இலங்கையில் சமணம்
இலங்கையில் தற்போது சமண சமயம் மக்களால் பின்பற்றப்படாவிடினும், சமண சமயம் இலங்கையில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளமையை வரலாற்றிலிருந்து அறியமுடிகிறது. இலங்கையில் சமண சமயம் தொடர்பிலான தகவல்களை மகாவம்சம் வழங்குகின்றது. பண்டுகாபயன் ஆட்சிக்காலத்தில், இரு சமணத் துறவிகளான சோதியகிரி மற்றும் கும்பண்டர் ஆகிய இருவருக்கு சமணப் பள்ளிகளை அமைத்துக் கொடுத்தானென மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதன் மூலம், இலங்கையில் பௌத்த சமயத்தின் வருகைக்கு முன்னரே சமண சமயம் இருந்ததை அறிய முடிகிறது.[1] வலகம்பாகு மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஏழு தமிழ்த் தலைவர்கள் அவன்மேல் படையெடுத்தனர். வலகம்பாகு போரில் தோற்றுத் தனது தேரில் தப்பியோடும் போது தித்தாராம எனும் சமணப் பள்ளியின் வழியாகச் சென்றான். அப்போது, அப்பள்ளியிலிருந்த 'நிகண்டர்' ஒருவர் அவனைக் கண்டு சிரித்ததாகவும், இது கண்டு வருந்திய வலகம்பாகு, தான் ஆட்சிக்கு வந்தபின்னர் இப்பள்ளியை இடித்து விகாரையைக் கட்டுவேன் என எண்ணிக்கொண்டதாகவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bandara, Nilanthi, Bandara, Dammi, and Harischandra, Manoji 2017. Jaina Religion in Ancient Sri Lanka. International Conference on Buddhism and Jainism in Early Historic Asia, 16th – 17th February 2017, Centre for Asian Studies, University of Kelaniya, Sri Lanka. p 51. http://repository.kln.ac.lk/handle/123456789/16629
- ↑ Geiger, Wilhelm. "Mahavamsa - The Ten Kings". Archived from the original on 2010-04-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.