அம்பாபுரம் குகைக் கோவில்
அம்பாபுரம் சமணக் குகைக் கோவில் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அம்பாபுரம் கிராமம் விசயவாடா, ஆந்திர பிரதேசம் |
புவியியல் ஆள்கூறுகள் | 16°34′04.4″N 80°37′27.7″E / 16.567889°N 80.624361°E |
சமயம் | சமணம் |
அம்பாபுரம் குகைக் கோவில் அல்லது நெடும்பி பசதி என்பது ஆந்திரப் பிரதேச மாநிலம் விசயவாடாவுக்கு அருகிலுள்ள அம்பாபுரம் கிராமத்தில் உள்ள பாறையில் அகழப்பட்ட சமண குகைக் கோயிலாகும் .
வரலாறு
[தொகு]கிபி 7 ஆம் நூற்றாண்டில் கிழக்கு சாளுக்கியர்கள் அல்லது வேங்கி சாளுக்கியர்களின் ஆட்சியின் போது சமண சமயம் விசயவாடா பகுதியில் பிரபலமடைந்தது. கிபி 7-8 ஆம் நூற்றாண்டில், அம்பாபுரம் மற்றும் அடவினெக்கலம் (ஆங்கிலம்: Adavinekkalam) மலைகளில் மொத்தம் ஐந்து சமணக் குகைகள் அகழப்பட்டன. [1] இந்த கிராமம் சமணக் குகைக் கோவிலுக்குள் உள்ள அம்பிகா தேவியின் உருவத்திலிருந்து உருவானது. [2] எனவே இவ்வூருக்கு அம்பாபுரம்என்று பெயர்.
கட்டிடக்கலை
[தொகு]குகைக் கோவிலில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகிய மூன்று உறுப்புகள் இடம்பெற்றுள்ளன. முகப்பில் சிற்பங்கள் இல்லாத வெறுமையான சுவர்கள் மற்றும் கூரைகள் காணப்படுகின்றன. அந்தரளாத்தில் கதவின் இருபுறமும் யட்ச உருவங்கள் மற்றும் படமெடுக்கும் ஐந்து தலை நாகத்தின் கீழ் காட்சிதரும் பார்சுவநாதரின் சிலை வடிக்கப்பட்டுள்ளது.அந்தராளத்தில் அம்பிகா தேவி, எனும் காவல் தெய்வத்தின் சிற்பமும், அடையாளம் தெரியாத தெய்வத்தின் சிற்பமும் உள்ளது. மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசுவோரின் உருவங்கள் உள்ளன. [1] கருவறையின் பின்புறச் சுவரில் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலை, பீடத்தில் சிங்கத்தின் சின்னத்துடன், உள்ளது. குகைக் கோயிலில் பாறையில் வெட்டப்பட்ட சிறிய சமணத் தூபியும் உள்ளது. [2] இங்குள்ள சிலைகள் குப்ஜவிஷ்ணுவர்தனனின் (கி.பி. 624 - 641) ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். [3] [3] [4]
2019 ஆம் ஆண்டில் , விசயவாடாவின் கலாச்சார மையத்தின், 70 மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த குகைக் கோவிலின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒரு மலையேற்றத்தை ஏற்பாடு செய்தனர். [5] [6]
மேலும் பார்க்கவும்
[தொகு]- பொம்மலகுட்டா
- குல்பக்ஜி
மேற்கோள்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Varma, P. Sujata (1 October 2015). "Ancient Jain temple cries for attention". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Vijayawada/ancient-jain-temple-cries-for-attention/article7710156.ece.
- Murli, S. (13 September 2019). "Antique Jain Tirthankara idol unearthed in Prakasam". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/antique-jain-tirthankara-idol-unearthed-in-prakasam/article29669618.ece.
- TNN (13 September 2019). "Jain idol from 7th century found". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/jain-idol-from-7th-century-found/articleshow/71559984.cms.
- Express News Service (15 September 2019). "70 School students trek to Swetambara Jain rock-cut caves". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/cities/vijayawada/2019/sep/15/70-school-students-trek-to-swetambara-jain-rock-cut-caves-2033928.html.
- Hans News Service (15 September 2019). "70 students trek Ambapuram Cave in Vijayawada". The Hans India. https://www.thehansindia.com/andhra-pradesh/70-students-trek-ambapuram-cave-in-vijayawada-563996.
- "Jain sculpture of Mahavira at Vijayawada". British Library. 21 August 1815.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Ambapuram Jain cave தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.