உள்ளடக்கத்துக்குச் செல்

போதிசத்துவ உறுதிமொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போதிசத்துவ உறுதிமொழிகள் என்பது மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்களால் எடுத்துக்கொள்ளப்படும் உறுதிமொழிகள் ஆகும். போதிசத்துவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சம்சாரத்தில் இருந்து விடுவித்து நிர்வாண நிலை எய்த வேண்டி இவ்வாறான உறுதிமொழிகளை பூண்டுகின்றனர். போதிசத்துவர்கள் தாங்கள் மட்டும் போதிநிலை அடையாது உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்களும் அந்நிலையை எய்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்கள். எனவே எண்ணிலடங்கா நற்கர்மங்களை சேர்ப்பதற்காக இவ்வாறான உறுதிமொழிகளை எடுக்கின்றனர். இந்த நற்கர்மங்களை பிற உயிர்களுக்கு அவர்கள் போதிநிலை அடையவதற்கு உதவும் வகையில் அவ்வுயிர்களுக்கு கொடுக்கின்றனர். எனவே இந்த உறுதிமொழிகள் பிறரின் நண்மைக்காகவும் போதிசத்துவரின் அளவற்ற கருணையின் காரணமாகவும் மேற்கொள்ளப்படுபவை. இதற்கான நயமான உதாரணமாக அவதாம்சக சூத்திரத்தில் சமந்தபத்திரரின் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளலாம்.

பௌத்தர்களும் இது போன்ற உறுதிமொழிகளை தங்களுடைய ஆன்மீக பயனத்தை துவங்குவதற்காக எடுத்துக்கொள்வதுண்டு.

கீழ்க்கண்ட உறுதிமொழிகள் ஸென் பிரிவினர் எடுத்துக்கொள்வது:

ஜப்பானியம் தமிழ் சீனம்(பின்யின்) சீனம்(ஹன்ஜி)
Shi gu sei gan நாற்பெரும் உறுதிமொழிகள் Sì hóng shì yuàn 四弘誓願
Shu jo mu hen sei gan do நான் அனைத்து உயிர்களையும் சம்சாரத்தில் இருந்து விடுவிப்பதாக உறுதியளிக்கிறேன் Zhòng shēng wúbiān shì yuàn dù 眾生無邊誓願度
Bon no mu jin sei gan dan நான் அனைத்து கண்மூடித்தனமான ஆசைகளயும் துறப்பதாக உறுதியளிக்கிறேன் Fánnǎo wújìn shì yuàn duàn 煩惱無盡誓願斷
Ho mon mu ryo sei gan gaku நான் அளவில்லாமல் அனைத்து தர்மத்தின் கதவுகளையும் கடப்பதாக உறுதியளிக்கிறேன். Fǎ mén wúliàng shì yuàn xué 法門無量誓願學
Butsu do mu jo sei gan jo நான் புத்தரின் பாதையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறேன் Fó dào wúshàng shì yuàn chéng 佛道無上誓願成

பிரம்மஜால சூத்திரம்

[தொகு]

பிரம்மஜால சூத்திரத்தில் பத்து முதன்மையான உறுதிமொழிகளும் 48 ஏனைய உறுதிமொழிகளும் உள்ளன.

கீழ்க்கண்டவையே பத்து முதன்மையான போதிசத்துவ உறுதிமொழிகள்:

  1. உயிர்களை கொல்லாதிருத்தல்
  2. எதையும் திருடாதிருத்தல்
  3. பாலியல் தீ நடத்தைகைளில் பங்குகொள்ளாதிருத்தல்
  4. பொய் சொல்லாதிருத்தல்
  5. மதுவகைகளின் வணிகம் செய்யாதிருத்தல்
  6. பௌத்தர்களால் ஏற்படும் குறைகளையும் தவறுகளை பற்றி பேசாதிருத்தல்
  7. தன்னை போற்றி பிறரை சிறுமைபடுத்தாருத்தல்
  8. யாசகம் கேட்பரிடம் புண்படுத்தும் வார்த்தைகளையும் கஞ்சத்தனத்தையோ காட்டாதிருத்தல்
  9. பிறர் மீது வஞ்சம் கொள்ளாதிருத்தல்
  10. மூன்று ரத்தினங்களையும்(புத்தம், தர்மம், சங்கம்) தூற்றாதிருத்தல்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]