உள்ளடக்கத்துக்குச் செல்

மஹத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாங்கியம் கூறும் 25 தன்மாத்திரைகளில் மஹத் எனும் தன்மாத்திரை, பிரகிருதியிலிருந்து முதலில் வெளிப்படுவதாகும். இதன் பொருள் பெரியது. உயிரினங்களில் மஹத் அறிவாகத் (புத்தி) திகழ்கிறது. இதனை பேருணர்வு என்பர். பிரகிருதியை புருடனுடன் தொடர்புறுத்துவது மஹத் ஆகும். மஹத்திலிருந்து ஞானேந்திரியங்கள் மற்றும் அந்தக்கரணம் தோன்றுகிறது. அறிவு, ஆற்றல், உறுதி போன்ற பண்புகள் மஹத்தின் தன்மை ஆகும். மகிழ்ச்சி, வேதனை, மயக்கம் (மாயை) ஆகியவை மஹத் எனப்படும் புத்தியோடு தொடர்புடைவை. இவை முறையே ஒளியூட்டுதல், செயல்பட வைத்தல், தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ளது. இதன் அடிப்படையில் உயிரினங்களில் முக்குணங்கள் தோன்றுகிறது. தாமச குணம் அறியாமையைத் தருகிறது. முக்குணங்களில் சாத்விக குணம் புருச தத்துவம்|புருடனை]] முக்தி மார்க்கத்தில் வழிநடத்துகிறது. தாமச குணம் அறியாமையைத் தருகிறது. இராஜச குணம் இவை இரண்டின் மேலீட்டால் செயல்படுகிறது.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹத்&oldid=3761103" இலிருந்து மீள்விக்கப்பட்டது