயணசாமி என்பவர் இக்கட்சியின் தலைவராய் இருந்தார். திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் இக்கட்சி ஒரு முறை போட்டியிட்டது எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால், தமிழக என்ற முன்னொட்டு இல்லாமல் உழவர் உழைப்பாளர் கட்சி என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. --மகாலிங்கம் இரெத்தினவேலு 00:05, 30 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நன்றி. தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியின் இணைத்தளம் இயங்கவில்லை. முடியுமானால் இரண்டு கட்சி கட்டுரைகளையும் திருத்திவிடுங்கள். AntanO (பேச்சு) 02:30, 30 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி என்ற கட்டுரையும் உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:12, 30 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்கவை. பதிவு செய்யப்பட்டதை எவ்வாறு கண்டு கொள்வது? இந்திய அரசின் இணையத்தளங்கள் உள்ளனவா? --AntanO (பேச்சு) 04:18, 30 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

https://tnsec.tn.nic.in/tnsec_static/parties_and_symbols/2022_list_of_political_parties_symbols_upto_06012022_as_on_19012022.pdf இந்த இணையபக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கட்சிகளின் பட்டியல் உள்ளது. அதில் 79 ஆக, "அனைத்து இந்திய உழவர்கள் உழைப்பாளிகள் கட்சி " எனக் காணப்படுகிறது. --Booradleyp1 (பேச்சு) 04:31, 30 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இணைப்பு பிழை

[தொகு]

நான் அண்மையில் தொகுத்த வார்ப்புரு:Taxonomy/xyz பக்கங்களில் இணைப்புகள் சரியாக செயல்படுகின்றது. ஆனால், அந்தந்த வார்ப்புருகள் இணைக்கபட்டுள்ள பக்கங்களில் இருந்து இணைப்புகள் சரியாக செயல்படுவது இல்லை. எதில் பிழை உள்ளது என்று தெரியவில்லை. Pagers (பேச்சு) 15:37, 30 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Taxonomy/xyz என்ற வார்ப்புருவைக் காணவில்லை.--Kanags \உரையாடுக 07:23, 1 மே 2024 (UTC)[பதிலளி]
xyz என்ற இடத்தில் Mangifera, Superrosids போன்று நான் தொகுத்தவையில். தோராயமாக 30 வார்ப்புரு துணைப்பக்கத்தில். Pagers (பேச்சு) 07:48, 1 மே 2024 (UTC)[பதிலளி]
இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதினால் எப்படித் தேடுவது? எடுத்துக்காட்டுக்கு, வார்ப்புரு ஒன்றையும் அது இணைக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையையும் தந்தால் பார்க்க்லாம்.--Kanags \உரையாடுக 07:52, 1 மே 2024 (UTC)[பதிலளி]
வார்ப்புரு:Taxonomy/Plantaeமா (பேரினம்)
வார்ப்புரு:Taxonomy/Rosidsமுந்திரி குடும்பம்
வார்ப்புரு:Taxonomy/Asteridsஆப்பக்கொடி
மேலே சிலவற்றை கொடுத்துள்ளேன். Pagers (பேச்சு) 08:15, 1 மே 2024 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களில் link இல் இணைப்புக் கொடுக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:14, 1 மே 2024 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களில் link இல் இணைப்புக் கொடுத்தால் Bracket [[ ]] வருகிறது Pagers (பேச்சு) 11:52, 1 மே 2024 (UTC)[பதிலளி]
கட்டுரைகளில் வராது.--Kanags \உரையாடுக 06:41, 2 மே 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Cite book

[தொகு]

வணக்கம்! வார்ப்புரு:Cite book என்ற வார்ப்புருவை பயன்படுத்தி மேற்கோள்களை உருவாக்கிவிட்டு வார்ப்புரு:sfn பயன்படுத்தினால் குறிப்பிட்ட சரியான மேற்கோள்களுக்கு செல்வதில்லை. இதற்கு காரணம் cite book என்ற வார்ப்புரு அந்த மேற்கோளுக்கான #CITREF என்ற "anchor"-ஐ உருவாக்குவதில்லை. இதனால் வார்ப்புரு:sfn பயனற்று போகிறது. ஆங்கிலத்தில் cite book என்ற வார்ப்புரு (template:cite book) Module:Citation/CS1 என்ற module-ஐ அழைக்கிறது, ஆனால் அது தமிழில் வேறு விதமாக define செய்யப்பட்டுள்ளதால் இந்த பிழை வருகின்றது என நினைக்கிறேன். ஆங்கிலத்தை போலவே தமிழில் Citation/CS1 உபயோகப்படுத்தினால் இது சரியாகிவிடும்.

@Kanags இதை ஒரு முறை சரி பார்த்து, தயவு கூர்ந்து உங்கள் கருத்துக்களை கூறவும். Magentic Manifestations (பேச்சு) 10:10, 5 மே 2024 (UTC)[பதிலளி]

@Magentic Manifestations: ஆங்கிலப் பக்கத்தில் இருந்து முழுவதையும் தரவிறக்கினேன். ஆனால், கட்டுரைகளில் வேறு பல வழுக்கள் வருகின்றன. அதனால் எனது திருத்தத்தை மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:29, 5 மே 2024 (UTC)[பதிலளி]
@Kanags ஐயோ! Module/CS1 ஐ தொட வேண்டாம். நான் கூறியது cite book என்ற வார்ப்புருவை ஆங்கிலத்திலிருந்து பதிவிறக்கம் செய்வது. ஆங்கில மற்றும் தமிழ் Cite book வார்புருக்களை பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புலப்படும். அந்த வார்புருவில் தான் பிழை வருகிறதே தவிர Module/CS1 இல் அல்ல. நன்றி! Magentic Manifestations (பேச்சு) 10:38, 5 மே 2024 (UTC)[பதிலளி]
நிக்கித்தா குருசேவ் கட்டுரையில் sfn வார்ப்புரு சரியாக வேலை செய்வதைக் கவனியுங்கள். சில கட்டுரைகளில் மட்டும் வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 10:35, 5 மே 2024 (UTC)[பதிலளி]
ஏனெனில் அங்கு Citation என்ற வார்ப்புரு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. Citation என்ற வாப்புருவில் கூட Module/CS1 உபயோகிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை Cite book என்ற வார்புருவில் மட்டுமே. அங்கு ஆங்கிலத்தை போல Module/CS1 உபயோகப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்து விடும். மேலும், நிக்கித்தா குருசேவ் கட்டுரையில் cite book பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். citation என்ற வார்ப்புவை பயன்படுத்தியதால் ISBN அப்படியே உள்ளது (மொழிபெயர்ப்பு மற்றும் இணைப்பு இல்லாமல்). Magentic Manifestations (பேச்சு) 10:41, 5 மே 2024 (UTC)[பதிலளி]
cite book ஐ ஆங்கிலத்தில் இருந்து இற்றப்படுத்தியிருக்கிறேன். இப்போது சரியா எனப் பாருங்கள். வழுக்கள் எதுவும் வரவில்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:53, 5 மே 2024 (UTC)[பதிலளி]
ஆனாலும், இப்போதும் கட்டுரைகளில் மேற்கோள்கள் பகுதியில் hover பண்ணும்போது மேற்கோளை முன்தோற்றத்தில் காட்டவில்லை.--Kanags \உரையாடுக 11:11, 5 மே 2024 (UTC)[பதிலளி]
நன்றி! இப்பொழுது சரியாக வேலை செய்கிறது. ஆனால் அதை அழுத்தும் பொது சரியான மேற்கோளுக்கு செல்கிறது. ஆனால் ISBN பழைய படி ஆங்கிலத்தில் சென்றுவிட்டது. அதை ஒரு முறை சரி பார்க்க வேண்டும். Magentic Manifestations (பேச்சு) 12:21, 5 மே 2024 (UTC)[பதிலளி]
Module:Citation/CS1/Configuration இல் அதையும் தமிழாக்கம் செய்து விட்டேன். ஒரு முறை சரி பார்க்கவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 12:30, 5 மே 2024 (UTC)[பதிலளி]

கட்டுரையை எப்படி சரிபார்ப்பது?

[தொகு]

நான் "சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகள்" என்ற தலைப்பில் மணற்பெட்டியில் எழுதியுள்ளேன். இதில் உள்ள திருத்தங்களை எப்படி அறிவது? Lovedotedit (பேச்சு) 10:56, 17 மே 2024 (UTC)[பதிலளி]

@Lovedotedit: இதில் உங்கள் திருத்தங்களைக் காணலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 11:18, 17 மே 2024 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ஐயா, கேள்வியை தவறாக கேட்டு விட்டேன். இந்தக் கட்டுரை சரியா இருக்கிறதா? ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா? என்பதை தயவு செய்து கூறுங்கள் Lovedotedit (பேச்சு) 12:13, 17 மே 2024 (UTC)[பதிலளி]

பட்டியலைப் பெறுவது எப்படி?

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனர்களின் பெயர்களும், அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை செய்துள்ள மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கையினையும் ஒரு பட்டியலாகக் காண விரும்புகிறேன். இந்த வசதியை சென்ற மாதத்தில் பார்த்தேன். இதனை எப்படி அணுகினேன் என்பது இப்போது நினைவில் இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:59, 8 சூன் 2024 (UTC)[பதிலளி]

அனைத்து விக்கிமீடியா திட்டங்களுக்கான தரவுத் தளத்தை அடையாளங் கண்டுள்ளோம். விக்கிப்பீடியா இயங்கக்கூடிய மொழிகளைத் தேடிப் பார்த்து, தேவைப்படும் விவரங்களைப் பெறலாம்! வியப்பூட்டும் வகையில் தரவுகள் இங்கு கிடைக்கின்றன: புள்ளி விவரங்களை அலசும் பக்கம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:00, 19 சூன் 2024 (UTC)[பதிலளி]

பக்க மாற்று

[தொகு]

தவறுதலாக தலைப்பை ஏழு மாநில இடைத்தேர்தல் 2014 என்று வைத்து விட்டேன், ஆண்டை 2024 என்று மாற்றி பக்கத்தை நகர்த்த முயன்றால் அதே தலைப்பு உள்ளதென மாற்ற மாட்டேன் என்கிறது--குறும்பன் (பேச்சு) 02:55, 15 சூன் 2024 (UTC)[பதிலளி]

பக்கத்தை அழித்து புதிய பக்கத்தை உருவாக்கிவிட்டேன் குறும்பன் (பேச்சு) 19:51, 15 சூன் 2024 (UTC)[பதிலளி]

Sports, Games

[தொகு]

இவற்றிற்குரிய மிகப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகின்றன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 15 சூன் 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: sports - உடற்பயிற்சி/பந்தய விளையாட்டுகள், games - வேடிக்கை விளையாட்டுகள்/கேளிக்கை. —சுப. இராஜசேகர் (பேச்சு) 05:43, 16 சூன் 2024 (UTC)[பதிலளி]
உதவிக்கு நன்றி. ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுகளை games என்றே குறிப்பிடுகிறார்கள்: //The 2024 Summer Olympics (French: Jeux olympiques d'été de 2024), officially the Games of the XXXIII Olympiad (French: Jeux de la XXXIIIe Olympiade) and commonly known as Paris 2024//. ஒலிம்பிக் விளையாட்டுகளை வேடிக்கை விளையாட்டுகள் அல்லது கேளிக்கை விளையாட்டுகள் என கருத இயலாது. எனக்கு இன்னமும் தெளிவு கிடைக்கவில்லை! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 16 சூன் 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு உருவாக்க உதவி en:Category:Indian diplomats

[தொகு]

en:Category:Indian diplomats என்கிற பகுப்பை தமிழில் உருவாக்க எண்ணினேன். நான் பொதுவாக இந்த ஆங்கிலச்சொல்லை தூதர் என்று மொழிபெயர்ப்போம் அல்லது இராஜதந்திரி என்று கூறுவோம் இது ஒரு வடமொழிச் சொல். பகுப்பு:இந்தியத் தூதர்கள் என்று en:Category:Ambassadors of India-கான ஒரு பகுப்பு உள்ளது. ஆதலால் diplomat சொல்லுக்கு வேறொரு மொழிபெயர்ப்புத் தேவை என்று எண்ணுகிறேன். உதவுக ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:59, 3 சூலை 2024 (UTC)[பதிலளி]

@Sriveenkat இந்த உரையாடலின் அடிப்படையில், diplomat என்பதற்கு அரசியல் நிபுணர் என்பதனைப் பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:35, 3 சூலை 2024 (UTC)[பதிலளி]
அரச தந்திரி என்பது பொருந்தும்--கி.மூர்த்தி (பேச்சு) 06:06, 3 சூலை 2024 (UTC)[பதிலளி]
தந்திரி தமிழ்ச்சொல் அல்ல. //A diplomat (from Ancient Greek: δίπλωμα; romanized diploma) is a person appointed by a state, intergovernmental, or nongovernmental institution to conduct diplomacy with one or more other states or international organizations.// பேச்சு:பண்ணுறவாண்மை (diplomacy) ஐயும் பாருங்கள். இந்த உரையாடல் பக்கம் முடிவெட்டப்படாத நிலையில் உள்ளது. எனக்கென்னவோ வெளியுறவுத் தூதர் பொருந்தி வரும் போலத் தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 06:58, 3 சூலை 2024 (UTC)[பதிலளி]

பயன்கள், பலன்கள் இவற்றிற்கிடையேயான வேறுபாடு

[தொகு]

எங்கு பயன்கள் எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும்? எங்கு பலன்கள் எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும்? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:00, 15 சூலை 2024 (UTC)[பதிலளி]

விஞ்யான் ரத்னா விருது

[தொகு]

இந்திய ஒன்றிய அரசு நடப்பு ஆண்டில் இராஷ்ட்ரீய விஞ்யான் புரஷ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. விஞ்யான் ரத்னா விருது, விஞ்யான் ஸ்ரீ, விஞ்யான் யுவா போன்ற விருதுகளை அறிவித்து அறிவியலாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த விருதுகளைத் தமிழில் எழுதும் போது எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தமிழறிஞர்கள் இங்கு கூறினால் புதிதாக இவ்விருதுகள் பெற்ற அறிவிலயாளர்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 13:04, 11 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

AutoWikiBrowser பயன்படுத்துவதில் சிக்கல்

[தொகு]

AutoWikiBrowser கடந்த சில நாட்களாக KanagsBOT என்ற எனது தானியங்கிக் கணக்கில் எனக்கு வேலை செய்யவில்லை. "This user doesn't have enough privileges to make automatic edits on this wiki" என்று வருகிறது. வேறு யாருக்கேனும் பிரச்சினை உள்ளதா?--Kanags \உரையாடுக 10:13, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

ஆம். இதே சிக்கல் S. ArunachalamBot என்ற என் தானியங்கி கணக்கிற்கும் ஏற்பட்டுள்ளது. கடைசியாக ஆகத்து 7 அன்று பங்களிக்க முடிந்தது. கடைசித் தொகுப்புகள் -- சா. அருணாசலம் (உரையாடல்) 10:43, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
இது உலகளாவிய சிக்கல் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:15, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
உலகளாவிய அளவில் விக்கிதானுலாவி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விக்கிதானுலாவி பயன்படுத்தும் தானியங்கிகள் இணைக்கப்பட வேண்டும்.விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) - இங்கு செய்தியுள்ளது. AntanO (பேச்சு) 13:03, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:AutoWikiBrowser/CheckPageJSON இங்கு எனது தானியங்கியை பதிவிட்டு பின்னரும் புகுபதிகையிட முடியவில்லை. Project:Wikipedia என்று தேர்ந்தெடுக்க முடியவில்லை. அங்கு Custom என்று தான் வருகிறது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:42, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
திருத்தியிருக்கிறேன். இப்போது பாருங்கள். AntanO (பேச்சு) 17:15, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
@AntanO: உங்கள் தானியங்கியை இயக்க முடிகிறதா? இப்போதும் அதே சிக்கல். எனது தானியங்கியில் புகுபதிய முடியவில்லை.-- சா. அருணாசலம் (உரையாடல்) 02:29, 13 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
உங்கள் விக்கிதானுலாவியை இற்றை (update) செய்து பாருங்கள். அண்மைய பதிப்பு: 6.3.1.1 AntanO (பேச்சு) 06:26, 13 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
இற்றைப்படுத்திப் பார்க்கிறேன். தங்களின் உதவிக்கு நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:37, 13 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
இற்றை செய்த பிறகு வேலை செய்கிறது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:14, 15 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
CheckPageJSON இல் பதிவிட்ட பின் எனக்கு வேலை செய்கிறது. நன்றி.--Kanags \உரையாடுக 05:36, 13 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

[தொகு]

Infobox officeholder என்ற வார்ப்புருவில் Chief Minister என்பதை முதலமைச்சர் என்று மாற்றினால் Chief Minister என்றே காட்டுகிறது. தமிழில் தெரிய வைக்க வேண்டும். எப்படி செய்வது? --குறும்பன் (பேச்சு) 00:20, 18 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

@Kurumban: எந்தக் கட்டுரை என்று கூறினால் கவனிக்கலாம்.--Kanags \உரையாடுக 03:37, 18 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
ஆற்காடு வீராசாமி கட்டுரை. ஆங்கில விக்கிப்பீடியாவை பார்த்து அதிலிருப்பது போல் வார்ப்புருவை மாற்றலாம் என்று பார்த்தேன் குறும்பன் (பேச்சு) 03:14, 19 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:14, 19 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

நான் எங்கள் ஊரில் அழிவுரும் வெற்றிலை தோட்டப்பணியாளர் பயன்படுத்துசொற்களைத்தொகுத்தேன்வீந்

[தொகு]

நான் எங்கள் ஊரில் அழிவுரும் வெற்றிலை தோட்டப்பணியாளர் பயன்படுத்துசொற்களைத்தொகுத்தேன்

வீக்கிபீடீயாவில் வெளியிட்டேன் அதனை அழித்துவிட்டது அரிய சொற்களை மீண்டும் பிரசுரிப்பது எப்படி தெளிவுபடுத்தவும்.நன்றி 117.201.44.31 16:24, 9 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

எங்கள் ஊரில் அழியும் நிலையில் உள்ள நிலத்தின்பெயரினைத் தொக்லுத்தேன் அதுமீண்டும் வரவில்லை நான்மீண்டும் தொகுக்க என்ன செய்வது

[தொகு]

எங்கள் ஊரில் அழியும் நிலையில் உள்ள நிலத்தின்பெயரினைத் தொகுத்தேன் அதுமீண்டும் அழிந்துவிட்டதுவரவில்லை நான்மீண்டும் தொகுக்க என்னசெய்வது மருதநாடன் (பேச்சு) 13:44, 11 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம் இது போன்ற சொற்கள் குறித்தான பட்டியலை விக்சனரியில் சேர்க்கவும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:53, 11 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
வணக்கம் விக்சனரியில் எவவாறு சேர்ப்பது தெளிவுபடுத்தவும் மருதநாடன் (பேச்சு) 14:14, 11 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
இந்தத் தகவலுக்கு ஆதாரங்கள் இருந்தால் அறிய தாருங்கள் நன்றி. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:45, 20 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

மொழிபெயர்த்தல் சம்பந்தமாக

[தொகு]

தமிழில் 'மப்பேடு சிங்கீசுவரர் கோயில்' என்ற கட்டுரைப் பக்கத்தை உருவாக்கினேன்.

பின், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 'Mappedu Singeeswarar Temple' என்ற பக்கத்தை உருவாக்கினேன்.

இப்போது, அது மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரை என்று குறிப்பிட என்ன செய்ய வேண்டும்? பொதுஉதவி (பேச்சு) 14:03, 29 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

@பொதுஉதவி: "மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரை என்று குறிப்பிட" ஏன் விரும்புகிறீர்கள் என அறிந்துகொள்ளலாமா? அவ்வாறு குறிப்பிட எந்தத் தேவையும் இல்லை என நான் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 29 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]