கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ஆச்சாரிய வீரசேனர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணித மேதை. இவர் சமண தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு திகம்பர சாதுவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார்[1]. வீரசேனர், தென்னகத்தில் ஜைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர்[2]. இவரது மாணவர் ஜினசேனர் ஆவார்.
வீரசேனர் ஒரு கணிதவியலாளர். ஒரு திண்ம அடித்துண்டின்கன அளவு காணும் முறையைக் கண்டுபிடித்தவர். இவர் ஆய்வுசெய்த கருத்துருக்கள்: ஒரு எண்ணை எத்தனை தடவை எண் 2 ஆல் வகுக்க முடியும் -2 அடிமான மடக்கைகள் (ardhaccheda); 3 அடிமான மடக்கைகள் (trakacheda), 4 அடிமான மடக்கைகள் (caturthacheda.)[3]
ஒரு வட்டத்தின்சுற்றளவுC, விட்டம்d இரண்டுக்குமான தொடர்பைத் தரும் தோராயமான வாய்ப்பாட்டினை அளித்துள்ளார்:
C = 3d + (16d+16)/113
அதிகளவு விட்டமுடைய (d) வட்டங்களுக்கு இவ்வாய்ப்பாடு தரும் π இன் தோராய மதிப்பு:
↑Gupta, R. C. (2000), "History of Mathematics in India", in Hoiberg, Dale; Ramchandani, Indu (eds.), Students' Britannica India: Select essays, Popular Prakashan, p. 329