பௌத்த சமயமும் இந்து சமயமும்
சுமார் கிமு. 500 இல் "இரண்டாம் நகரமயமாக்கல்" காலத்தில் வட இந்தியாவின் கங்கைச் சமவெளியில் சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை தோன்றின. இவை இரண்டும் ஒரே நம்பிக்கைகள் கொண்டுள்ளது. ஆனால் வேறுபாடுகளையும் கொண்டுள்ளன..[1] இந்தியத் துணைக்கண்டத்தில் பௌத்த மதம் முக்கியத்துவம் பெற்றது, அது இந்து சமய அரசர்களால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் குப்தர் காலத்திற்குப் பிறகு வீழ்ச்சியடைந்தது, மற்றும் 11-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இது இந்தியாவின் வெளிநாடுகளில் தொடர்ந்து மக்களால் பின்பற்றப்படுகின்றது. புத்தமதம் இலங்கை, தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியா நாடுகளில் முக்கிய மதமாக உள்ளது.
புத்தர் அருளிய நிலையாமை எனும் தத்துவத்தை பெரிதும் ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரை பிரசன்ன புத்தர் (வாழும் புத்தர்) என அழைக்கப்பட்டார்.
வைணவ சமயத்தினர் புத்தரை, விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் கடந்து 11-வது அவதராமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மகாயான பௌத்த அறிஞர்கள் தங்கள் படைப்புகளை சமசுகிருதம் மொழியில் இயற்றினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Y. Masih (2000) In : A Comparative Study of Religions, Motilal Banarsidass Publ : Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0815-0 Page 18.